துபாய் : துபாய் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் உறுப்பினர்கள் மாதாந்திர சந்திப்பு நிகழ்ச்சி ஜூன் 24ம் தேதியன்று மாலை ஷார்ஜா ரயான் ஸ்டார் சர்வதேசப் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு துபாய் தமிழ்ச் சங்க தலைவி ஜெயந்தி மாலா சுரேஷ் தலைமை தாங்கினார். நிறுவனப் புரவலர் ஏ.லியாக்கத் அலி முன்னிலை வகித்தார்.
பொதுச்செயலாளர் சி.ஜெகந்நாதன் வரவேற்புரை நிகழ்த்தினார். கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியின் ஓய்வு பெற்ற தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பேராசிரியர் மு.அ. முஹம்மது உசேன் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார். அவர் தனது உரையில் பாலைவனத்தில் ஒரு சோலையாக தமிழ் மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து நடத்தி வரும் இவ்விழாவில் பங்கேற்பதில் பெருமிதம் கொள்வதாக தெரிவித்தார்.
மேலும் குழந்தைகள் முதல் அனைவரும் தமிழ் மொழியில் மிகுந்த ஆர்வமுடன் திகழ்வதைப் பாராட்டினார். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கட்டாயம் தமிழ் கற்றுக் கொடுக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.குறள் சொல்லும் நேரம், நாட்டிய நடனம், வினாடி வினா, நகைச்சுவை நேரம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. விருதை செய்யது ஹுசைன் கல்வியின் அவசியம் குறித்த பாடல் பாடினார். விழாவிற்கான ஏற்பாடுகளை தமிழ்ச் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர். மீரா கிரிவாசன் நிகழ்வினை தொகுத்து வழங்கினார்.
நமது செய்தியாளர் முதுவை ஹிதாயத்
Nandri www.dinamalar.com
0 comments:
Post a Comment