Tuesday, March 29, 2011
Friday, March 25, 2011
அபுதாபியில் இசை வடிவில் திருக்குறள்
அபுதாபி : பிரபல பின்னணி இசை அமைப்பாளர் பரத்வாஜ் தமிழ் பொதுமறை திருக்குறளுக்கு இசையமைக்கும் முயற்ச்சியில்.ஈடுபட்டுள்ளார். அவர் இசையமைத்து வரும் திருவள்ளுவரின் 1330 குரளுக்கும் உலகெங்கும் உள்ள 1330 பாடகர்களைக் கொண்டு பாடவைக்கும் ஒரு மாபெரும் முயற்ச்சியில் இறங்கி உள்ளார்.
இதன் முதற்கட்ட ஆயத்தப்பணிகளை அபுதாபி 'பாரதி நட்புக்காக' அமைப்புடன் இணைந்து கடந்த 10ம் தேதி தொடங்கியுள்ளார். அபுதாபி வந்திருந்த பரத்வாஜ்க்கு 'பாரதி நட்புக்காக' அமைப்பின் தலைவர் இராமகிருஷ்ணன்,செயலாளர் ஹலீல் ரஹ்மான், நிறுவனர் ஜெகன்னாதன் மற்றும் செயற்குழு அங்கத்தினர்களும் சிறப்பான முறையில் வரவேற்பளித்தனர், இந்தியத் தூதரகத்தைச சேர்ந்த டாக்டர் இளங்கோவன் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு இசையமைத்ததுடன் பரத்வாஜ்க்கு தனது வாழ்த்தினை தெரிவித்தார்.
NANDRI : தினமலர் & ரமேஷ் விஸ்வநாதன் – UAE TAMIL SANGAM
Thursday, March 24, 2011
துபாயில் தமிழக மருத்துவருக்கு விருது
துபாய் : துபாய் அரசின் மின் துறையின் சார்பில் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துவோருக்காக வழங்கப்படும் விருதினை மார்ச் 10ம் தேதியன்று நடைபெற்ற விழாவில் தமிழக மருத்துவர் டாக்டர் முஹம்மது பர்வீன் பானுக்கு வழங்கி கௌரவித்துள்ளது. துபாய் அரசின் மின் துறையின் சார்பில் வருடந்தோறும் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துவோருக்கு விருதுகளை வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது. 2010ம் ஆண்டுக்கான விருது பெற விண்ணப்பங்களை வரவேற்ற மின்துறை சுமார் 5000 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களைப் பெற்றது. அதில் இருந்து சிறப்பான முறையில் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்திய தமிழகத்தின் திருச்சியைச் சேர்ந்த டாக்டர் முஹம்மது பர்வீன் பானு, பொறியாளர் ஜாபர் அலி குடும்பத்தினர் விருது வழங்கி மின்துறை அதிகாரிகளால் கௌரவிக்கப்பட்டனர்.
பாத்ரூமில் ஷவரைப் பயன்படுத்துவதற்குப் பதில் வாலிகளை உபயோகப்படுத்துதல், கழிவு நீரை தோட்டத்திற்குப் பயன்படுத்துதல், தண்ணீர் வேகமாகப் பாய்வதைத் தடுக்க குழாயின் மீது மூடி உபயோகித்தல், ஏசியை 26 டிகிரியில் உபயோகப்படுத்தல், விளக்குகள் தேவையற்ற போது அணைத்து விடல், குறைவான மின்சாரத்தை பயன்படுத்தும் விளக்குகளைப் பயன்படுத்துதல் உள்ளிட்டவை தங்களுக்கு இவ்விருது கிடைக்க காரணமாக இருந்தது என டாக்டர் முஹம்மது பர்வீன் பானு தெரிவித்துள்ளார். விருது பெற்ற டாக்டர் பர்வீன் பானு குடும்பத்தினரை தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள் பாராட்டினர்.
நமது செய்தியாளர் முதுவை ஹிதாயத்
Nandri : www.dinamalar.com
Tuesday, March 15, 2011
யு.ஏ.இ.,யில் விளையாட்டு போட்டி
அமீரக தமிழர்கள் சோர்வு நீக்கி, உற்சாகமும் ஊக்கமும் தரும் நோக்கத்துடன் பிப்ரவரி 4ம் தேதியன்று இறகுப்பந்து போட்டி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிகரமாய் பரிசுகளும் வழங்கி விழா மிக சிறப்பாக நடைபெற்றது. முதன் முறையாக, இறகுப்பந்து போட்டி பல பிரிவுகளாக நடத்தப் பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தது தமிழ்ச்சங்கம். ஆடவர் இரட்டை / பெண்கள் இரட்டை / கலப்பு இரட்டை என பகுக்கப்பட்டு, போட்டிகள் நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும் வழங்கப்பட்டது.பிப்ரவரி 3ம் தேதி பயிற்சி போட்டிகள் அமைக்கப்பட்டு, இரவு 9 மணி முதல் 12.30 மணி வரை நடை பெற்றன.
குழந்தைகளுக்கென பாசிங் த டாய், கொல கொலயா முந்திரிக்கா, தொடர் ஓட்டம், வண்ணங்கள், வேடிக்கை இறகுப் பந்து, கொகோ என 2 வயது முதல் 15 வயது வரை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. 15 வயதிற்கு மேற்பட்டோருக்கு, மிதவேக நடை, அடுத்தவனை அலேக்கா தூக்கு, குதியாட்டம், கொகோ என நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது
துபாயில் இந்திய சமூக நல அமைப்பு கூட்டம்
துபாய் : துபாயில் இந்திய சமூக நல அமைப்பு கூட்டம் பிப்ரவரி 22ம் தேதியன்று இந்திய கன்சுலேட் ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. இந்திய சமூக நல அமைப்பின் கன்வீனர் கே. குமார் துவக்கவுரை நிகழ்த்தினார்.
இந்திய கன்சுல் ஜெனரல் சஞ்சய் வர்மா நிகழ்வுக்கு வருகை புரிந்த துபாய் அரசின் சமூக முன்னேற்றத் துறையின் டைரக்டர் ஜெனரல் உள்ளிட்ட அதிகாரிகளை வரவேற்றார். துபாய் அரசின் சமூக முன்னேற்றத்துறையின் டைரக்டர் ஜெனரல் காலித் அல் கம்தா, டாக்டர் ஒமர் அல் முத்தன்னா, டாக்டர் அஹமது அல் முஹைரி, பழனி பாபு உள்ளிட்டோர் சமூக சேவை நிறுவனங்கள் துபாய் அரசில் பதிவு செய்து சமூக மாற்றத்தில் அரசுடன் இணைந்து பணியாற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.
அதனைத் தொடர்ந்து சமூக முன்னேற்றத்துறை அதிகாரிகளுடன் ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ. லியாக்கத் அலி, மக்கள் தொடர்பு செயலாளர் ஏ. முஹம்மது தாஹா, ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத், துபாய் தமிழ்ச் சங்க தலைவி ஜெயந்தி மாலா சுரேஷ், பொதுச்செயலாளர் சி. ஜெகந்நாதன், துபாய் தமிழ்ப் பெண்கள் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துரையாடல் செய்தனர். கே. குமார் நன்றியுரையினைத் தொடர்ந்து நிகழ்ச்சி நிறைவுற்றது.
நமது செய்தியாளர் முதுவை ஹிதாயத்.
Nandri : www.dinamalar.com
FOR MORE UPDATES
VISIT
துபாய் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் பெண்கள் தின விழா
துபாய் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் பெண்கள் தின விழா பிப்ரவரி 25ம் தேதி கொண்டாடப்பட்டது. ஷார்ஜா ஸ்டார் சர்வதேசப் பள்ளியில் பெண்கள் தின கொண்டாட்டம் நடைபெற்றது.
