குவைத் : குவைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் சர்வதேச மகளிர் தினம் ஏப்ரல் 15ம் தேதியன்று மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதில் பெண்கள் பங்கேற்ற பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. பிரபல திரைப்பட மற்றும் நாடக நடிகை குமாரி சச்சு, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டது விழாவின் சிறப்பம்சமாக அமைந்தது. அன்று மாலை குவைத் தமிழ்ச் சங்க பெண்கள் வழங்கிய கலைநிகழ்ச்சிகள் அனைவரையும் குதூகலிக்க வைத்தது. மெல்லிசை நிகழ்ச்சிகளும், நடன நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது. நகைச்சுவையும், சமூக விழிப்புணர்வும் கலந்த 2 மேடை நாடகங்களும் அரங்கேற்றப்பட்டன.
விழாவில் இடம்பெற்ற வில்லுப்பாட்டு நிகழ்ச்சி, அழிந்து வரும் பழங்கால பாரம்பரிய தமிழ் கலைகளை அனைவரின் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியது. அதனைத் தொடர்ந்து குமாரி சச்சு நடுவராக பொறுப்பேற்று நடத்திய, குழந்தைகள் வளர்ப்பில் சிறந்தவர்கள் அந்தக்கால பெண்களா? இந்தக் கால பெண்களா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. விழாவில் இடம்பெற்ற நிகழ்ச்சிகள் அனைத்தையும் பார்வையாளர்கள் வெகுவாக ரசித்தனர்.
நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடைபெற்ற தமிழ்ச் சங்க ஆண்டு பொதுக்குழு கூட்டம், தலைவர் ஆர்.கணபதியின் உரையுடன் துவங்கியது.
2010-11ம் ஆண்டில் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து செயலாளர் செல்லத்துரை விவரித்தார். ஆண்டு தணிக்கை அறிக்கையை சங்க பொருளாளர் கே.ஆவுடை நாயகம் வாசித்தார். சங்கத்தின் பொறுப்புக்கள் அனைத்தும் 2010-11 ம் ஆண்டு நிர்வாகக் குழுவினரிடம் இருந்து 2011-12 ஆண்டு புதிய நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த ஆண்டு சிறப்பாக செயல் புரிந்த சங்க நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. குவைத் தமிழ்ச் சங்க இணை செயலாளர் கே.ரமேஷ்பாபு நன்றி நவில, நிகழ்ச்சி இனிதே நிறைவுபெற்றது.
தினமலர் வாசகர் எஸ்.செல்லதுரை
0 comments:
Post a Comment