துபாய்: துபாய் இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் (ஈமான்) மற்றும் திருச்சி வெல்கேர் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் ஆகியவை இணைந்து ஜூன் 12ம் தேதியன்று மாலை மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சியினை ரிக்கா லேண்ட்மார்க் ஹோட்டலில் வெகு சிறப்புற நடத்தின. மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ.லியாக்கத் அலி தலைமை தாங்கினார். ஏ.முஹம்மது தாஹா இறைவசனங்களை ஓதினார்.அஜ்மான் ஆரிஃபா குழும தலைவர் சுல்தானுல் ஆரிஃபின் முன்னிலை வகித்தார். ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத் வரவேற்புரை நிகழ்த்தினார். வெல்கேர் மருத்துவமனை குறித்த அறிமுகவுரையினை திருச்சி முஹம்மது கௌஸ் காஜா முஹைதீன் நிகழ்த்தினார்.
திருச்சி வெல்கேர் மருத்துவமனை மகப்பேறு சிறப்பு மருத்துவர் டாக்டர் லோகநாயகிக்கு துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் மலர்க்கொத்து வழங்கி பொதுச்செயலாளர் லியாக்கத் அலி கௌரவித்தார்.அதனைத் தொடர்ந்து குழந்தையின் முக்கியத்துவம், குழந்தை பிறப்பு குறித்த விவரங்களையும், டெஸ்ட்யூப் பேபி என்பது என்ன? என்பன உள்ளிட்ட பல்வேறு தகவல்களை விவரித்தார். கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி ஓய்வு பெற்ற தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் முஹம்மது ஹுசைன் அமீரகத்தில் மருத்துவ சேவை மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளது குறித்து பெருமிதம் கொண்டார். மேலும் அமீரகத்தில் தமிழ் உணர்வு மிக்கவர்களை சந்திப்பதில் மகிழ்வடைவதாகக் குறிப்பிட்டார். துபாய் தமிழ்ச் சங்க தலைவி ஜெயந்தி மாலா சுரேஷ், துபாய் தமிழ்ப் பெண்கள் சங்க தலைவி மீனாகுமாரி பத்மநாபன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். கீழக்கரை ஹமீதுர் ரஹ்மான் நன்றியுரை நிகழ்த்தினார். டாக்டர் பர்வீன் பானு,டாக்டர் முஹம்மது நிஸார் உள்ளிட்ட பலர் நிகழ்வில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
நமது செய்தியாளர் முதுவை ஹிதாயத்
Nandri www.dinamalar.com
0 comments:
Post a Comment