Google Plus LinkedIn Email

Monday, October 27, 2014

வரி கேட்கும் மத்திய அரசுக்கு ஒரு சகோதரனின் ஆதங்க கேள்விகனைகள்.... முகநூலில் சுட்டது

வரி கேட்கும் மத்திய அரசுக்கு ஒரு சகோதரனின் ஆதங்க கேள்விகனைகள்....

  1. எங்களுக்கு இலவச பாஸ்போர்ட் கொடுத்தாயா....?
  2. இல்லை வெளிநாட்டு வேலைக்கு விசா வாங்கி கொடுத்தாயா ...?
  3. இல்லை நாங்கள் நகைகளை,வீட்டு பத்திரத்தை அடகு வைத்து,கடன் வாங்கி இரண்டு முறை ஏஜெண்டுகளிடம் ஏமாந்து மீண்டும் விசா வாங்கியதால் இலவச விமான டிக்கெட் தான் கொடுத்தாயா...?
  4. இங்கு வந்து ஓசியில் ஒண்டிக்கொண்டு இகாமா(ID card) இல்லாமல் பதுங்கி வாழ்ந்த போது உதவி செய்து இகாமா வாங்கி கொடுத்தாயா...?
  5. இல்லை அடுத்த வேலை சோத்துக்கு காசு இல்லாமல் ஒவ்வொரு ரூமாக சென்று சாப்பாட்டிற்கு அலைந்த போது ஒரு வேலை சோறு வாங்கி கொடுத்தாயா....?
  6. இல்லை பைலை எடுத்துக்கொண்டு தெரு தெருவாக வேலை தேடி அலைந்த போது வேலை வாங்கி கொடுத்தாயா...?
  7. இல்லை வேலை தேடி அலைந்த போது ஒரு பாட்டில் தண்ணீர் வாங்கி குடிக்க வழி இல்லாத போது தண்ணீர் வாங்கி கொடுத்து தாகம் தனித்தாயா...?
  8. இல்லை கபில்(Owner / Sponsor) பணம் வேண்டும் என்று எங்களை கொடுமை படுத்திய போது எங்கள் கபிலிடம் பேசி எங்கள் பிரச்சனையை தடுத்தாயா....?
  9. இல்லை எத்தனையோ படித்த இந்தியர்கள் ஆடு,ஓட்டகம் மேய்த்து கொண்டும்,வீட்டு வேலை செய்து கொண்டும்,கட்டிட,விவசாய வேலை செய்து கொண்டும் இருக்கிறார்களே அவர்களுக்கு படிப்புக்கு ஏற்ற வேலை வாங்கி கொடுத்தாயா...?
  10. இல்லை எஞ்சினியரிங் படித்து விட்டு இங்கு பெட்ரோல் பம்பில் பெட்ரோல் போடுகிறானே என் இந்திய ஏழை குடிமகன் அவனுக்கு படிப்புக்கு ஏற்ற வேலை வாங்கி கொடுத்தாயா...?
  11. இல்லை எதோ வந்து விட்டோம் கடனை அடைத்து விட்டு சென்று விடுவோம் என்று ஏக்கத்தில் இரவு பகல் பார்க்காமல் உழைக்கிறானே அவனது கடனை அடைத்து தாயகம் அழைத்து சென்றாயா...?
  12. இல்லை அரபி தெரியாமல் அரபிகாரனோடு போட்டி போட்டு கஷ்டப்பட்டு உழைக்கிறோமே எங்களுக்கு அரபி எழுத படிக்க கற்று கொடுத்தாயா....?
  13. இல்லை இந்தியாவில் இந்தியர்களிடம் மட்டும் தான் போட்டி போட வேண்டும்,வெளிநாடுகளில் எல்லா நாட்டு மக்களிடம் போட்டி போட்டு உழைக்கிறோமே அதனை நினைத்து பார்த்தாயா....?
  14. இல்லை நாங்கள் உடம்பு சரி இல்லை என்று டாக்டரிடம் அழைத்து செல்ல ஆளில்லாமல் அனாதையாக ரூமில் படுத்து இருந்த போது மருத்துவமனை அழைத்து சென்று மருத்துவம் பார்த்தாயா...?
  15. இல்லை ஊருக்கு வரும் போது இங்கு கடன் வாங்கி அங்கு வருகிறோம்,அங்கு வந்தும் கடன் வாங்குகிறோம்,இங்கு திரும்பி வரும் போதும் கடன் வாங்குகிறோமே அந்த கடன்களை அடைத்தாயா...?
  16. இல்லை பாஸ்போர்ட் தவிர எங்களுக்கு வேறு ஏதாவது ஒரு அடையாளம் உண்டா,அடையாள அட்டை தான் உண்டா அதனை கொடுத்தாயா...?
  17. இல்லை இங்கே நாங்கள் செத்து போனால் கூட ஏன் என்று கேட்க ஒரு நாதி உண்டா,,,நண்பர்களை தவிர, அதற்கு ஒரு ஏற்ப்பாடு செய்து கொடுத்தாயா தூதரகம் மூலம்...?
  18. இல்லை இன்னைக்கே வேலை இல்ல இந்தியா போ என்று சொல்லி விட்டால்,நாங்கள் இந்தியா வந்தால் எங்களுக்கு வேலை வாய்ப்பு உண்டா,வாழ்வு உண்டா...?
  19. இல்லை இப்படி வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்காக ஒரு துரும்பை கூட கில்லி போடாத போது எப்படி எங்களிடம் இருந்து 12.36% வரி எதிர்ப்பார்க்கலாம்,நாங்கள் அனுப்பும் பணத்தில் கிடைக்கும் அந்நிய செலாவணிக்கு நீங்கள் அல்லவா எங்களுக்கு வரி தரவேண்டும்.யோசியுங்கள் வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் சாபத்தை விலை கொடுத்து வாங்காதீங்க

நன்றி முத்துப்பேட்டை முகைதீன்
முகநூலில் சுட்டது

-

NANDRI :

P.Edward Jeni
+91 9443002949
info@edwardjeni.com
edwardjeni@gmail.com

 

 

0 comments:

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons