Google Plus LinkedIn Email

Wednesday, March 17, 2010

அணைத்து முத்தமிட்டேன் கைபேசியை!!!

ஒட்டுமொத்த உறவுகளையும்
சுருக்கி நினைவுகளாக இதயத்தில்
சுமந்து பாலைவனத்திற்கு வந்துவிட்டேன்
சிறைவாசியாக!


இறுக்கிப் பிடித்த
இதயம் மட்டும்
இரவினில் கொப்பளிக்கும் உறவுகளை எண்ணி!!
தனிமையில்
தலையணை மட்டுமே துணையாக!
ஈரம் காத்துக் கொண்டிருக்கும் கண்கள்
தூரத்தில் உள்ள உறவுகளை எண்ணி!!


ஆறுதலாக என்
அழுகை சப்தம் மட்டும்
சப்தமே இல்லாமல்!!
குரல்களில மட்டுமே
குடும்பம் நடத்தும் கொடுமை!!


கட்டிய மனைவியும்
தொட்டிலில் குழந்தையும்!
நடக்க ஆரம்பித்துவிட்டான் என்பதையே
நடுவில் ஒருவர் கூற;
நனைந்த கண்களை துடைத்துவிட்டு
சிரிக்க மட்டுமே முடிந்தது!!


மெல்லிய உதடுகளை
ஈரம் கொண்டிருக்கும் எச்சிலின் உதறலோடு
தட்டிய கைகளோடு ஒரு முறை சொன்னான் Daddy என்று!
அணைத்து முத்தமிட்டேன் கைபேசியை!!!

குறிப்பு : இந்த கவிதையை எழுதிய நண்பருக்கு நன்றி. எழுதிய நண்பரின் பெயர் தெரியவில்லை அதனால் அவரின் பெயரை குறிப்பிட முடியவில்லை. இதை அனுப்பிவைத்த நண்பன் ஹுசைனுக்கு நன்றி.

3 comments:

Essar Trust said...

Thanks 4 our posting

சிநேகிதன் அக்பர் said...

எண்ணங்களின் பிரதிபலிப்பு.

அருமை.

Essar Trust said...

...ந‌ன்றி...

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons