>ஜித்தா : சவூதி அரேபியாவில் 'ஜித்தா தமிழ் மன்றம்' சார்பில் நடைப்பெற்ற கலை மற்றும் கலாச்சார விழாவில் 500க்கும் மேற்பட்ட தமிழர்கள் குடும்பத்துடன் கலந்துக் கொண்டனர். ஜூன் 16ம் தேதியன்று ஜித்தாவில் உள்ள இந்திய துணைத்தூதரக வளாகத்தில் ஜித்தா தமிழ் மன்றம் சார்பில் நடைப்பெற்ற கலாச்சார விழா 2011, தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கப்பட்டது. காசிம் ஷெரிப் வரவேற்புரையை தொடர்ந்து ஜெய்ஷங்கர், ஜித்தா தமிழ் மன்றத்தின் வளர்ச்சிப் பற்றி பேசினார். அதனைத்தொடர்ந்து அல்உரூத் மற்றும் இந்திய பன்னாட்டு பள்ளி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஹுசைனின் நடனங்களை அனைவரும் வெகுவாகப் பாராட்டினர். சிறுவர்களான ஷாஹின் மற்றும் ஷாஹிந்தா ஆகிய உடன்பிறப்புகள் நடத்திய பிரமாண்டமான 'மாஜிக் ஷோ' சிறுவர்களுக்கு ஒரு வரப்பிராசதமாகும். மாணவ மாணவியரின் தனி மற்றும் குழு நடனத்தில் அவர்களின் திறமை வெளிக்கொணரப்பட்டது, அதுபோல் அவர்களின் பாடல்களும் நிகழ்ச்சிக்கு வலு சேர்த்தன. <BR> <p><P>ஜூன் மாதம் 03ம் தேதி ஜித்தா தமிழ் மன்றம் நடத்திய சித்திரம் வரைதல் போட்டி, தமிழ் பேச்சுப்போட்டி, தமிழில் பேசு பரிசை வெல்லு போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, தமிழ் கருத்துப்பாடல்கள் போட்டி, 'சதுரங்கம்' மற்றும் 'கேரம்' விளையாட்டுப் போட்டிகளில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்துக்கொண்டனர். இதற்கு புவனேஸ்வரி ராஜகோபாலன், பூர்ணிமா மூர்த்தி, திருமதி.ஜெரால்டோ, முத்தப்பன், முனைவர். இலக்குவன் ஆகியோர் நீதிபதிகளாக செயல்பட்டு திறமைசாலிகளை தேர்ந்தெடுத்தனர். இந்த போட்டிகளில் வெற்றிப்பெற்றவர்களுக்கு கேடயங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. அதில் பரிசு வென்ற சில மாணவர்கள், மேடையில் அவர்களின் திறமையை வெளிப்படுத்தினர். அதில் 'கல்வி' என்ற தலைப்பில் ஹசீப்,'உழவன்'என்ற தலைப்பில் அனீஸ் தமீனா,'நான் முதல்வரானால்'என்ற தலைப்பில் ஜீவானந்தன் ஆகிய மாணவர்கள் தமது தனி திறமைகளை வெளிப்படுத்தி வந்திருந்தவர்களை கவர்ந்தனர்.
ஜித்தாவில் பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் முதலிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு அவர்களை அங்கீகரிக்கும் பொருட்டு ஜித்தா தமிழ் மன்றத்தின் சார்பில் கேடயங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. சிறப்பு பேச்சாளரான ஜித்தா மன்னர் அப்துல் அஜீஸ் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை முதுநிலை விரிவுரையாளர், (நியூசிலாந்து முத்தமிழ் சங்கத்தைச் சேர்ந்த) முனைவர். இலக்குவன், ' மாணவர்களின் பங்கும் பெற்றோர்களின் கடமையும்'என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். அப்பொழுது மாணவச் செல்வங்களை எப்படி நன்முறையில் வழி நடத்திச் செல்லவேண்டும் என்று பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்கினார். அதனைத்தொடர்ந்து, கன்சுளார் (சமூக நலம்) மூர்த்தி, ஜித்தா தமிழ் மன்றத்தின் வெப்சைட்டை துவங்கி வைத்து போட்டிகளில் வென்ற மாணவ,மாணவியருக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்பொழுது நம் இந்திய துணைத் தூதரகம் செய்து வரும் சேவைகளைப் பட்டியலிட்டார். அதுபோல் நம் இந்தியர்களின் நலத்தில் ஜித்தா தமிழ் மன்றத்தின் பங்கு பற்றியும் பேசி, ஜித்தா தமிழ் சங்கம் செய்து வரும் நலத்திட்ட உதவிகளுக்கு நன்றி கூறினார்.
ஆசிரியை புவனேஸ்வரி ராஜகோபாலன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, இறுதியில் அப்துல் பத்தாஹ் நன்றியுரை கூறினார். ஜெத்தாவில் உள்ள பல்வேறு சமூகத்தினரும், பல்வேறு சங்க நிர்வாகிகளும், அல்உரூத் பன்னாட்டு பள்ளி முதல்வர் ரஹ்மத்துல்லாஹ் மற்றும் ஜித்தா துணைத் தூதரக அனைத்து அலுவலர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். வந்திருந்த அனைவர்களுக்கும் விழாக் குழுவினர்களால் அறுசுவை உணவு பரிமாறப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள், நூற்றுக்கணக்கான பெண்கள் மற்றும் ஏராளமான குழந்தைகள் கலந்துக்கொண்டனர். <BR> <p><P><STRONG><EM>- தினமலர் வாசகர் மு.இ.முஹம்மது இபுறாஹீம் மரைக்கார்
NANDRI WWW.DINAMALAR.COM/NRI
1 comments:
நல்ல பதிவு. அழகான படங்களுடன் கூடிய செய்திகள். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
Post a Comment