துபாய் : துபாயில் மருத்துவ விழிப்புணர்வு மற்றும் நகைச்சுவை நிகழ்ச்சி ஆகியன அக்டோபர் 14ம் தேதியன்று மாலை நாசர் ஸ்கொயர் லேண்ட்மார்க் ஹோட்டலில் நடைபெற்றது. வளைகுடா தமிழர் அமைப்பின் நிறுவனர் எஃப்.எம்.அன்வர் பாஷா தலைமை தாங்கினார். சபீர் வரவேற்றார். பிரைம் மெடிக்கல் சென்டரின் நரம்பியல் சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் ராஜரத்தினம் மருத்துவ விழிப்புணர்வு உரை நிகழ்த்தினர். அவர் தனது உரையில் சிறுவர் முதல் பெரியவர் வரை ஏற்படும் நரம்பியல் நோய்கள் குறித்து வீடியோ விளக்கப்படங்களுடன் விவரித்தார். அத்தகைய சூழ்நிலையில் மருத்துவரின் உதவியை நாடவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். நகைச்சுவை நடிகர் பாண்டு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தனது நகைச்சுவையின் மூலம் பார்வையாளர்களுக்கு நகைச்சுவை விருந்தளித்தார். அவர் தனது உரையில் கடல்...