அபுதாபி : அபுதாபி தமிழ் மகளிர் வட்டத்தின் சார்பில் ஏப்ரல் 29ம் தேதியன்று 10வது ஆண்டாக தமிழ்ப் புத்தாண்டு விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. 10வது வருட தமிழ்ப் புத்தாண்டு விழாவிற்கான ஏற்பாடுகளை நிர்வாகத் தலைவி மீனா வெங்கடேஷ் மற்றும் சங்க உறுப்பினர்கள் மல்லிகா, செண்பகவல்லி, பானு, சுதா, விஜி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
இந்திய சோஷியல் ஆடிட்டோரியத்தில் பாட்டு, ஓவியம், நடனம் மற்றும் சமையல் போட்டிகள் நடத்தப்பட்டது. அமீரகத்தில் உள்ள அனைத்து தமிழ்ச் சங்கத்தின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் இவ்விழாவின் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு தமிழ் மகளிருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். சிறப்பு விருந்தினர்களுக்கு அபுதாபி தமிழ் மகளிர் வட்டத்தின் சார்பில் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
போட்டிகளில் வெற்றி பெற்ற மகளிருக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் தமிழ் பாரம்பரிய உணவுகள் பகல் விருந்தாக அளிக்கப்பட்டது.
நமது செய்தியாளர் ரவி
1 comments:
இனிய நற்செய்தி. வாழ்த்துக்கள்.
2004 ஆம் ஆண்டு துபாய், அபுதாபிக்கு வந்துள்ளேன். துபாய் தமிழ்சங்க நிகழ்ச்சிகளில் (ஆண்டு விழாவில்) பங்கு கொண்டுள்ளேன். மறக்க முடியாத தமிழ் பேசும் நண்பர்கள். மலரும் நினைவுகள் என்றும் என் மனதில் மிகவும் பசுமையாக.
அன்புடன்,
வை.கோபாலகிருஷ்ணன்
Post a Comment