
துபாய்: துபாய் இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் (ஈமான்) மற்றும் திருச்சி வெல்கேர் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் ஆகியவை இணைந்து ஜூன் 12ம் தேதியன்று மாலை மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சியினை ரிக்கா லேண்ட்மார்க் ஹோட்டலில் வெகு சிறப்புற நடத்தின. மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ.லியாக்கத் அலி தலைமை தாங்கினார். ஏ.முஹம்மது தாஹா இறைவசனங்களை ஓதினார்.அஜ்மான் ஆரிஃபா குழும தலைவர் சுல்தானுல் ஆரிஃபின் முன்னிலை வகித்தார். ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத் வரவேற்புரை நிகழ்த்தினார். வெல்கேர் மருத்துவமனை குறித்த அறிமுகவுரையினை திருச்சி முஹம்மது கௌஸ் காஜா முஹைதீன் நிகழ்த்தினார். திருச்சி வெல்கேர் மருத்துவமனை மகப்பேறு சிறப்பு மருத்துவர்...