Saturday, April 23, 2011

துபாய் ஈமான் அமைப்பு மற்றும் துபாய் தமிழ்ச் சங்கம் ஆகியவை இணைந்து நடத்தும் ரத்ததான முகாம்

துபாய் :துபாய் ஈமான் அமைப்பு மற்றும் துபாய் தமிழ்ச் சங்கம் ஆகியவை இணைந்து நடத்தும் ரத்ததான முகாம் மே 06ம் தேதியன்று காலை ஈடிஏ அஸ்கான் ஹவுஸில் நடைபெற இருக்கிறது.

 

இம்முகாமிற்கு ஈடிஏ அஸ்கான் குழும மேலாண்மை இயக்குனரும், ஈமான் அமைப்பின் தலைவருமான அல்ஹாஜ் சையது எம். ஸலாஹுத்தீன் தலைமை வகிக்கவும், இந்திய கன்சல் ஜெனரல் சஞ்சய் வர்மா ரத்தான முகாமை துவக்கி வைக்கவும் இசைந்துள்ளார்கள். ரத்ததான முகாமிற்கான இடவசதியினை ஈடிஏ அஸ்கானும், ஊடக அணுசரனையினை மூன் தொலைக்காட்சியும் வழங்கியுள்ளன.

 

தானங்களின் சிறந்த தானமான ரத்ததானம் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்கள் தங்களது பெயர்களை கீழ்க்கண்ட அலைபேசி எண்க‌ளில் முன்பதிவு செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முதுவை ஹிதாயத் : 050 51 96 433 / வி. களத்தூர் ஷாகுல் ஹமீது 050 8834 849 / தேவகோட்டை அப்துல் ரசாக் : 055 4145068. இத‌ன் மூல‌ம் சேக‌ரிக்க‌ப்படும்‌ ர‌த்த‌ம் குழ‌ந்தைக‌ளின் ம‌ருத்துவ‌ சிகிச்சைக்கும், அவ‌ச‌ர‌ கால‌ அறுவை சிகிச்சை உள்ளிட்ட‌ ப‌ல்வேறு ம‌ருத்துவ‌ப் ப‌ணிக‌ளுக்கு ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌ட இருக்கிறது.

 

நமது செய்தியாளர் முதுவை ஹிதாயத்

 

Friday, April 22, 2011

துபாய் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் சித்திரைத் திருவிழா

துபாய் : துபாய் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் சித்திரைத் திருவிழா மற்றும் பொதுக்குழுக் கூட்டம் ஏப்ரல் 15ம் தேதியன்று மாலை, ஸ்டார் சர்வதேசப் பள்ளியில் நடைபெற்றது. விழாவிற்கு துபாய் தமிழ்ச் சங்க தலைவி ஜெயந்தி மாலா சுரேஷ் தலைமை வகித்தார். துவக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. பொதுச்செயலாளர் சி.ஜெகந்நாதன் வரவேற்புரை நிகழ்த்தினார். பொருளாளர் கீதா கிருஷ்ணன் மற்றும் இணைப் பொருளாளர் சுந்தர் ஆகியோர் வரவு செலவு அறிக்கையினை சமர்ப்பித்தனர்.

அதனைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகளாக ஜெயந்தி மாலா சுரேஷ் தலைவராகவும், துணைத்தலைவராக ஏ.லியாக்கத் அலி, பொதுச்செயலாளராக சி. ஜெகந்நாதன், பொருளாளராக கீதா கிருஷ்ணன், இணைப் பொருளாளராக சுந்தர்ராஜன், விழாக்குழு செயலாளராக ஏ. முஹம்மது தாஹா, கமிட்டி உறுப்பினர்களாக ஜி. விஜயேந்திரன், ஜெ.எஸ். விஜயராகவன், பி.பாலகிருஷ்ணன், பிரசன்னா உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு மூத்த உறுப்பினர் பேராசிரியர் ஆறுமுகம் மலர்க்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். 

அதனைத் தொடர்ந்து நடன ஆசிரியை கவிதா பிரசன்னா மற்றும் பாடல் ஆசிரியை சந்திரா கீதா கிருஷ்ணன் ஆகியோரது வடிவமைப்பில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆகாஷ் அருள் எனும் ஐந்து வயது சிறுவன் கீ போர்டு முதல் முறையாக அரங்கில் வாசித்து அனைவரது பாராட்டையும் பெற்றான். நிகழ்வினை மீரா கிரிவாசன் தொகுத்து வழங்கினார். 

நிகழ்வில் துபாய் தமிழ்ச் சங்க அங்கத்தினர்கள் திரளாக பங்கேற்றனர்.

