Google Plus LinkedIn Email

Friday, December 10, 2010

தினமலர் : செய்திகள் : துபாயில் கலையரங்கம் நிகழ்ச்சி










துபாய் : அமீரகத்தில் நவம்பர் 26 ம் தேதியன்று யு.ஏ.இ., தமிழ்ச் சங்கத்தின் சார்பில் கலையரங்கம் நிகழ்ச்சி வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. மாலை 7.30க்கு துவங்கிய நிகழ்வு நள்ளிரவு 12.30 வரை இடைவிடாத கேளிக்கையும், பொழுதுபோக்கும், உற்சாகமுமாய் நகர்ந்தது. நடனங்கள், இன்னிசைக் கச்சேரி, பலகுரல் நிகழ்ச்சிகள், கரகம் மற்றும் மேஜிக் ஷோ என பன்முகம் காட்டி பரவசப் படுத்தியது. சாந்தா கிருஷ்ணமூர்த்தி, ஷெரின், மீனா வெங்கட், நூரூதின் மற்றும் இந்திரா மோகன் தாஸ் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்வை தொடங்கி வைத்தனர். கீதா சுவாமிநாதனின் தொடக்கவுரையை தொடர்ந்து சித்ரா பிராஸ்பரின் வரவேற்புரை இடம்பெற்றது.

இந்திய சின்னத்திரை கலைஞர்களும், நடனக் குழுவினரின் நடனங்களுக்கும் இடையில், யு.ஏ.இ., தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர்களின் குழந்தைகள் என நடனங்கள் அற்புதமாக அரங்கேறின. ஸ்ரீ கங்கா ரமேஷ் இந்த நடனங்களை திறம்பட அமைத்திருந்தார். இந்த கலைநிகழ்ச்சியில் 2 முதல் 18 வயது வரையிலான மொத்தம் 54 குழந்தைகள் பங்கேற்று தங்களின் திறமைகளை வெளிக்காட்டினர். முதன்முறையாக, திரையிசையின் மலரும் நினைவுகளாக, நம் நேற்றைய திரை இசைப்பாடல்களுக்கு கங்கா,சித்ராவின் உதவியுடன் அமைத்திருந்த நடனங்கள் நேர்த்தியாய் பார்வைக்கு விருந்தாயின. தமிழகத்தில் இருந்து அமீரகம் வந்த கலைச்செல்வன் டிங்கு மற்றும் குழுவினர், சங்க உறுப்பினர்களின் திறமைகளை பார்த்து அதிசயித்து வாழ்த்துக்களும் தெரிவித்தனர். நிகழ்வில் அணி சேர்க்க, ஒரு அதிரடி விளையாட்டும் இருந்தது. தம்பதியினருக்கும், இளைஞர்களுக்குமென இரு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசாக டிவிடி ப்ளேயர் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக வழங்கப்பட்டது. தமிழ்ச் சங்கத் தலைவரின் நன்றியுரையடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுபெற்றது.

\ தினமலர் வாசகர் ரமேஷ் விஸ்வநாதன்

Saturday, November 20, 2010

UAE TAMIL SANGAM AND SURIYA KATHIR Proudly Presents MALABAR GOLD's KALAI ARANGAM 2010‏

 
அன்பு நண்பர்களே, பெரு நாள் வாழ்த்துக்கள்
 
நம் ஊர் விட்டு இந்த ஊர் வந்து உழைத்து களைத்த உங்களை, உற்சாகப்படுத்த ஊக்கம் தர..... இதோ UAE தமிழ்ச் சங்கம் அன்புடன் அழைக்கிறது.
உங்கள் ஒரு மாலையை இனிதாக்குகிறது.

 
UAE தமிழ் சங்கம் சூரிய கதிருடன் இணைந்து பெருமையுடன் வழங்கும்
மலபார் கோல்டின் 'கலை அரங்கம் 2010'
நூர் அல் தீன் LLC யின் பங்கேற்பில், ஊடக பங்காளர் : 'கேப்டன் டிவி'
(100% பொழுதுபோக்கு, பரவசம் மற்றும் உற்சாகம்)

 
நிதி திரட்டும் விழா:
நாள்: 26  நவம்பர்,2010 – வெள்ளிக்கிழமை மாலை. 'சின்னத்திரை கொண்டாட்டம்'
மின்னும் தொலைக்காட்சி தாரகைகளின் அணிவகுப்பு. சன் டிவி, விஜய் டிவி மற்றும் கலைஞர் டிவியின் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் உங்களை நேரில் மகிழ்விக்க வருகிறார்கள். தயாராகுங்கள் உங்கள் அபிமான நட்சத்திரங்களுடன் சங்கமிக்க.

