துபாய் : துபாயில், மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் கூடுகை விழா மே 06ம் தேதியன்று மிக சிறப்பாக நடைப்பெற்றது. 140க்கும் மேற்ப்பட்ட உறுப்பினர்களை தன்னகத்தில் கொண்ட மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் ஐக்கிய அரபு அமீரகம் கிளை 2004ம் ஆண்டு துவங்கப்பட்டு 5 ம் வருடத்தை சிறப்பாக நடத்தி கொண்டுவருகிறது. மே 6ம் தேதியன்று கூடுகை விழா ஷார்ஜா ரோலாவில் உள்ள அல் முபாரக் சென்டரில் உள்ள ஏசியன் பேலஸ் ஹோட்டலில் வெகு சிறப்பாக நடைப்பெற்றது. பெருந்திரளான உறுப்பினர்கள் தங்கள் குடும்பத்துடன் கூடுகையில் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டு, மகிழ்ந்து இரவு விருந்துடன் விடைப்பெற்றனர். கல்லூரியின் சேர்மேன் கண்ணன் தியாகராஜனின் வாழ்த்து செய்தி மற்றும் கல்லூரி முதல்வர் அபய்குமாரின் விரிவான இன்றைய நிலையும் வெள்ளித்திரையில் திரையிடபட்டது. இலக்குமனன்(முதன்மை மேலாளர்), கிரிஸ்டோபர் (பிரசிடென்ட்), ரமேஷ் விஸ்வநாதன் (யு.ஏ.இ. தமிழ்ச்சங்கத்தின் தலைவர்) சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தங்களுடைய அனுபவத்தை மிக அழகாக தெரிவித்தார்கள்.
வரவேற்புரையை சிவக்குமார் (செயலாளர் யு.ஏ.இ.,) வழங்கினார். ராஜா(துணை செயலாளர்), அரவிந்த், மன்னவன், உதயகுமார், முத்து குமரவேல், முஹம்மத் அபூபக்கர், மணிமேகலை ஆகியோர் விழாவை மிக சிறந்த முறையில் நடத்தினர். மாலை 6 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி இரவு 11:00 மணிவரை நீடித்தது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. கடந்த கால நினைவுகள் வெகு அழகாக பரிமாரப்பட்டது. கல்லுரியின் புகைப்படம் மற்றும் இதற்கு முன் நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் திரையில் காண்பிக்கப்பட்டது. சிறப்பு விருந்தினருக்கு பொன்னாடையும், நினைவு பரிசும் வழங்கப்பட்டது. அலுமினியின் குழந்தைகள் பல்சுவை நிகழ்ச்சியும், மீனாக்ஷி தேனப்பனின் பரதநாட்டியம் ஆகியன சிறப்பாகக நடைபெற்றது. பின்னர் யுஏஇ தமிழ்ச்சங்கம் வழங்கிய கலை நிகழ்ச்சியும், கங்கா ரமேஷின் நடனக்குழுவின் அற்புதமான நாட்டியமும் வந்து இருந்த அனைவருடைய பாராட்டையும் பெற்றது.
கங்கா ரமேஷ், கீதா பாலா, கீதா கதிர், ஜமுனா ஷோபன் ஆகியோரின் பாடல் வெகு சிறப்பாக இருந்தது. பாலாஜி, கிஷோர்,வெங்கட், மாஸ்டர் ஸ்ரீனிவாசன் ஆகியோரின் பாடல் வெகு சிறப்பாக இருந்தது. மாஸ்டர் ரோஷன், மாஸ்டர் நிஷாந்த் இருவரும் தங்களுடைய திறமையை கீபோர்டின் மூலமாக மக்களுக்கு தெரிவித்தார்கள். நிகழ்ச்சியில் பங்கு பெற்ற அனைவருக்கும் பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது. இவ்விழாவை குருகிய காலத்தில் வெகுசிறப்பாக ஏற்பாடு செய்து இருந்த சிவகுமார், அரவிந்த், ராஜா, மன்னவன் உதயகுமார், முஹம்மது அபூபக்கர் ஆகியோருக்கும், அனைத்து அலும்னி உறுப்பினர்களுக்கும் மன்னவன் நன்றி தெரிவித்தார். நன்றி உரையுடன் விழா நிறைவுற்றது.
யுஏஇ யில் வசிக்கும் மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் தங்களை இச்சங்கத்தில் உட்படுத்திக் கொள்ள முன்னாள் மாணவர்கள் சங்கம் அன்புடன் அழைக்கிறது. கீழ்கண்ட தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளவும் சிவக்குமார் - +971 50 8361629, சிவகுமார் - 050 7260633, ராஜா - 0506942448, மன்னவன் - 0506501893.
தினமலர் வாசகர் ரமேஷ் விஸ்வநாதன்
1 comments:
விழா நிகழ்ச்சிகள் நன்கு தொகுத்து வழங்கப்பட்டுளது.
அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள். பதிவுக்கு நன்றி.
Post a Comment