மண் வாசம்
மாற்றம் பல கண்டு ,
மாநகரின் மாடிவீட்டுவாசி ஆனாலும் ,
மறக்க முடியுமா ?
மழலையில் மனம் களித்த,
கிராமத்தின் மண் வாசம்...!
அது மரணம் வரை
மறக்க முடியா பூ வாசம் ...!
மழையின் மண் வாசம் ..!
அன்புடன்
ராஜேஷ் பாலா
(Member of our Gulf Tamil Nanbarkal Group)
1 comments:
அன்பு நண்பா கவிதை அருமை,
கிராமத்தில் பிறந்த எல்லோருக்கும் இந்த ஏக்கம் இருக்கத்தான் செய்கிறது.
எத்தனை வசதிகள் இருந்தும் நம் கிராமத்து மண்ணில் கடந்து புரண்டது எல்லாம் திரும்ப வருமா?
எல்லா கிராமத்து மண்ணும் தன் மகன் கிராமத்தை விட்டு வெளியில் படிக்க போகும் போதும், வெளியில் வேலைக்கு போகும் போதும் எந்த மகனாவது தன் வாழ்க்கையிலும் தன்னுடைய மக்களின் வாழ்க்கையிலும் மாற்றத்தை கொண்டு வருவானா என்று ஏங்குகிறது.
ஆனால் கிராமத்தை விட்டு வெளியில் சென்றவர்கள் எல்லோருடைய வாழ்க்கையிலும் மாற்றம் வந்துவிட்டது. ஆனால் கிராமம் அப்படியே இருக்கிறது. காலபோக்கில் அவர்கள் கிராமத்தையும் மறந்து விட்டார்கள்.
அதனால், நீ பிறந்த கிராமத்துக்கு ஏதும் செய்யா விட்டாலும், மீண்டும் ஒருமுறை சென்று பார்த்து வா, நீ ஓடி ஆடிய மண், நீ கடந்து புரண்ட மண், நீ நண்பர்களுடன் கட்டி புரண்ட மண்.
தன் மகன் இன்று பெரிய மனிதானாக வளர்ந்து நிற்பதை பார்த்தல் உங்கள் சொந்தங்களை விடவும் அதிக சந்தோசப்படும்.
அன்புடன்
ரத்தினம் பத்மநாபன்
Post a Comment