19 மார்ச் 2010
அன்பு நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தங்கள் அனைவரையும் இந்த அஞ்சல் வழியாக தொடர்பு கொள்ளுவதில் மிக்க சந்தோசம். நண்பர்கள் அனைவரும் நம் குழுமத்திற்கு வழங்கிவரும் ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி.
அடுத்த முயற்சியாக நம் குழுமத்திற்கு என்று தனியாக ஒரு வலைப்பதிவை ஆரம்பித்து இருக்கிறோம். குழுமத்தில் உள்ள நண்பர்கள் சிலர் வந்து பார்த்து சென்று இருக்கிறார்கள். குழுமத்தில் உள்ள நண்பர் யாரு என்று தெரியவில்லை ஆனால் நண்பர் www.tamil.net வலைத்தளத்தில் செய்தியிட்டு விளம்பரபடுத்தி உள்ளார். அதனால் உலகம் முழுவதிலும் இருந்து நம் உறவுகள் வந்து நம் வலைப்பதிவை பார்வையிட்டு சென்று உள்ளார்கள். நண்பருக்கு குழுமத்தின் சார்பாக நண்பருக்கு நன்றியையை உரித்தாக்குகிறோம்.
வலைப்பதிவை நிர்வாகிக்கும் நண்பருக்கு தனியாக மெயில் ID உள்ளது. அதனால் நண்பர்கள் அனைவரும் தங்களுடைய சொந்த படிப்புகளை நிர்வாகிக்கு அனுப்பிவைக்கவும். அவை உடனுக்குடன் நம் வலைபதிவில் வெளியிடப்படும்.
நண்பர்கள் கீழேயுள்ள தலைப்புகளில் தங்கள் படைப்புகளை நிர்வாகிக்கு அனுப்பிவைக்கலாம்.
Administrator E-mail ID: gulf.tamilnanbarkal@gmail.com
Blog Website Address : http://gulftamilnanbarkal.blogspot.com
- வளைகுடா நாடுகளில் தமிழர் வாழ்க்கை பற்றிய கவிதைகள்.
- வளைகுடா நாடுகளில் தமிழர் வாழ்க்கை பற்றிய கட்டுரைகள்.
- வளைகுடா நாடுகளின் புகைப்படங்கள் மற்றும் விபரங்கள்.
- நம் தமிழக நகரம் மற்றும் கிராமக புகைப்படங்கள்.
- வளைகுடா நாடுகளில் நடைபெறும் தமிழர் நிகழ்ச்சிகள் பற்றிய செய்திகள் மற்றும் புகைப்படங்கள்.
- வளைகுடா நாடுகளில் உள்ள பகுதிகளை பற்றிய அறிமுகம் மற்றும் அங்கு உள்ள தமிழர் நிறுவனங்கள் பற்றிய செய்திகள் மற்றும் புகைப்படங்கள்.
- வளைகுடா நாடுகளில் உள்ள தமிழர் அமைப்புகள் பற்றிய விபரம் மற்றும் புகைப்படங்கள் (புதியதாக வருபவர்களுக்கு உதவியாக இருக்கும் என்பதால்).
- சுயவிருப்பம் இருந்தால் தனிநபர் பற்றிய விபரங்கள் வெளியிடலாம் தங்கள் புகைப்படம் மற்றும் தொலைபேசி இலக்கத்துடன் (புதியதாக வருபவர்களுக்கு எதாவது பிரச்சனை என்றால் அது அவர்களுக்கு உதவியாக இருக்கும் என்ற எண்ணத்தில் சொல்லுகிறோம்).
அன்புடன்
Blog Team for Gulf Tamil Nanbarkal
0 comments:
Post a Comment