அன்பு நண்பருக்கு வணக்கம்,
Visit : http://www.box.com/gulftamilnanbarkal
நமது மின்னணு நூலகத்தில் தினம்தோறும் 400 முதல் 500 DOWNLOAD தரவிறக்கம் நடைபெறுகிறது. வரும் நாட்களில் இன்னும் அதிகமான புத்தகங்கள் UPLOAD செய்ய இருக்கிறோம். நாங்கள் முன்பு சொன்னது போல இந்த நூலகத்தில் எங்களிடம் உள்ள புத்தகங்களையும் மற்றும் இணையத்தில் இருந்து கிடைத்தவற்றை தான் பதிவேற்றம் செய்து உள்ளோம். நமது நண்பர்கள் அவர் அவர்களுக்கு தேவையான புத்தகங்களை கேட்டு மின்னஞ்சல் அனுப்புகின்றனர். நீங்கள் எங்களை தொடர்பு கொள்ளவது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது, அதே நேரத்தில் எங்களால் மட்டும் உங்கள் அனைவருடைய தேவையும் பூர்த்தி செய்ய முடியும் என்று நாங்கள் நம்பவில்லை.
ஆனால் நாம் அனைவரும் இணைந்து செயல்பட்டால் நமது தேவைகளையும், நமது நண்பர்களுடைய தேவைகளை குறைந்தபட்சம் நிறைவேற்ற முடியும் என்று நம்புகிறோம். நாங்கள் இதற்க்கு முன்பு உங்களிடம் இருக்கும் புத்தகங்களை விருப்பம் இருப்பின் எங்களுக்கு அனுப்பிவையுங்கள் என்று கேட்டு இருந்தோம். ஒரு சில நண்பர்களை தவிர வேறு யாரும் அனுப்பவில்லை. எல்லோரிடமும் அவர் அவர் துறை மற்றும் வேலை தொடர்புடைய புத்தகங்கள் (PDF Format) சேமிப்பு இருக்கின்றது, அந்த புத்தங்கள் வளைகுடா நாடுகளில் பணிசெய்து வரும் வேறு ஒருவருக்கும் பயன்படலாம்.
அதனால் மீண்டும் உங்களிடம் ஒரு முறை வேண்டுகிறோம். உங்களிடம் உள்ள புத்தங்களை நீங்கள் விரும்பினால் நேரடியாக UPLOAD செய்யலாம் அல்லது எங்களுக்கு அனுப்பிவையுங்கள் நாங்கள் UPLOAD செய்கிறோம்.
எங்கள் முகவரி gulf.tamilnanbarkal@gmail.com
அன்புடன்
GTN E-Library Team
0 comments:
Post a Comment