
துபாய் : அமீரகத்தில் நவம்பர் 26 ம் தேதியன்று யு.ஏ.இ., தமிழ்ச் சங்கத்தின் சார்பில் கலையரங்கம் நிகழ்ச்சி வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. மாலை 7.30க்கு துவங்கிய நிகழ்வு நள்ளிரவு 12.30 வரை இடைவிடாத கேளிக்கையும், பொழுதுபோக்கும், உற்சாகமுமாய் நகர்ந்தது. நடனங்கள், இன்னிசைக் கச்சேரி, பலகுரல் நிகழ்ச்சிகள், கரகம் மற்றும் மேஜிக் ஷோ என பன்முகம் காட்டி பரவசப் படுத்தியது. சாந்தா கிருஷ்ணமூர்த்தி, ஷெரின், மீனா வெங்கட், நூரூதின் மற்றும் இந்திரா மோகன் தாஸ் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்வை தொடங்கி வைத்தனர். கீதா சுவாமிநாதனின் தொடக்கவுரையை தொடர்ந்து சித்ரா பிராஸ்பரின் வரவேற்புரை இடம்பெற்றது.இந்திய சின்னத்திரை கலைஞர்களும், நடனக் குழுவினரின் நடனங்களுக்கும் இடையில், யு.ஏ.இ., தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர்களின் குழந்தைகள் என நடனங்கள் அற்புதமாக அரங்கேறின. ஸ்ரீ...