Thursday, April 21, 2011

குவைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் சர்வதேச மகளிர் தினம்

குவைத் : குவைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் சர்வதேச மகளிர் தினம் ஏப்ரல் 15ம் தேதியன்று மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதில் பெண்கள் பங்கேற்ற பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. பிரபல திரைப்பட மற்றும் நாடக நடிகை குமாரி சச்சு, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டது விழாவின் சிறப்பம்சமாக அமைந்தது. அன்று மாலை குவைத் தமிழ்ச் சங்க பெண்கள் வழங்கிய கலைநிகழ்ச்சிகள் அனைவரையும் குதூகலிக்க வைத்தது. மெல்லிசை நிகழ்ச்சிகளும், நடன நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது. நகைச்சுவையும், சமூக விழிப்புணர்வும் கலந்த 2 மேடை நாடகங்களும் அரங்கேற்றப்பட்டன.

 

விழாவில் இடம்பெற்ற வில்லுப்பாட்டு நிகழ்ச்சி, அழிந்து வரும் பழங்கால பாரம்பரிய தமிழ் கலைகளை அனைவரின் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியது. அதனைத் தொடர்ந்து குமாரி சச்சு நடுவராக பொறுப்பேற்று நடத்திய, குழந்தைகள் வளர்ப்பில் சிறந்தவர்கள் அந்தக்கால பெண்களா? இந்தக் கால பெண்களா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. விழாவில் இடம்பெற்ற நிகழ்ச்சிகள் அனைத்தையும் பார்வையாளர்கள் வெகுவாக ரசித்தனர்.

 

நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடைபெற்ற தமிழ்ச் சங்க ஆண்டு பொதுக்குழு கூட்டம், தலைவர் ஆர்.கணபதியின் உரையுடன் துவங்கியது.

 

2010-11ம் ஆண்டில் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து செயலாளர் செல்லத்துரை விவரித்தார். ஆண்டு தணிக்கை அறிக்கையை சங்க பொருளாளர் கே.ஆவுடை நாயகம் வாசித்தார். சங்கத்தின் பொறுப்புக்கள் அனைத்தும் 2010-11 ம் ஆண்டு நிர்வாகக் குழுவினரிடம் இருந்து 2011-12 ஆண்டு புதிய நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த ஆண்டு சிறப்பாக செயல் புரிந்த சங்க நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. குவைத் தமிழ்ச் சங்க இணை செயலாளர் கே.ரமேஷ்பாபு நன்றி நவில, நிகழ்ச்சி இனிதே நிறைவுபெற்றது.

 

தினமலர் வாசகர் எஸ்.செல்லதுரை

 

Thursday, April 14, 2011

UTS NAMBIKKAI SWARANGAL 2011-15 April 2011

Vanakkam,

UAE Tamil Sangam Proudly presents "NAMBIKKAI SWARANGAL 2011"
Supported by "Cleanco" | Powered by "Almarai"-Quality you can trust

15-April-2011, 6pm at Sheikh Rashid Auditorium, Indian High School, Dubai
FREE ENTRY

Dance by Lawrence Raghavendra's Dance Team (Physically Challenged Dancers)
Dance : Kingkong Physically Challenged
Mimicry : Kalaimaamani Senthil's Asathal Mimicry Physically Challenged
Variety : Gokulnath
Song : Mr. Karthik (Al Noor Student) The boy who won't give up Autistic teen from Al Noor
Unbelievable Dances by - Al Noor Special Needs Children

A special surprise from UTS Members, 1st time in UAE - Keep guessing!

The show starts with Al Noor Special needs children dance be there @ 5.45pm to encourage the children. 15-April-2011, 6pm at Sheikh Rashid Auditorium, Indian High School, Dubai

Other Sponsors : Malabar Gold, Bank of Baroda, Aryaas Restaurant, AWRostamani Arabian Automobiles (Nissan), Real World Enterprise, Balaji Bhavan (Symbol of Quality & Taste), BrainOBrain, Chennai Jewellers, Colombo Tyres, UAE Exchange
Hospitality : Royal Palace
Printing Support : Solid Rock

C u on 15th April 2011 @ 5pm.
Thanks and Regards
UAE Tamil Sangam
http://www.uaetamilsangam.com

If you have any query please contact 050-5865375, 050-5866027

 

Monday, April 11, 2011

துபாயில் தமிழ்ப் புயல் விருது

துபாய் : துபாயில் தமிழ்த்துளி மன்றத்தின் சார்பில் தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு 2011 எனும் சிறப்பு நிகழ்ச்சி ஏப்ரல் 08ம் தேதியன்று மாலை ஸ்டார் சர்வதேசப் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த தமிழ்த்துளி மன்ற நிறுவனர் பிரியா விஜய், தனது தலைமையுரையில் இம்மன்றம், அமீரக மண்ணில் குழந்தைகளுக்காக தொடங்கப்பட்ட முதல் அமைப்பு எனக் குறிப்பிட்டார். இம்மன்றம் அமீரகத்தில் வாழ்ந்து வரும் தமிழ்க் குழந்தைகள் தங்களது தமிழ் பேச்சுத் திறனை வளர்க்க பாடுபடும் என்றார்.

 

மரியம் கபீர் வரவேற்புரை நிகழ்த்தினார். மன்ற ஒருங்கிணைப்பாளர் மஹேஸ்வரி, முனைவர் பர்வீன் சுல்தானா குறித்த அறிமுகவுரை நிகழ்த்தினார். முனைவர் பர்வீன் சுல்தானா தனது சிறப்புரையில் தமிழை உணர்வோடு கற்க வேண்டும் என்றார்.

 

மேலும் அமீரகத்தில் இதுபோன்றதொரு நிகழ்வினை நிகழ்த்தி வரும் தமிழ்த்துளி மன்றத்தைப் பாராட்டினார். அதனைத் தொடர்ந்து முனைவர் பர்வீன் சுல்தானாவுக்கு 'தமிழ்ப் புயல்' விருது வழங்கப்பட்டது. பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றோருக்கு பரிசுகளை முனைவர் பர்வீன் சுல்தானா வழங்கினார். பல்சுவை கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வில் காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன், பேராசிரியர் கலந்தர், வழக்கறிஞர் ஜீவகிரிதரன், டாக்டர் பர்வீன் பானு, பத்திரிகையாளர் வி.களத்தூர் ஷா, சங்கமம் தொலைக்காட்சியின் கலையன்பன், கவிஞர்கள் மல்லிக்கா, பாத்திமா ஹமீத் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 

குணா, நிகழ்வினை தொகுத்து வழங்கினார். நிகழ்விற்கான ஏற்பாடுகளை பிரியா, மகேஸ்வரி, கபீர், ரெங்கராஜன் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.

 

நமது செய்தியாளர் முதுவை ஹிதாயத்

 

NANDRI WWW.DINAMALAR.COM

 

Sunday, April 10, 2011

Ameeraga Thamiz Mandram Essay Writing Competition

Ameeraga Thamiz Mandram

organizes

Essay Writing Competition

for Tamilians residing in UAE only

Title
'Penn Kalviyin Avasiyam' (Necessity of Education to Women)

 • ·         Language: Tamil
 • ·         Size: Not more than 8 pages if hand written in A4 sheet and 6 pages if typed in A4.
 • ·         Both male & female of age above 15 years can participate.
 • ·         The writing should be your own creation.
 • ·         Last date of submission: before 20 April 2011 midnight 12
 • ·         You can write from home and submit through email atmuae@gmail.com or fax in 04 3908737
 • ·         Please mention your name, Contact number and email id while sending your essay.
 • ·         The winners will be announced in 'Naalai Namathe' Women's Day celebration Friday the May 6th 2011@ Higher Colleges of Technology for Women, Ghusais.
 •           The lucky winner will get the prize from the Chief Guest.

 
அமீரகத் தமிழ் மன்றம்

நடத்தும்

அமீரகத்தில் வாழும் தமிழர்களுக்கான

கட்டுரைப் போட்டி

தலைப்பு

'பெண் கல்வியின் அவசியம்'
 

 • ·         மொழி: தமிழ்
 • ·         கட்டுரை அளவு: A4 தாளில் கையால் எழுதினால் 8 பக்கங்களுக்கு மிகாமல், தட்டச்சு செய்திருந்தால் 6 பக்கங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
 • ·         15 வயதிற்கு மேற்பட்ட ஆண்- பெண் இருபாலரும் எழுதலாம்
 • ·         கட்டுரை உங்கள் சொந்த படைப்பாக இருத்தல் வேண்டும்.
 • ·         கட்டுரை வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 20 ஏப்ரல் 2011 இரவு 12 மணிக்குள்
 • ·         வீட்டிலேயே எழுதி சமர்ப்பிக்கலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் atmuae@gmail.com அல்லது 04 3908737 என்ற தொலைநகலில் (ஃபாக்ஸ்) அனுப்பவும்.
 • ·         கட்டுரையாளர் தங்களது பெயர், தொடர்பு கொள்ள வேண்டிய தொலைப்பேசி/ கைப்பேசி எண்கள், மின்னஞ்சல் முகவரியை மறக்காமல் குறிப்பிடவும்.

·         போட்டியில் வெற்றிப் பெற்றவர்கள் பற்றிய அறிவிப்பு 'நாளை நமதே' பெண்கள் தின சிறப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மே மாதம் 6 ஆம் தேதி 2011 பெண்கள் உயர்தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் நடைபெறவிருக்கும் விழாவில். சிறப்பு விருந்தினர் கையால் பரிசு பெறும் அரிய வாய்ப்பு.

Sunday, April 3, 2011

ஏப்ரல் 8ஆம் தேதி துபையில் நடைபெறும் விஜய் ஸ்டார் நைட் (VIJAY STAR NITE) அழைக்கிறோம்


வருகின்ற வெள்ளிக்கிழமை 8ஆம் தேதி துபையில் உள்ள Festival city ல் நடைபெறும் STAR VIJAY NITE என்ற நிகழ்ச்சிக்கு நண்பர்கள் அனைவரையும் அழைக்கிறோம்.

டிக்கெட் கிடைக்கும் இடம் : Karama Members - Balaji Bhavan (Karama - 3368455) Al Qusais Members - Yummy Restaurant (Al Qusais - 2677337) Sharjah and Ajman Members - Sangeetha Restaurant (06-5591102) International City Members contact Mr. Arun Kumar (055-1471959) - for Timing/Location Abu Dhabi Members please contact Mr. Balaji 050-9200516 மேலதிக தகவலுக்கு : http://www.uaetamilsangam.com

Vanakkam,


Good day. Great Discount for Star Vijay Nite on 8th April 2011 at Festival City Concert Arena with performances by Chiyan Vikram, Sneha, Shankar Mahadevan, Srinivas, Chinmayi, Suchitra,Gopinath, Sivakarthikeyan, Jodi Number Dance team and many others., Find attached Flyer To distribute tickets UAE Tamil Sangam team will be present on 3rd April and 4th April only from 5.30pm till 11:00pm at Dubai


Karama Members - Balaji Bhavan (Karama - 3368455) Al Qusais Members - Yummy Restaurant (Al Qusais - 2677337) Sharjah and Ajman Members - Sangeetha Restaurant (06-5591102) International City Members contact Mr. Arun Kumar (055-1471959) for Timing/Location. Abu Dhabi Members please contact Mr. Balaji 050-9200516 For others Ticket/Clarification please find attached STAR VIJAY NITE event "Email Flyer". Come and enjoy the evening with U(T)S. Thanks and Regards Ramesh Viswanathan (050-5865375) http://www.uaetamilsangam.com Humble request : Can you please ciculate this information If you have any query please contact 050-5865375, 050-4751352, 050-5866027Friday, April 1, 2011

ஷார்ஜாவில் ரத்ததான முகாம்

ஷார்ஜா : ஷார்ஜா இந்திய வர்த்தகக் குழு,கேரள மருத்துவ பட்டதாரிகள் சங்கம் மற்றும் ஷார்ஜா அரசின் மருத்துவத்துறையுடன் இணைந்து ரத்ததான முகாமினை மார்ச் 29ம் தேதியன்று நடத்தியது. ரத்ததான முகாமினை இந்திய கன்சுலேட்டின் சமூக விவகாரத்துறை கன்சல் ஃபிரான்சிஸ் ஸேவியர் ஸாக்ஸா துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் ஷார்ஜா இந்திய வர்த்தக்குழு தலைவர் சுதேஷ் அகர்வால், கேரள மருத்துவ பட்டதாரிகள் சங்க தலைவர் டாக்டர் சன்னி குரியன், இந்திய வர்த்தகக் குழுவின் இயக்குநர் ஜெனரல் ஸ்ரீபிரியா உள்ளிட்டோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர். கன்சல் ஃபிரான்சிஸ் ஸேவியர் இந்திய வர்த்தக்குழு ரத்ததானம் மூலம் மேற்கொண்டுள்ள சமுதாயப் பணிகளைப் பாரட்டினார். நூற்றுக்கும் மேற்பட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் பங்கேற்று ஷார்ஜா பகுதியில் நடைபெற்ற ரத்ததான முகாம்களில் அதிகமானோர் பங்கேற்ற முகாம் இது என தெரிவிக்கப்பட்டது.

 

இம்முகாமிற்கு டாக்டர் சன்னி மெடிக்கல் சென்டர், டிஃபனி, ஷார்ஜா இந்திய வர்த்தக மற்றும் கண்காட்சி மையம் ஆகியவை ஆதரவளித்தன.

 

 நமது செய்தியாளர் முதுவை ஹிதாயத்

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons