4ம் தேதி துபாய் தமிழ்ச்சங்கத்தின் 10வது ஆண்டு விழா: லியோனி பட்டிமன்றம் துபாய்: வரும் 4ம் தேதி துபாய் தமிழ்ச் சங்கத்தின் 10வது ஆண்டு விழா துபாய் இந்தியன் ஹை ஸ்கூலில் உள்ள ஷேக் ராஷித் அரங்கில் நடக்கிறது. துபாய் தமிழ்ச் சங்கத்தின் 10வது ஆண்டு விழா வரும் 4ம் தேதி நடக்கிறது. இந்த விழா துபாய் இந்தியன் ஹை ஸ்கூலில் உள்ள ஷேக் ராஷித் அரங்கில் நடைபெறுகிறது. மொரீஷியஸ் முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் பரசுராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இந்திய கன்சல் ஜெனரல் சஞ்சய் வர்மா, ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும மேலாண்மை இயக்குநர் சையது எம். ஸலாஹுத்தீன், அனைத்திந்திய ஆயுர்வேத காங்கிரஸின் மதுரை பிரிவு தலைவர் டாக்டர் எஸ். தன்வந்த்ரி கார்த்திக் வேல் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர். திண்டுக்கல் ஐ. லியோனி தலைமையிலான...