Google Plus LinkedIn Email

Wednesday, June 15, 2011

குழும நண்பர்களின் கருத்துக்களை எதிர்பார்க்கிறோம்...

குழும நண்பர்களின் கருத்துக்களை எதிர்பார்க்கிறோம்...

 

நண்பர்களே நமது குழும  லோகோவை  (LOGO) மாற்றம் செய்யவேண்டும் என்று நமது குழும நண்பர் AZARAI கேட்டுகொண்டோம். நண்பரும் நமது வேண்டுகோளை ஏற்று ஒரு லோகோவை  வடிவமைத்துள்ளார்.

 

இதில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டுமா அப்படி செய்ய வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் போன்ற உங்களுடைய கருத்துக்களை நண்பருக்கு அனுப்பலாம் அல்லது நமது குழுமத்திற்கு அனுப்ப அன்புடன் வேண்டுகிறோம்.

அன்புடன்

 

GTN

 

ரியாத்தில் கோடை விழா

ரியாத் : ரியாத்தில் தமிழ் கலை மனமகிழ் மன்றத்தினர் நடத்திய கோடை விழா தஃபர்ரஜ்ஜுடன் ஒருநாள் என்னும் பெயரில் மே 13ம் தேதியன்று நதா, ஹம்மதியா மகிழகங்களில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்க் குடும்பங்கள் கலந்து கொண்டு சிறப்பித்த இவ்விழாவில் நீச்சல் விளையாட்டுகள், அலசல் அரங்கம், ஊமை விளையாட்டு, சொல்லுங்கள் வெல்லுங்கள், குறுக்கெழுத்துப் புதிர்கள், பொது அறிவு வினாடி வினா, இஸ்லாமிய வினாடி வினா ஆகிய போட்டிகளை ஹைதர் அலி, லக்கி ஷாஜஹான், இப்னு ஹம்துன், ஷாஹுல் ஹமீது, இம்தியாஸ், அபுல்ஹசன் ஆகியோர் நடத்தினர். இறுதியாக, சகோ.எம்பிஎம். கஸ்ஸாலி இயக்கத்தில் கணிக்காட்சியாக 'நபியுடன் ஒரு நாள்' சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சிறுவர்களுக்கான கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளை சூப்பர் இப்ராஹீம், சலாஹுத்தீன், அப்துல் அஸீஸ், ரஃபீக் ஆகியோர் ஒருங்கிணைந்து நடத்தினர்.

 

மகளிருக்கான விளையாட்டுகள், திருமதிகள் ஃபரீதா ஷரீஃப், கதீஜா இம்தியாஸ், மும்தாஜ் ஃபாருக் ஆகியோர் தலைமையில் நடைபெற்றன. கடந்த ஆண்டு ரியாத் பன்னாட்டு இந்தியப்பள்ளியில் சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பில் தமிழில் முதல் நிலை பெற்ற மாணவ, மாணவிகள் ஹமீதா நஸ்லுன் சிதாரா, முஹம்மது சுலைமான் ஆகியோர் பாராட்டும் கேடயமும் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டனர். மேலும், நடந்து முடிந்த தமிழக மேல்நிலைப் பள்ளித் தேர்வில் 1180 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் ஆறாவதாக வந்த மாணவர், பன்னாட்டு இந்தியப் பள்ளியின் முன்னாள் மாணவர் என்னும் பெருமிதங் கொண்டு அவருடைய தகப்பனார் ரிபாயிடம் பாராட்டும், வெகுமதியான பரிசிலும் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை இம்தியாஸ், ஹைதர்அலி, முஹம்மது ஷரீஃப், அபுல்ஹசன், ரஃபீக், ஷாஜஹான் ஆகியோர் முன்னெடுக்க, விழா ஒருங்கிணைப்பாளராக இப்னுஹம்துன் செயலாற்றினார். விழாவுக்கு வந்திருந்த அனைவரும் தங்கள் மனநிறைவை வெளிப்படுத்தினர்.

 

 தினமலர் வாசகர் சிக்கந்தர்

Monday, June 6, 2011

அன்பு நண்பருக்கு

 

அன்பு நண்பருக்கு,

 

வணக்கம்.

 

நாங்கள் வளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள் மின்னஞ்சல் குழுமம் (Gulf Tamil Nanbarkal Mailing Group).

 

தங்களை இந்த மின்னஞ்சல் வழியாக சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். வளைகுடா நாடுகளை சேர்ந்த தமிழ் உறவுகளை ஒரு இடத்தில் இணைக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் ஒரு சிறு முயற்சியாக இதை ஆரம்பித்துள்ளோம்.

 

இந்த குழுமத்தின் வழியாக தினசரி செய்திகள் (தமிழகம் மற்றும் வளைகுடா) , வேலைவாய்ப்பு தகவல்கள், நகைச்சுவை துணுக்குகள், கணிப்பொறி தகவல்கள், தமிழ் கவிதை, கட்டுரை, புகைப்படங்கள், போன்றவற்றை பகிர்ந்து கொள்ளுகிறோம். தங்களுக்கு விருப்பம் இருப்பின் நீங்களும் எங்களுடன் இணையலாம்...

 

நீங்கள் இணைய : gulf_tamilnanbarkal-subscribe@yahoogroups.com

 

மேற்கண்ட மின்னஞ்சலுக்கு ஒரு சிறிய மின்னஞ்சல் அனுப்புங்கள்.

கூடுதல் தகவல்களுக்கு : http://gulftamilnanbarkal.blogspot.com

Facebook           :           www.facebook.com/gulftamilnanbarkal

Twitter              :           www.twitter.com/gulftamils

அன்புடன்

 

வளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள் மின்னஞ்சல் குழுமம்

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons