துபாய் : துபாயில் தமிழ்த்துளி மன்றத்தின் சார்பில் தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு 2011 எனும் சிறப்பு நிகழ்ச்சி ஏப்ரல் 08ம் தேதியன்று மாலை ஸ்டார் சர்வதேசப் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த தமிழ்த்துளி மன்ற நிறுவனர் பிரியா விஜய், தனது தலைமையுரையில் இம்மன்றம், அமீரக மண்ணில் குழந்தைகளுக்காக தொடங்கப்பட்ட முதல் அமைப்பு எனக் குறிப்பிட்டார். இம்மன்றம் அமீரகத்தில் வாழ்ந்து வரும் தமிழ்க் குழந்தைகள் தங்களது தமிழ் பேச்சுத் திறனை வளர்க்க பாடுபடும் என்றார்.
மரியம் கபீர் வரவேற்புரை நிகழ்த்தினார். மன்ற ஒருங்கிணைப்பாளர் மஹேஸ்வரி, முனைவர் பர்வீன் சுல்தானா குறித்த அறிமுகவுரை நிகழ்த்தினார். முனைவர் பர்வீன் சுல்தானா தனது சிறப்புரையில் தமிழை உணர்வோடு கற்க வேண்டும் என்றார்.
மேலும் அமீரகத்தில் இதுபோன்றதொரு நிகழ்வினை நிகழ்த்தி வரும் தமிழ்த்துளி மன்றத்தைப் பாராட்டினார். அதனைத் தொடர்ந்து முனைவர் பர்வீன் சுல்தானாவுக்கு 'தமிழ்ப் புயல்' விருது வழங்கப்பட்டது. பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றோருக்கு பரிசுகளை முனைவர் பர்வீன் சுல்தானா வழங்கினார். பல்சுவை கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வில் காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன், பேராசிரியர் கலந்தர், வழக்கறிஞர் ஜீவகிரிதரன், டாக்டர் பர்வீன் பானு, பத்திரிகையாளர் வி.களத்தூர் ஷா, சங்கமம் தொலைக்காட்சியின் கலையன்பன், கவிஞர்கள் மல்லிக்கா, பாத்திமா ஹமீத் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
குணா, நிகழ்வினை தொகுத்து வழங்கினார். நிகழ்விற்கான ஏற்பாடுகளை பிரியா, மகேஸ்வரி, கபீர், ரெங்கராஜன் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.
நமது செய்தியாளர் முதுவை ஹிதாயத்
NANDRI WWW.DINAMALAR.COM
0 comments:
Post a Comment