 
அனுமதி வாசல் திறப்பு: மாலை 4.30,
நிகழ்ச்சி ஆரம்பம்: மாலை 6.00
அரங்கம்: அல் மதீனா கிரிக்கெட் பயிற்ச்சி கூடம், சார்ஜா புட்பால் கிளப்பின் எதிர்ப்புறம். சார்ஜா கிரிக்கெட் கிளப்பின் பின்புறம்.

இந்நிகழ்ச்சியின் நிதி ஒரு மகத்தான காரணத்துக்காக என்பதை மனதில் கொள்ளுங்கள்.

மன வளர்ச்சி குன்றிய மழலைகள் காப்பகம் மெர்சி நிகேத்தனின்
http://www.mercyniketan.org  பராமரிப்பு மற்றும்
பார்வை இழந்த குழந்தைகளின் காப்பகம் இந்திய அசோசியேஷன் htp://www.theiab.org செலவுக்காக இந்த தொகை பயன்படுத்தப்படும்.

உங்கள் ஊக்கத்தின் உரைகல்,  உற்சாகத்தின் திறவுகோல் இந்த நிகழ்ச்சி

டிக்கெட் கிடைக்குமிடங்கள்.
துபாய்: சிவ்ஸ்டார் பவன், பெருமாள் குரோசரி,  மூன்லைட் ரெஸ்டாரண்ட், யம்மி ரெஸ்டாரண்ட், அமராவதி ரெஸ்ட்டாரண்ட், சரவண பவன்
சார்ஜா: சபையர் ரெஸ்ட்டாரண்ட், சங்கீதா ரெஸ்ட்டாரண்ட், சரவண பவன், மெட்ராஸ் குரோசரி,
அஜ்மான்: சிவ்ஸ்டார் பவன், இந்தியா பேலஸ்


நீங்கள் வாங்கும் டிக்கெட்டில் ஒரு அதிர்ஷடமும் இருக்கிறது. குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் நுழைவு சீட்டுக்கு, மின்னும் தாரகைகளுடன் உணவு உண்ணும் அதிரடி அதிர்ஷ்ட வாய்ப்பும் உள்ளது.

http://www.uaetamilsangam.com/upcomingevent.asp
 
நன்றி

Ramesh Viswanathan
+971 50 5865375
 
 
UAE TAMIL SANGAM AND SURIYA KATHIR  Proudly Presents
MALABAR GOLD's KALAI ARANGAM 2010

In Association with Noor Al Deen LLC
(100%
Entertainment, Excitement and Enjoyment)

26-NOVEMBER-2010-FRIDAY.  "CHINNATHIRAI KONDATTAM"
Shining Stars from SUN TV, VIJAY TV AND KALAIGNAR TV. Get ready to shine with the Stars

Gates Open : 4.30pm, Show Starts : 6.00pm   |  Venue : Al Madina Cricket Training Club, Sharjah
Behind Sharjah Cricket Stadium / Fruits and Vegetables Market, Opposite Sharjah Football Club.

 

FUNDRAISING EVENT

To help The Mercy Niketan (Special Need Children) http://www.mercyniketan.org
To help Indian Association for the Blind Children http://www.theiab.org 

 

Tickets available at 
DUBAI : Sivestar Bhavan, Saravana Bhavan, Perumal Grocery, Moonlight Restaurant, Yummy Restaurant, Amaravathi Restaurant, Anjappar Restaurant
SHARJAH : Safire Restaurant, Saravana Bhavan, Madras Grocery

For more information contact : +971 50 5865375   (First come first serve basis )












