துபாய் : துபாய் தமிழ்ச் சங்கம் சார்பில் செப்டம்பர் 30ம் தேதியன்று ஷார்ஜா ரயான் சர்வதேசப் பள்ளியில் காந்தி ஜெயந்தி மற்றும் பாரதியார் விழா சிறப்புற நடத்தப்பட்டது. துவக்கமாக அமீரக தேசிய கீதம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. சிரியா மற்றும் விபீஷ் ஆகியோர் திருக்குறளை வாசித்து அதன் பொருளை விவரித்தனர்.
காந்தியடிகள் குறித்து சுப்ரஜாவும், பாரதியார் குறித்து வசந்த்தும் சிற்றுரை வழங்கினர். பொதுச்செயலாளர் சி. ஜெகந்நாதன் வரவேற்புரை நிகழ்த்தினார். வரவேற்பு நடனத்தை இளவரசனின் மகள் வழங்கினார். சந்திரா குழுவினரின் கூட்டுப் பிரார்த்தனை இடம் பெற்றது. அதனைத் தொடந்து நடன ஆசிரியை கவிதா பிரசன்னாவின் வடிவமைப்பில் சிறுவர் நடனம், பாடல் நிகழ்ச்சி, வினாடி வினா, புதிய உறுப்பினர் அறிமுகம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.
நவம்பர் 4ம் தேதி துபாய் தமிழ்ச் சங்கத்தின் பத்தாம் ஆண்டு விழாவினையொட்டி நடத்தும் பிரமாண்ட நிகழ்வில் லியோனி பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற இருப்பதை பொழுதுபோக்குத் துறை செயலாளர் ஏ.முஹம்மது தாஹா தெரிவித்தார். மேலும் சிறப்பு மலரில் உறுப்பினர்களது படைப்புகளும் வரவேற்கப்படுகின்றன.
பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் புதிய உறுப்பினர்கள் இளவரசன், டாக்டர் இளங்கோ உள்ளிட்டவர்களுக்கு பூங்கொத்துகளை வழங்கி கௌரவித்தார், துபாய் தமிழ்ச் சங்க தலைவி ஜெயந்தி மாலா சுரேஷ். கமிட்டி உறுப்பினர் விஜயேந்திரனின் நன்றியுரை மற்றும் தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. நிகழ்வினை மீரா கிரிவாசன் தொகுத்து வழங்கினார்.
- நமது செய்தியாளர் முதுவை ஹிதாயத்NANDRI WWW.DINAMALAR.COM
0 comments:
Post a Comment