
7:03 AM

வளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்
No comments

சவூதி அரேபியா ரியாத்தில், மார்ச் மாதம் 26 ஆம் நாள் 'வளைகுடா செந்தமிழ்ச் சங்கம்' நிகழ்த்திய பைந்தமிழ்ப் பாவாணர் விழா சிறப்பாய் நடந்தேறியது. குடும்பத்துடன் வசிக்காத, கடினமாய் உழைத்து வாழும் தனியர்களுக்கென பிரத்தியேகமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இவ்விழா. கழியொன்றின் உச்சிமீது நெற்றியை வைத்துச் சுற்றி வருதல், நொண்டியடித்தல், குறிபார்த்து அடித்தல், உப்பல் ஊதுதல் என்ற விளையாட்டுகளில் பலரும் ஆர்வமுடன் பங்கேற்றுப் பரிசுகள் பெற்றனர். ஆங்கில மொழி வார்த்தைகளைக்கு இணையான தமிழ் வார்த்தைகள் மட்டுமே பேசவேண்டும் என்ற விதிமுறையுடன் நடந்த 'தமிழ் பேசு' என்ற விளையாட்டும் பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தது. பழமொழி வாக்கியத்தின் வார்த்தைகளைச் சரியான வரிசையில் அடுக்குதல் - இந்த விளையாட்டிலும் மிகுந்த ஆர்வத்துடன் பலரும் பங்கேற்றனர். 'சிரித்து வாழ வேண்டும்'...