Google Plus LinkedIn Email

Sunday, May 2, 2010

வாழ்த்தி ,விடை கொடுங்கள் சகோதரர்களே..

படித்து முடித்து

பறக்க துடித்து,

சிறகொடிந்து வீழ்ந்த காலம்..

பறக்க துடித்து ,

இறக்க துணிந்து ,

ஈராக் வந்த காலம் ...

பயந்து,பயந்து

பணத்திற்காக

உழைக்கும் கோலம்,...!

உற்று பார்த்தால்,

உணரும் இதன்

கோரம்...!

 

சொந்த வீடு

காலம் முழுதும் களித்திருக்க ,

கவலை மறந்து கண்ணுறங்க ,

கட்ட வேண்டும் சொந்த வீடு...!

கல்லாலான கட்டிடமாய் அல்ல ,

மனங்கள் மணம் கமழும் மனையாக வேண்டுமது ...!

சந்தோழ சன்னதியது...!

 

அனைவரும் அமர வேண்டும் ,ஒரு இடம்..

சமைப்பதோடு ,சாப்பிடவும் வேண்டும் ,ஒரு அறை..

படுத்தவுடன் உறக்கம் வர வேண்டும் ,ஒரு அறை..

அனைத்து அறைக்கும்,பொது அறையாய் வேண்டும் ,கழிவறை  ...

வாசலோடு ,வாகனத்திற்கும் வேண்டும் ,ஒரு நிழல் ..

நிழல் தந்த இறைவனுக்கும் நீங்கா இடம் வேண்டும் ..,

 

சிறு வீடானாலும் ,சிறப்பாக அமைய வேண்டும் ..

அதனையும் ,அழகுடனே அமைக்க வேண்டும் ...!

 

நினைத்தபடி அமையாவிட்டால் ,அதை ஏற்கும் மனம் வேண்டும் ..

அனைத்திற்கும் அந்த இறைவன்தான்

அருள வேண்டும்.....!

 

இரை தேடி பறந்த பறவைகள்

இரவில் கூடும் கூட்டில் ,

பணம் தேடி பறந்த நாமோ

ஒரு நாள் கூடுவோம் ,

தாய் தமிழ் நாட்டில்...!

 

அன்புடன் ,

சொந்த ஊர் செல்லும் கனவில் மிதக்கும் ,

ராஜேஷ் பாலா ...

1 comments:

Anonymous said...

அன்பு நண்பன் பாலாவுக்கு,

முதலில் உங்களது கவிதை அருமை. நேரம் கிடைத்தால் எழுதுங்கள் பாலா.

முதல் வாழ்த்து என்னிடம் இருந்து என்று நினைக்கிறேன்.

.நாங்கள் எல்லாம் ஈராக் என்றல் பயந்து கொண்டு இருக்கும் பொது நீங்கள் மட்டும் தைரியமாக அங்கு பணிக்கு சென்று இருக்குறீர்கள். உங்களுக்கு எங்களது வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.
நீங்கள் இராக்கில் பணிசெய்த காலங்கள் எத்தனை கஷ்டம் என்பது நாங்களும் அறிவோம். முடிந்தால் நீங்கள் எடுத்த புகைப்படங்கள் இருந்தால் எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

விடுமுறைக்கு தாயகம் செல்லும் உங்களது பயணம் சந்தோசமாக அமைய எங்கள் எல்லாருடைய வாழ்த்துக்களும் பிராத்தனையும்.

நீங்கள் தமிழகத்துக்கு வந்துடன், உங்களை தொடர்பு கொள்ள தொலைபேசி என்னை கொடுத்தல் நண்பர்கள் தொடர்பு கொள்ள வசதியாக இருக்கும்.

அன்புடன்
பத்மநாபன்

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons