துபாயில் 2 ஆம் உலகத் தமிழர் பொருளாதார மாநாடு
துபாய் உலக வர்த்தக மையத்தில் இரண்டாம் உலகத் தமிழர் பொருளாதார மாநாடு 1 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை வெகு சிறப்புற நடைபெற்று வருகிறது.
இன்று 02.10.2011 அன்று காலை நடைபெற்ற துவக்க விழாவில் மாண்புமிகு மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி அவர்கள் மாநாட்டினைத் துவக்கி வைத்து விழாப் பேருரை நிகழ்த்தினார்.விழாவில் மலேசியாவின் முன்னாள் அமைச்சர் டத்தோ சாமிவேலு, இந்திய தூதர் எம்.கே. லோகேஷ், இந்திய கன்சல் ஜெனரல் வேணு ராஜாமணி, ஈடிஏ அஸ்கான் மேலாண்மை இயக்குநர் சையத் எம். ஸலாஹுத்தீன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம். அப்துல் ரஹ்மான் ( வேலூர் ), அழகிரி ( கடலூர் ), ராஜ்யசபா உறுப்பினர் ஜின்னா, மலேசிய துணைத் தூதர் சம்சுதீன்,தோஹா வங்கி தலைமை நிர்வாக அதிகாரி சீத்தாரமன், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர். இலட்சுமணன், இந்தியா கிளப் சேர்மன் சித்தார்த் பாலச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து பல்வேறு கருத்தரங்குகள் நடைபெற்றன.இந்தியா, மலேஷியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் இருந்து பிரமுகர்கள் பங்கேற்றுள்ளனர்.அமீரக வாழ் தமிழர்கள் இம்மாநாட்டில் பங்கேற்றுச் சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இம்மாநாட்டில் கலந்து கொள்ள விரும்புவோருக்கு ஈமான் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.மாநாட்டில் பங்கேற்க பங்கேற்க விரும்புவோர் 050 51 96 433 / 050 467 4399 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு இலவச அனுமதிச் சீட்டுகளைப் பெறலாம்.
1 comments:
FOR MORE INFORMATION
http://economic-conference.in/index.html
Post a Comment