அன்பு நண்பர்களுக்கு,
வணக்கம்.
தமிழ் விக்கிப்பீடியா என்ற அறிவு பெட்டகத்தை மற்ற முன்னணி மொழிகளுக்கு இணையாக உருவாக்க நம் உறவுகள் இரவு பகல் பாராது தங்கள் பங்களிப்பை தானே முன்வந்து கொடுத்து வருகிறன்றனர் என்பது உங்களுக்கு தெரிந்து இருக்கும். இதை அவர்கள் ஒரு தன்னார்வ பணியாக செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் இந்த வர விக்கிப்பீடியர் ஆக அறிமுகம் ஆகி இருப்பவர் நம் சொந்தம் துபையில் பணிசெய்து வரும் ஹிபாயத்துல்லா என்பதை அறியும் பொழுது நமக்கு கூடுதல் சந்தோசம்.
அவர்களுடைய பணி வெற்றிபெற நம் குழுமத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவிப்போம்.
நம் தமிழ் நண்பர்களை தமிழ் wikipediyavai பயன்படுத்த வேண்டுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
நேரமும் திறமையும் உள்ள நம் நண்பர்கள் தங்கள் பங்களிப்பையும் வழங்கலாம்.
இந்த வலைதளத்தை சென்று பாருங்கள்
ஹிபாயத்துல்லா, தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தைச் சேர்ந்தவர். தற்போது துபாயில் பணிபுரிந்து வருகிறார். இதழியல் அனுபவம் உள்ள ஹிபாயத்துல்லா, 2008ஆம் ஆண்டு முதல் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களிக்கிறார். இசுலாம், வரலாறு, அரசியல், தமிழ்நாட்டு ஊர்கள், தமிழக நபர்கள் பற்றிய கட்டுரைகளை எழுதுவதோடு விக்கியாக்கப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். தமிழகத்தில் இசுலாமியர் ஆட்சி, தமிழ் முஸ்லிம்கள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், தமிழ்நாடு வக்பு வாரியம், கா.காளிமுத்து, இராம. வீரப்பன் ஆகியவை இவர் முதன்மையாக பங்களித்த கட்டுரைகளில் சில.
0 comments:
Post a Comment