காவிரியும் பெரியாறும்
கை விட்ட தமிழன்
கனவும் கற்பனையுமாய்
காணா பொன்தேடி
ஏகாந்த விடுமுறையில்
பூட்டிய உள்ளறையில்
தொலைக்காட்சி உற்ற தோழனாக
சிந்தையை நிரப்பிடினும்
மாற்றம் தேடுவது மனித இயல்பு
மாறும் பாலைவனத்தின்
மாறா எழிலை தரிசிக்க
ஆகர்ஷணம் ஆபத்தா ?
வழிதொலைந்த பயணத்தின்
வாகனமும் உடன் வரமறுக்க
எரிக்கும் சூரியனின்
கொதிக்கும் தாயாக பூமியும்
தாகமே தலை காலாக
எப்போதோ பருகிய நீர்
சற்றேனும் இப்போது
தாகசாந்தியாக மறுக்க
கானல் நீர் கூட காத தூரத்தில்
கலைந்து கொண்டே இருக்க
எல்லாமே கைவிட்ட என்னை
ஏற்றுக்கொள்ள மரணம் மட்டும்
நன்றியுடன், குளச்சல். மலுக்கு.
0 comments:
Post a Comment