துபாய் : துபாயில் வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பின் 48 வது மாத இதழான "இனி" சிறப்பிதழ் வெளியீடு மற்றும் கவியரங்கம் நிகழ்ச்சி மார்ச் 11, காலை 9-45 மணியளவில் துபாய் கராமா சிவஸ்டார் பவனில் நடைபெற்றது. விழாவின் சிறப்பு விருந்தினராக பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் தலைமைக் கழகப் பொதுச் செயலாளரும், இனிய திசைகள் மாத இதழ் ஆசிரியருமான பேராசிரியர், டாக்டர் சேமுமு முகமதலி, தாய் மண் வாசகர் வட்டம் அமைப்பின் தலைவர் செ.ரெ.பட்டிணம் மணி மற்றும் இலங்கையைச் சேர்ந்த காவியத்திலகம் டாக்டர் ஜின்னாஹ் ஷரீபுத்தீன் அவர்களும் கலந்து கொண்டனர்.
ஜெயா பழனி, மற்றும் ஸ்ரீவாணி ஆனந்தன் தமிழ்த்தாய் வாழ்த்துடன் இனிதே துவங்கிய விழா , இணைச்செயலாளர் ஜியாவுதீனின் வரவேற்புரையைத் தொடர்ந்து புதிய உறுப்பினர் அறிமுகத்துடன் சூடு பிடித்தது. நிகழ்ச்சித் தொகுப்புடன், கவியரங்கத்தையும் பொறுப்பேற்றுக் கொண்ட ஆலோசகர் காவிரிமைந்தன், ஆசிரியர் குழுவின் அங்கமான இரஜகை நிலவனுடன் சேர்ந்து கவியரங்கைத் தொடங்க, கவிஞர்கள், ஆதிபழனி, கிளியனூர் இஸ்மத், தஞ்சாவூரான் பாரூக், அத்தாவுல்லா, துரை மலைவேல், ஜெயாபழனி, சந்திரசேகர், நீரோடை மலிக்கா, முகவை முகில், முகவை முத்து,புதுவை ரமணி, ஜியாவுதீன்,சிம்மபாரதி, சரவணன்,சண்முக சுந்தரம், விருதை சையது ஹுசைன், இரஜகை நிலவன் மற்றும் காவிரிமைந்தன் ஆகியோர் கவிபாட கவியரங்கு இனிதே நிறைவுற்றது. அதனைத் தொடர்ந்து இதழ் வெளியீடு நடந்தது.
நமது செய்தியாளர் முதுவை ஹிதாயத்
Nandri : www.dinamalar.com
0 comments:
Post a Comment