பெண்கள் தின விழாவையொட்டி சமையல், ரங்கோலி, மருதாணி, கலைநயமிக்க பொருட்கள் உருவாக்குவது உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் பெண்களுக்காக நடத்தப்பட்டது. மேலும் பள்ளி மாணவ, மாணவியருக்காக ஓவியப்போட்டி மற்றும் வண்ணம் தீட்டுதல் ஆகிய போட்டிகள் நடைபெற்றன
துபாயில் கவிதைச் சிறப்பிதழ் வெளியீடு
துபாய் : துபாயில் வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பின் 48 வது மாத இதழான "இனி" சிறப்பிதழ் வெளியீடு மற்றும் கவியரங்கம் நிகழ்ச்சி மார்ச் 11, காலை 9-45 மணியளவில் துபாய் கராமா சிவஸ்டார் பவனில் நடைபெற்றது. விழாவின் சிறப்பு விருந்தினராக பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் தலைமைக் கழகப் பொதுச் செயலாளரும், இனிய திசைகள் மாத இதழ் ஆசிரியருமான பேராசிரியர், டாக்டர் சேமுமு முகமதலி, தாய் மண் வாசகர் வட்டம் அமைப்பின் தலைவர் செ.ரெ.பட்டிணம் மணி மற்றும் இலங்கையைச் சேர்ந்த காவியத்திலகம் டாக்டர் ஜின்னாஹ் ஷரீபுத்தீன் அவர்களும் கலந்து கொண்டனர்.
ஜெயா பழனி, மற்றும் ஸ்ரீவாணி ஆனந்தன் தமிழ்த்தாய் வாழ்த்துடன் இனிதே துவங்கிய விழா , இணைச்செயலாளர் ஜியாவுதீனின் வரவேற்புரையைத் தொடர்ந்து புதிய உறுப்பினர் அறிமுகத்துடன் சூடு பிடித்தது. நிகழ்ச்சித் தொகுப்புடன், கவியரங்கத்தையும் பொறுப்பேற்றுக் கொண்ட ஆலோசகர் காவிரிமைந்தன், ஆசிரியர் குழுவின் அங்கமான இரஜகை நிலவனுடன் சேர்ந்து கவியரங்கைத் தொடங்க, கவிஞர்கள், ஆதிபழனி, கிளியனூர் இஸ்மத், தஞ்சாவூரான் பாரூக், அத்தாவுல்லா, துரை மலைவேல், ஜெயாபழனி, சந்திரசேகர், நீரோடை மலிக்கா, முகவை முகில், முகவை முத்து,புதுவை ரமணி, ஜியாவுதீன்,சிம்மபாரதி, சரவணன்,சண்முக சுந்தரம், விருதை சையது ஹுசைன், இரஜகை நிலவன் மற்றும் காவிரிமைந்தன் ஆகியோர் கவிபாட கவியரங்கு இனிதே நிறைவுற்றது. அதனைத் தொடர்ந்து இதழ் வெளியீடு நடந்தது.
நமது செய்தியாளர் முதுவை ஹிதாயத்
Nandri : www.dinamalar.com
Friday, March 11, 2011
பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியகழகம் நடத்திய இலக்கியம் மற்றும் கட்டுரைப்போட்டி பரிசளிப்பு விழா
பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியகழகம் நடத்திய இலக்கியம் மற்றும் கட்டுரைப்போட்டி பரிசளிப்பு விழா பிப்ரவரி 25ம் தேதியன்று துபாய், தேராவில் அமைந்துள்ள லேண்ட்மார்க் ஹோட்டலில் இரவு 6.30 மணிமுதல் 11. 30 மணிவரை சிறப்பாக நடந்தது.
விழாவின் ஆரம்பமாக துணைத்தலைவர் கீழக்கரை முஹம்மது மஹ்ரூப் கிராஅத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. தாவூத் மற்றும் குழுவினரின் நபிவாழ்த்தைத் தொடர்ந்து துணைச்செயலாளர் அதிரை ஷர்புத்தீன் வரவேற்புரையாற்றினார். விழாவின் சிறப்பு விருந்தினர்களாக கவுரவித்தர் மு.மேத்தா, டாக்டர் சே.மு.மு.முகம்மதலி, டாக்டர் காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரீபுத்தீன், கலாபூஷணம் மானா மக்கீன், இலங்கைப்பிரபல பாடகி நூர்ஜஹான், ஈடிஏ நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் சையதுசலாஹுதீன் மற்றும் சீனாதானா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கவிஞர் அத்தாவுல்லா வாழ்த்துக் கவிதையை பாட, தொடர்ந்து தேரிழந்தூர் தாஜுதீன் தன் காந்தக் குரலால் பாடல் பாடி கூட்டத்தைக் கவர்ந்தார். பின் விருந்தினர்கள் மேடைக்கழைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டதைத் தொடர்ந்து துணைச்செயலாளர் கிளியனூர் இஸ்மத் (அமீரக) இவ்அமைப்பின் செயல்பாடுகள் குறித்துப்பேசினார்.
பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியகழகம் நடத்திய "தமிழ் இலக்கியத்தில் முஸ்லிம்களின் பங்கு" என்ற கட்டுரை போட்டியில் முதல் பரிசான சென்னை செல்வதற்கான விமானப் பயணச் சீட்டு அத்தாவுல்லாக்கும், இரண்டாவது பரிசான மடிக்கணினி அம்ஜத்கானுக்கும், மூன்றாவது பரிசான கைபேசி முகம்மது கமாலுதீனுக்கும் பாராட்டுச் சான்றிதழ்களுடன் வழங்கப் பட, பத்து ஆறுதல் பரிசுகளை அப்துல் காதர் ஜெய்லானி, தஞ்சாவூரான் பாரூக், ஜகுபர் நிஸா ஜகுபர், காஜா முஹியத்தீன், பெனாசீர் பாத்திமா, ஹமீது இப்ராகிம், செய்யது சாஹிப், சரவணன் (குசும்பன்), ஜஸீலா நவ்பல் மற்றும் அஹமது நிஷாம் ஆகியோர் தட்டிச்சென்றனர்.
நிகழ்வின் அடுத்த கட்டமாக, கீழை சீனா தானா அவர்களின் "நான் நேசிக்கும் திருக் குரான்" என்ற குறுந்தகடு வெளியிடப் பட அதை சையது சலாஹூதீன் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். அதைத் தொடர்ந்து காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரீபுத்தீன் அவர்களின் " திப்புசுல்தான்" காவிய நூல் டாக்டர் சேமுமு முகம்மதலி அவர்களால் வெளியிடப்பட அதன் பிரதியை சாத்தான் குளம் அப்துல் ஜப்பார் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். </p>
நமது செய்தியாளர் முதுவை ஹிதாயத்
Nandri www.dinamalar.com
Monday, March 7, 2011
பிலிப்பைன்ஸ் பெண்ணை மணந்த விருதுநகர் இளைஞர்
விருதுநகர் : விருதுநகரைச் சேர்ந்த சிவக்குமாருக்கும், பிலிப்பைன்ஸ் மரியா மெர்ஸிடஸ்க்கும் துபாயில் கனிந்த காதல், விருதுநகரில் திருமணத்தில் முடிந்தது. விருதுநகர் என்.ஜி.ஓ., காலனி தாமரை தெருவை சேர்ந்தவர் அழகர்சாமி.
இவரது மகன் சிவக்குமார்(29). பி.எஸ்சி., விசுவல் கம்யூனிகேசன் படித்த இவர், நான்கு ஆண்டுகளுக்கு முன் துபாயில் எலக்ட்ரிக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்தார். இதே கடையில் பிலிப்பைன்சின் மணிலா நகரைச் சேர்ந்த மரியா மெர்ஸிடஸ் என்பவரும் வேலை செய்தார். அங்கு இருவருக்கும் காதல் ஏற்பட்டது. தற்போது சிவக்குமார், துபாயில் வேறு நிறுவனத்தில் முதன்மை கட்டுப்பாட்டாளராகவும், மரியா மெர்ஸிடஸ் அங்குள்ள தனியார் விமான நிறுவனத்தில் வாடிக்கையாளர் சேவை முதுநிலை அலுவலராகவும் பணி புரிகின்றனர். சமீபத்தில் அங்கு பதிவு திருமணம் செய்த இருவரும், இந்து முறைப்படி திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
பெற்றோரின் சம்மதம் கிடைத்தது. இவர்களது திருமணம் விருதுநகரில் நேற்று நடந்தது. மஞ்சள் நிறத்தை இயற்கையாகவே பூசிக்கொண்ட, மரியா மெர்ஸிடஸ் கூறியதாவது: இந்தியா மீது எனக்கு நல்ல எண்ணம் உண்டு. தமிழகத்தை பற்றி சிவக்குமாரை காதலித்த பின், அதிகம் தெரிந்து கொண்டேன். நட்போடு பழகியபோது, இவரது தமிழர் குணம் என்னை கவர்ந்தது. பெற்றோர் என் காதலுக்கு பச்சைக்கொடி காட்டினர். ஆனால், இதய நோயாளிகளான அவர்கள், திருமணத்திற்கு வரவில்லை.
