துபாய் : துபாயில் இலங்கையின் பிரபல எழுத்தாளர் மானாமக்கீன் நூல் அறிமுக நிகழ்ச்சி பிப்ரவரி 26ம் தேதியன்று மாலை அஸ்கான் டி பிளாக்கில் நடைபெற்றது. நிகழ்விற்கு ஸ்கைசீ குரூப் இயக்குநர் செய்யது எம். அப்துல் காதர் (சினாதானா) தலைமை வகித்தார். அவர் தனது தலைமையுரையில் மானாமக்கீன்னின் கள ஆய்வுகள் குறித்தும், இலக்கியப் பங்களிப்பு குறித்தும் விவரித்தார்.
கீழை ராஜா வரவேற்புரை நிகழ்த்தினார். இலங்கை எழுத்தாளர் மானாமக்கீன், தான் எழுதிய ' வரலாற்றில் வள்ளல் ஹபீப் முஹம்மது அரசர்', கீழக்கரைப் பண்பாட்டுக் கோலங்கள், வரலாற்றில் இலங்கை கண்ட குமரி, வரலாற்றில் இலங்கையும், காயல்பட்டினமும் உள்ளிட்ட பல்வேறு நூல்கள் குறித்து விவரித்தார். மேலும் ஆய்வுகள் மேற்கொள்ள காயல்பட்டணம், கீழக்கரை, முத்துப்பேட்டை, நீடூர் நெய்வாசல், முத்துப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்குச் சென்ற போது ஏற்பட்ட அனுபவத்தையும் தெரிவித்தார்.
நூலின் பிரதிகளை ஸ்கைசீ குரூப் இயக்குநர் செய்யது எம். அப்துல் காதர், ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ. லியாக்கத் அலி, காயிதெமில்லத் பேரவையின் துணைத்தலைவர் காயல் நூஹு சாஹிப், பொருளாளர் கீழை ஹமீதுர் ரஹ்மான், ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத், சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவையின் முஹம்மது மஃரூப், பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் விழாக்குழு செயலாளர் கீழை ராஜா, அத்தாவுல்லாஹ், காயல் முஹம்மது சுலைமான் உள்ளிட்ட பலருக்கு வழங்கி கௌரவித்தார். முதுவை ஹிதாயத் நன்றியுரை நிகழ்த்தினார்.
துஆவிற்குப் பின் நிகழ்ச்சி நிறைவுற்றது.
நமது செய்தியாளர் முதுவை ஹிதாயத்
NANDRI. WWW.DINAMALAR.COM
0 comments:
Post a Comment