அபுதாபி : அபுதாபியில் ஏப்ரல் 30ம் தேதியன்று மேலப்பாளையம் பகுதியில் பிரிமியர் லீக்கின் சார்பில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. பரபரப்பான இறுதிச்சுற்று போட்டியில் இடிஏ மெல்கோ அணி, மேலப்பாளையம் எம்எம்சிசி அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று வின்னர் கோப்பையை தட்டிச் சென்றது. வின்னர் கோப்பையை அந்த அணியின் கேப்டன் ஜனாப் ஷேக்கிற்கு, ஜனாப் முகம்மது ரிஸ்வான் பிரைம் டெக் வழங்கினார். எம்எம்சிசி அணிக்கு ரன்னர் கோப்பை வழங்கப்பட்டது. ரன்னர் கோப்பையை எம்எம்சிசி அணியின் கேப்டன் காஜா ஈடிஏவிற்கு ஜனாப் முகம்மது ரிஸ்வான் பிரைம் டெக் வழங்கினார்.
அரைஇறுதி மற்றும் இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடி இரண்டு அரைசதங்கள் அடித்த மேலப்பாளையம் எம்எம்சிசி அணியின் காஜா முகைதீன் இந்தத் தொடரின் சிறந்த பேட்ஸ்மேனாக அறிவிக்கப்பட்டார். அவருக்கு ஏ.தனஜயன், ஈடிஏ மெல்கோ மேனேஜர் சார்பில் மேலப்பாளையம் முஸ்லிம் ஜமாஅத் பொருளாளர் ஜனாப் தப்ரே ஆழம் பாதுஷா பரிசை வழங்கினார். மேலும் அதே அணியின் சிவராஜ் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி சிறந்த பவுலராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு எஸ்.கிருஷ்ணன், ஈடிஏ மெல்கோ துணை பொது மேலாளர் சார்பில் ஜனாப் செய்யது பரிசை வழங்கினார்.
விழா முடிவில் இந்த தொடரை சிறப்பாக நடத்திய ஜனாப் காஜாவிற்கு பாராட்டும் நன்றியும் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த தொடரில் பங்குபெற்று சிறந்த ஒத்துழைப்பு அளித்த அனைத்து அணியினருக்கும் மற்றும் நடுவர்களுக்கும் பாராட்டும் நன்றியும் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த தொடரில் கோப்பையை கைப்பற்றிய ஈடிஏ மெல்கோ அணிக்கு மேலப்பாளையம் முஸ்லிம் ஜமாஅத் சார்பாக பாராட்டு தெரிவிக்கப்பட்டது. விழா நிகழ்ச்சியை ஜனாப் இல்யாஸ் கமால் தொகுத்து வழங்கினார்.
நமது செய்தியாளர் முதுவை ஹிதாயத்
Nandri : www.dinamalar.
0 comments:
Post a Comment