
அமீரகத் தமிழ் மன்றத்தின் சார்பில் பெண்கள் மட்டுமே பங்கு கொண்ட மகளிர் தின விழா நிகழ்ச்சி கவிஞரும், தமிழ் திரைப்பட பாடலாசிரியருமான தாமரை தலைமையில் துபாயில் வெகு சிறப்பாக அரங்கேறியது. மகளிர் பாடல் குழுவினரின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய நிகழ்ச்சியில் புதிய மெட்டில் குழந்தைகள் பாரதியார் பாடல்களைப் பாடினர். சியாமளா சிவகுமாரின் வரவேற்புரையை தொடர்ந்து பிரசித்தம் குழுவினர் வரவேற்பு நடனத்தை நிகழ்த்தினர். 'பெண் கல்வியின் அவசியத்தை' வலியுறுத்தி ரேணுகா குழுவினர், வில்லுப்பாட்டு நிகழ்ச்சியை வழங்கினர்.அதனைத் தொடர்ந்து நிவேதிதா ஆனந்தன் குழுவினரின் நடனமும், அமீரக மேடைகளில் முதன் முறையாக சிறுமியர் சிலம்பாட்டம் ஆடியதும் பார்வையாளர்களுக்குப் பெரும் வியப்பை ஏற்படுத்தியது. முன்னதாக கவிதா பிரசன்னா...