இருப்பினும், உறவினர்களை அனுப்பி வைத்தனர். இரு நாட்டிற்கும் பண்டைய காலத்திலேயே நல்ல உறவு இருந்தது என்பதை கேள்விபட்டேன். இதுபோல எங்கள் உறவும் இறுதி மூச்சு வரை இருக்கும், என்றார். சிவக்குமாரிடம் கேட்டபோது, புன்னகையை தவிர வேறு ஒன்றும் கூறவில்லை.
Sunday, March 6, 2011
அபுதாபி அய்மான் சங்கத்தில் கல்வியாளருக்கு வரவேற்பு
அபுதாபி : அபுதாபி அய்மான் சங்கத்தின் சார்பில் தமிழகத்தில் இருந்து வருகை புரிந்த பேராசிரியர் முனைவர் சேமுமு முகமதலிக்கு மார்ச் 03ம் தேதியன்று மாலை வரவேற்பு அளிக்கப்பட்டது. முனைவர் சேமுமு முகமதலி, அய்மான் சங்கம் மேற்கொண்ட கல்விச் சேவைகளைப் பாராட்டினார். மேலும் திருச்சியில் பெண்களுக்காக நடத்தப்பட்டு வரும் கல்லூரியின் பணிகளையும் பாராட்டினார்.
இதுபோன்ற சேவைகள் நடைபெறுவதற்கு உறுதுணையாக இருந்து வரும் நிர்வாகிகள் மற்றும் புரவலர்களைப் பாராட்டினார். நிகழ்வில் அய்மான் சங்க தலைவர் அதிரை சாகுல் ஹமீது, பொருளாளர் முஹம்மது ஜமாலுதீன், ஈமான் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்
Nandri : www.dinamalar.com
Wednesday, March 2, 2011
துபாயில் நூல் அறிமுக நிகழ்ச்சி
துபாய் : துபாயில் இலங்கையின் பிரபல எழுத்தாளர் மானாமக்கீன் நூல் அறிமுக நிகழ்ச்சி பிப்ரவரி 26ம் தேதியன்று மாலை அஸ்கான் டி பிளாக்கில் நடைபெற்றது. நிகழ்விற்கு ஸ்கைசீ குரூப் இயக்குநர் செய்யது எம். அப்துல் காதர் (சினாதானா) தலைமை வகித்தார். அவர் தனது தலைமையுரையில் மானாமக்கீன்னின் கள ஆய்வுகள் குறித்தும், இலக்கியப் பங்களிப்பு குறித்தும் விவரித்தார்.
கீழை ராஜா வரவேற்புரை நிகழ்த்தினார். இலங்கை எழுத்தாளர் மானாமக்கீன், தான் எழுதிய ' வரலாற்றில் வள்ளல் ஹபீப் முஹம்மது அரசர்', கீழக்கரைப் பண்பாட்டுக் கோலங்கள், வரலாற்றில் இலங்கை கண்ட குமரி, வரலாற்றில் இலங்கையும், காயல்பட்டினமும் உள்ளிட்ட பல்வேறு நூல்கள் குறித்து விவரித்தார். மேலும் ஆய்வுகள் மேற்கொள்ள காயல்பட்டணம், கீழக்கரை, முத்துப்பேட்டை, நீடூர் நெய்வாசல், முத்துப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்குச் சென்ற போது ஏற்பட்ட அனுபவத்தையும் தெரிவித்தார்.
நூலின் பிரதிகளை ஸ்கைசீ குரூப் இயக்குநர் செய்யது எம். அப்துல் காதர், ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ. லியாக்கத் அலி, காயிதெமில்லத் பேரவையின் துணைத்தலைவர் காயல் நூஹு சாஹிப், பொருளாளர் கீழை ஹமீதுர் ரஹ்மான், ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத், சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவையின் முஹம்மது மஃரூப், பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் விழாக்குழு செயலாளர் கீழை ராஜா, அத்தாவுல்லாஹ், காயல் முஹம்மது சுலைமான் உள்ளிட்ட பலருக்கு வழங்கி கௌரவித்தார். முதுவை ஹிதாயத் நன்றியுரை நிகழ்த்தினார்.
துஆவிற்குப் பின் நிகழ்ச்சி நிறைவுற்றது.
நமது செய்தியாளர் முதுவை ஹிதாயத்
NANDRI. WWW.DINAMALAR.COM