துபாய் :துபாய் ஈமான் அமைப்பு மற்றும் துபாய் தமிழ்ச் சங்கம் ஆகியவை இணைந்து நடத்தும் ரத்ததான முகாம் மே 06ம் தேதியன்று காலை ஈடிஏ அஸ்கான் ஹவுஸில் நடைபெற இருக்கிறது. இம்முகாமிற்கு ஈடிஏ அஸ்கான் குழும மேலாண்மை இயக்குனரும், ஈமான் அமைப்பின் தலைவருமான அல்ஹாஜ் சையது எம். ஸலாஹுத்தீன் தலைமை வகிக்கவும், இந்திய கன்சல் ஜெனரல் சஞ்சய் வர்மா ரத்தான முகாமை துவக்கி வைக்கவும் இசைந்துள்ளார்கள். ரத்ததான முகாமிற்கான இடவசதியினை ஈடிஏ அஸ்கானும், ஊடக அணுசரனையினை மூன் தொலைக்காட்சியும் வழங்கியுள்ளன. தானங்களின் சிறந்த தானமான ரத்ததானம் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்கள் தங்களது பெயர்களை கீழ்க்கண்ட அலைபேசி எண்களில் முன்பதிவு செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முதுவை ஹிதாயத் : 050 51 96 433 / வி. களத்தூர் ஷாகுல் ஹமீது – 050 8834 849...