Sunday, October 17, 2010

துபாயில் நகைச்சுவை நிகழ்ச்சி & யு.ஏ.இ தமிழ் சங்கத்தில் கிரிக்கெட் போட்டிகள்

துபாய் : துபாயில் மருத்துவ விழிப்புணர்வு மற்றும் நகைச்சுவை நிகழ்ச்சி ஆகியன அக்டோபர் 14ம் தேதியன்று மாலை நாசர் ஸ்கொயர் லேண்ட்மார்க் ஹோட்டலில் நடைபெற்றது. வளைகுடா தமிழர் அமைப்பின் நிறுவனர் எஃப்.எம்.அன்வர் பாஷா தலைமை தாங்கினார். சபீர் வரவேற்றார். பிரைம் மெடிக்கல் சென்டரின் நரம்பியல் சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் ராஜரத்தினம் மருத்துவ விழிப்புணர்வு உரை நிகழ்த்தினர். அவர் தனது உரையில் சிறுவர் முதல் பெரியவர் வரை ஏற்படும் நரம்பியல் நோய்கள் குறித்து வீடியோ விளக்கப்படங்களுடன் விவரித்தார். அத்தகைய சூழ்நிலையில் மருத்துவரின் உதவியை நாடவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

 

நகைச்சுவை நடிகர் பாண்டு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தனது நகைச்சுவையின் மூலம் பார்வையாளர்களுக்கு நகைச்சுவை விருந்தளித்தார். அவர் தனது உரையில் கடல் கடந்து வாழ்ந்து வரும் தமிழ் மக்கள் தங்களது வருமானத்தை சிறப்பான வழியில் சேமிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். பல்வேறு படங்களில் தனது நகைச்சுவை அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவையின் முஹம்மது மஃரூப், அம்மன் ரியல் எஸ்டேட் பொன்னையன் உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு விருந்தினர்களுக்கு ஈடிஏ லங்கா இயக்குநர் இஸ்மாயில், அஜ்மான் சமூக சேவகர் மூர்த்தி, துபாய் தமிழ்நாடு பண்பாட்டுக் கழக நிறுவன புரவலர் திருவிடச்சேரி எஸ்.எம். ஃபாரூக், யுஏஇ தமிழ்ச் சங்க தலைவர் ரமேஷ் உள்ளிட்டோர் நினைவுப் பரிசுகளை வழங்கினர். சாதிக் நன்றி கூறினார். நிகழ்வில் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்விற்கான ஏற்பாடுகளை திருச்சி அம்மன் ரியல் எஸ்டேட், அன்வர் ரியல் எஸ்டேட் மற்றும் துபாய் மரைக்காயர் ரியல் எஸ்டேட் ஆகிய நிறுவனங்கள் செய்திருந்தன.

நமது செய்தியாளர் முதுவை ஹிதாயத்

 

 

சார்ஜா : அக்டோபர் 7 மற்றும் 8 ஆகிய இரண்டு தேதிகளிலும் மின்னொளியில் சார்ஜா விளையாட்டு அரங்கத்தில் கிரிக்கெட் விளையாட்டை யு.. தமிழ் சங்கம் தனது உறுப்பினர்களுக்காக நடத்தியது. ஆரம்பத்தில் 8 குழுக்களையே திட்டமிட்டிருந்தாலும், எல்லோரின் புருவ உயர்த்தலோடு 10 அணிகள் தங்கள் ஒப்புதலை அளித்து அணி சேர்த்தன. முந்தைய திட்டமிட்டலின் அடிப்படையில் முதலில் பதிவு செய்த 8 அணிகளைக் கொண்டே டி.என்.சி.டி.,2010 வீறு நடை இட்டது. அத்தனை உறுப்பினர்களும் தமிழ்ச் சங்கத்தை சார்ந்தவர்களே என்பது தனிச் சிறப்பு.

 

பங்கு பெற்ற அணிகள் விவரம்: மதுரை சார்ஜர்ஸ், கோயம்புத்தூர் சேலன்ஜர்ஸ், சென்னை கிங்ஸ், தஞ்சாவூர் ராயல்ஸ், திருச்சி ரைடர்ஸ், திருநெல்வேலி டேர் டெவில்ஸ், மெட்ராஸ் கிங்ஸ் லெவன், கும்பகோணம் நைட்ஸ். பெண்களை கண்களென போற்றும் நம் தமிழ்க் கலாச்சாரத்தின் பெருமை மிளிர, மகளிர் அணியும் யு..., யில் முதன் முறையாக களம் இறங்கி பங்கு பெற்றது. விடிகாலை 3 மணிவரை குடும்பங்களும் குழந்தைகளும் சுமார் 75% அரங்கை நிறைத்து இருந்தது ஒரு ஆச்சர்யமே. அனைவரும் மகிழ்ந்திருக்க இப்படி ஒரு விளையாட்டு போட்டியை வெற்றிகரமாக நடத்தியதில் பெருமையும் பெருமிதமும் கொள்கிறது யு..., தமிழ்ச் சங்கம். அணிகளுக்கிடையே நிலவிய விளையாட்டு பெருந்தன்மையும், நட்பும், உற்சாகமும் இந்த நிகழ்வின் அணிகலன்களே.

 

யு..., தமிழ்ச் சங்கம் போக்குவரத்து, சிற்றுண்டி, இரவு உணவு உள்ளிட்ட இன்னும் இதர ஏற்பாடுகளை பார்வையாளருக்கும் விளையாட்டு வீரருக்கும் செவ்வனே அளித்து பெருமை தேடிக் கொண்டது. மின் குறுந்தகவல்களின் மூலம் போட்டி நேரம், முடிவுகள் பற்றிய உடனுக்குடன் தகவல்களை அவரவர் கைபேசிக்கு அனுப்பி ஆச்சர்யத்தை அன்புடன் அளித்தது. போட்டியின் இறுதி நாளில் வருகை தந்த சுவாமி நாதன், மதன் ஆகியோர் வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.

தினமலர் வாசகர் லாரன்ஸ் பிரபு

 

 

 

Wednesday, October 6, 2010

UTS Member's "TNCT" Tamil Nadu Cricket Tournament

 

Thursday, September 9, 2010

Eid Mubarak





Monday, August 9, 2010

The Amul Vidya Shree Award


The Amul Vidya Shree Award

Amul takes immense pleasure in presenting ‘The Amul Vidya Shree Award’, India’s first of its kind award that recognises and rewards Standard X toppers across India.

The awards are:

* Memento

* Citation

* A Gift hamper of books

The winner will be featured in one of India’s leading newspaper and will get national recognition.



Terms and Conditions:

Application for Awards must be made by the Principal of the school as per the application form.

* To be eligible for the Amul Vidya Shree Award, the student must have passed Std.10 in the academic year 2009-10 at the State or Central Board Examinations in any medium and must have scored the highest aggregate marks in the school.

* Online application entries should be done by 10th August, 2010.

* From the entries received, students scoring the highest aggregate marks will be selected for the Awards.

The decision of GCMMF Ltd., Anand will be final in all matters as regards this Award.



More Details please visit :www.amul.com



Sunday, August 8, 2010

துபாயில் அமீரக நகைச்சுவையாளர் மன்றத்தின்


துபாய் : துபாயில் அமீர கைச்சுவையாளர் ன்றத்தின் ஆகஸ்ட் மாத நிகழ்ச்சி ஆகஸ்ட் 06ம் தேதியன்று மாலை ஆப்பிள் ர்வதேசப் ள்ளியில் டைபெற்றது. அமீர கைச்சுவையாளர் ன்ற நிறுவப் புரர் குணா நிகழ்வினை துவக்கி வைத்தார். வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்ற கைச்சுவையாளர் ன்றத்தின் தார ந்திரத்தை விவரித்தார்.கைச்சுவையாளர் ன்ற லைவர் சுரேஷ் வேற்புரை நிகழ்த்தினார். அவர் து உரையில் ல்வேறு வேலைப்பளுவினிடையே கைச்சுவையாளர் ன்ற நிகழ்வில் ங்கேற்க ஆர்வமுடன் ந்திருக்கும் அனைவரையும் வேற்றார். ன்றத்தின் நிகழ்வுகளில் அனைவரும் ங்கேற்று ஒத்துழைப்பு ல்கிட கேட்டுக் கொண்டார். சென்னையைச் சேர்ந்த ஆலோசர் நியாஸி பீர் முஹம்மது ல்வேறு கைச்சுவை நிகழ்வுகளை நினைவு கூர்ந்து அரங்கை அதிரச் செய்தார். ஞ்சு, ன், சிவகுமார், உள்ளிட்ட ர் கைச்சுவைகளை கிர்ந்து கொண்டர். அஸ்வதி ற்றும் வெங்கடேஷ் ஆகியோர் பாடல் பாடினர். நிகழ்வில் கைச்சுவை ஆர்வர்கள் ர் ஆர்வமுடன் ங்கேற்றுச் சிறப்பித்தர். நமது செய்தியாளர் முதுவை ஹிதாயத்

 

நன்றி : www.dinamalar.com

 

 


 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons