Google Plus LinkedIn Email

Friday, September 30, 2011

அபுதாபி தமிழ் சங்கத்தின் சார்பாக செப்டம்பர் 23ம் தேதியன்று ரத்த தான முகாம் நடைபெற்றது




அபுதாபி : அபுதாபி தமிழ் சங்கத்தின் சார்பாக செப்டம்பர் 23ம் தேதியன்று ரத்த தான முகாம் நடைபெற்றது அபுதாபியில் உள்ள கலிபா ரத்த வங்கியில் சங்கத்தின் இளைஞரணி சார்பில் இளைஞர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.


முகாமிற்கு சங்கத்தின் தலைவர் ரெஜினால்டு சாம்சன் ஏற்பாடு செய்தார். மேலும் மருத்துவமனையின் தலைமை மருத்துவர்கள் ரத்த தானத்தின் நன்மைகளை பற்றி இளைஞர்களுக்கு எடுத்து கூறினார்கள்.


மேலும் அதிகமான தமிழ் அமைப்புகள் ரத்த தான முகாம் நடத்துவதை வெகுவாக பாராட்டினார்கள்.


- தினமலர் வாசகர் நிசார் அகமது

Nandri. www.dinamalar.com


Saturday, September 17, 2011

குழும நண்பர்கள் மற்றும் அமீரக தமிழர்களுக்கு அன்பு வேண்டுகோள்

**** நண்பர்கள் உடனடியாக செயல்படவும் URGENT FRIENDS ACT IMMEDIATELY *****

ஹலோ எஃப் 24 மணிநேர தமிழ் ஒலிபரப்பு என்று சொல்லி விட்டு தமிழின ஒழிப்பை முன்னிறுத்திய சிங்களவர்களின் பாடலுக்காக மூன்று மணி நேரம் ஒதுக்கும் ஹலோ எஃப் எம் சிங்களப் பாடல்களை ஒலிபரப்புவதை உடனே நிறுத்த வேண்டும் என அமீரகத் தமிழர்கள் இணைந்து குரல் கொடுப்போம்.

இந்தச் செய்தியை உலகத் தமிழர்கள் அனைவரும் உடனே உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் உங்கள் எதிர்ப்பை ரேடியோ ஹலோவின் முகநூல் பக்கத்திலும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.


Friday, September 16, 2011

NEWS UPDATES 17-09-2011

Dinamalar

ஜாமின் கோரி கனிமொழி மீண்டும் மனு: அக்., 1ல் விசாரணை

புதுடில்லி : "2ஜி' ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட தி.மு.க., எம்.பி., கனிமொழி, டில்லி சிறப்பு கோர்ட்டில் நேற்று மீண்டும் ஜாமின் கோரி, மனு தாக்கல் செய்துள்ளார். இந்த ஜாமின் மனு, வரும் அக்டோபர் 1ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கை விசாரித்து வரும், சி.பி.ஐ., அதிகாரிகள், இதுவரை இரண்டு குற்றப் பத்திரிகைகளை, கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளனர். இரண்டாவது குற்றப்பத்திரிகையில், தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., கனிமொழி, கலைஞர் "டிவி' எம்.டி., சரத்குமார் ஆகியோரின் பெயர் இடம்பெற்றது.ஸ்பெக்ட்ரம் ...

போக்குவரத்து துறைக்கு 7.79 கோடி ரூபாய் வருவாய் இழப்பு

போக்குவரத்து துறையில், சட்டம், விதிமுறைகளை கடைபிடிக்காமல் கோடிக்கணக்கான ரூபாய், அரசுக்கு வருவாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. தணிக்கைத் துறை இதை பலமுறை சுட்டிக்காட்டியும், போக்குவரத்து துறை கண்டுகொள்ளவில்லை என்ற தகவல் அம்பலமாகியுள்ளது. இந்திய தணிக்கைத் துறை, 2009-10, மார்ச் 31ம் வரை, போக்குவரத்து துறையின் கணக்குகளை ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அதில், சட்டம், விதிமுறைகள்படி வரிகளை முறையாக வசூலிக்காமல், குறைவாக வசூலித்தது கண்டறியப்பட்டுள்ளது.கடந்த 1974ல் உருவாக்கப்பட்ட, தமிழ்நாடு மோட்டார் வாகன வரி சட்ட விதியின்படி, வாகன ...

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாரா மாஜி நேரு

சென்னை :வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், முன்னாள் அமைச்சர் நேரு மற்றும் உறவினர்களுக்கு சொந்தமான சென்னை, திருச்சி, கோவையில் உள்ள வீடுகள் மற்றும் கட்டுமான நிறுவன அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் நேற்று அதிரடி, "ரெய்டு' நடத்தி, ஆவணங்களை அள்ளிச் சென்றனர். கடந்த தி.மு.க., ஆட்சிக் காலத்தில், 2006 முதல் 2011 மே மாதம் வரை தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் நேரு. சமீபத்திய சட்டசபைத் தேர்தலில், திருச்சியில் போட்டியிட்டு தோல்வியுற்ற நிலையில், நில அபகரிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டு, தற்போது சிறையில் உள்ளார். அமைச்சராக ...

காங்., தனித்து போட்டி: தி.மு.க., வெளியேற்றவில்லை: தங்கபாலு

சென்னை: ""தமிழகத்தில் வர இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும். தி.மு.க., எங்ளை வெளியேற்றவில்லை,'' என்று தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தெரிவித்துள்ளார். தமிழக உள்ளாட்சித் தேர்தல் பற்றி, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் மற்றும் தலைவர்கள், நிர்வாகிகள் அடங்கிய சிறப்புக் கூட்டம், சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. இது குறித்து, தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் வர இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில், காங்கிரஸ் 12,618 இடங்களில் தனித்துப் போட்டியிட உள்ளது. இது, மத்திய, ...

2016ல் ஆட்சியை கைப்பற்றுவோம்: வைகோ பேச்சு

திருநெல்வேலி : ""வரும் 2016ல் ம.தி.மு.க., தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றும்,'' என நெல்லை ம.தி.மு.க., மாநாட்டில் வைகோ பேசினார். கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் தலைமை வகித்தார். எம்.பி., கணேசமூர்த்தி, அவைத்தலைவர் மாசிலாமணி, துணைப்பொதுச்செயலாளர்கள் மல்லைசத்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநாட்டில் வைகோ பேசியதாவது: 5 ஆண்டுகள் அ.தி.மு.க., கூட்டணியில் இருந்த நாம் எந்தவித காரணமும் கூறப்படாமல் தூக்கி எறியப்பட்டோம். சட்டசபை தேர்தலை புறக்கணித்த பின் ம.தி.மு.க., வுக்கு மக்கள் மத்தியில் நம்பகத்தன்மை அதிகரித்துள்ளது. 2016 ல் ம.தி.மு.க., ஆட்சியை பிடிக்கும். ... Dinamani

கடைசி ஒருதினப் போட்டியிலும் இங்கிலாந்து வெற்றி

லண்டன், செப்.16: கார்டிப், சோபியா கார்டன் மைதானத்தில் இங்கிலாந்து இந்தியா இடையிலான கடைசி ஒருதினப் போட்டி நடைபெற்று வருகிறது.இத..

திண்டுக்கல் அருகே ஓடும் பஸ்ஸில் பெட்ரோல் குண்டு வீச்சு: 2 பேர் காயம்

திண்டுக்கல், செப்.16: திண்டுக்கல் அருகே ஓடும் பஸ்ஸில் மர்ம கும்பல் பெட்ரோல் குண்டு வீசியதில் 2 பயணிகள் காயம் அடைந்தனர்.இரவு 10..

பெங்களூரில் நடக்கவிருந்த தக்காளி திருவிழாவுக்கு தடை

பெங்களூர், செப்.16: பெங்களூரில் செப்.18ம் தேதி நடக்கவிருந்த தக்காளி திருவிழாவுக்கு முதல்வர் சதானந்தகௌடாவின் உத்தரவின்பேரில் தடைவித..

ஊழல் அதிகாரிகளின் விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும்: லோக் ஆயுக்த நீதிபதி சிவராஜ்பாட்டீல்

யாதகிரி, கர்நாடகா, செப்.16: ஊழல் அதிகாரிகளின் விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும் என்று லோக் ஆயுக்த நீதிபதி சிவராஜ்பாட்டீல் தெரி..

யஷ்வந்தபுரம்-கோயமுத்தூர் இடையே வாராந்திர சிறப்புரயில்

பெங்களூர், செப்.16: பெங்களூர் யஷ்வந்தபுரம்-கோயமுத்தூர் இடையே வாராந்திர அதிவேக சிறப்புரயில்சேவையை தென்மேற்கு ரயில்வே தொடங்கியுள்ளது..

DinaThanthi

ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார், டிராவிட் - தினத் தந்தி

தினத் தந்திஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார், டிராவிட்தினத் தந்திஇந்திய அணியின் மூத்த வீரர் ராகுல் டிராவிட்டின் ஒரு நாள் கிரிக்கெட்டின் வாழ்க்கை நேற்றுடன் நிறைவு பெற்றது. இந்திய கிரிக்கெட் அணியின் `சுவர்' என்று அழைக்கப்படுபவர், ...மேலும் பல »

சமையல் கியாஸ் விலை உயர்வு திடீர் ஒத்திவைப்பு - தினத் தந்தி

சமையல் கியாஸ் விலை உயர்வு திடீர் ஒத்திவைப்புதினத் தந்திகூட்டணி கட்சிகளின் கடும் எதிர்ப்பால், சமையல் கியாஸ் விலை உயர்வு முடிவை மத்திய அரசு திடீரென்று ஒத்தி வைத்தது. பெட்ரோல் விலையை இந்த ஆண்டில் மட்டும் லிட்டருக்கு 10 ...மேலும் பல »

அரசு டவுன் பஸ்களை சிறைபிடித்து பாலிடெக்னிக் கல்லூரி ... - தினத் தந்தி

அரசு டவுன் பஸ்களை சிறைபிடித்து பாலிடெக்னிக் கல்லூரி ...தினத் தந்திபவானி அருகே பஸ்சில் இருந்து கீழே விழுந்த மாணவியை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்க நடவடிக்கை எடுக்காததை கண்டித்து 3 அரசு பஸ்களை பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் ...மேலும் பல »

தலைமை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை மாவட்ட தொடக்க கல்வி ... - தினத் தந்தி

தலைமை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை மாவட்ட தொடக்க கல்வி ...தினத் தந்திநடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வுக்கான பணி நியமன ஆணையை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சுடலைகண்ணு வழங்கினார். இந்த ஆண்டுக்கான ஆசிரியர்கள் மாறுதல் மற்றும் ...மேலும் பல »

பெட்ரோல் மீதான மாநில அரசின் வரியை குறைக்க பரிசீலனை சதானந்த ... - தினத் தந்தி

பெட்ரோல் மீதான மாநில அரசின் வரியை குறைக்க பரிசீலனை சதானந்த ...தினத் தந்திபெட்ரோல் மீதான மாநில அரசின் வரியை குறைக்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது என்று முதல்-மந்திரி சதானந்த கவுடா கூறினார். முதல்-மந்திரி சதானந்த கவுடா நேற்று தனது இல்ல ...மேலும் பல »

Malaimalar

கனிமொழிக்கு ஜாமீன் கோரும் மனு: அரசியல் நோக்கத்தோடு நடத்தப்படும் வழக்காகவே தெரிகிறது; கருணாநிதி அறிக்கை

கனிமொழிக்கு ஜாமீன் கோரும் மனு அரசியல் நோக்கத்தோடு நடத்தப்படுகின்ற வழக்காகவே தெரிகிறது என்று கருணாநிதி கூறியுள்ளார். இதுகுறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அலைக்கற்றை ஒதுக்கீடு குறித்து விசாரணையில் சட்ட விவகாரம் சம்மந்தமாக தொடர்புடையவர்கள் எனப் பலர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். பல மாதங்கள் ஆகியும் கூட அது சம்பந்தமாக விசாரணை எதுவும் நடைபெறாமல் கைதானவர்களுக்கு ஜாமீன் வழங்கப்படாமல், அதற்கான வழக்கு நடைபெறுகின்ற நீதிமன்றத்தில் ஏதேதோ காரணங்களைக்

தங்கம் விலை பவுனுக்கு ரூ.552 குறைந்தது

பவுன் தங்கம் நேற்று ரூ.552 குறைந்தது விற்பனையானது. இது பெண்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், தொடர்ந்து விலை குறையுமா? என்று அவர்கள் மத்தியில் ஏக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. விண்ணை தாண்டிச்சென்ற தங்கம் தங்கத்தின் மீதான முதலீடு மற்றும் சர்வதேச அளவிலான மாற்றம், அமெரிக்க டாலர் மதிப்பு ஆகியவற்றின் மூலம் ஏறி இறங்கும் தங்கத்தின் மதிப்பு கடந்த சில ஆண்டுகளாக ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு மட்டும் சுமார் 6 ஆயிரம் ரூபாய் அளவுக்கு பவுன் தங்கம் விலை ஏறியது. இந்த நிலையில்

தனியார் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கியதில் அண்ணா பல்கலைக்கழகம் விதிமுறைகளை மீறியுள்ளது: தணிக்கை குழு குற்றச்சாட்டு

தமிழக அரசின் 2009- 10-ஆம் நிதியாண்டின் வரவு- செலவு கணக்குகளை ஆய்வு செய்த, மத்திய கணக்கு தணிக்கை துறை சட்ட சபையில் தனது அறிக்கையை தாக்கல் செய்தது. இதில், அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடுகள் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளன. தனியார் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கியது. கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி

அரக்கோணம் ரெயில் விபத்து: விசாரணை அறிக்கை 10 நாட்களில் தாக்கல்- தென்மண்டல ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் பேட்டி

அரக்கோணம் அடுத்த சித்தேரியில் நின்றிருந்த பயணிகள் ரெயில் மீது, மின்சார ரெயில் மோதியது. இதில் 10 பேர் பலியானார்கள். 86 பேர் காயம் அடைந்தனர். இதில் 39 பேர் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் தென் மண்டல ரெயில்வே

ஜெயலலிதாவை அவதூறாக பேசிய வழக்கு: பொன்முடிக்கு காவல் நீட்டிப்பு

திருவாரூரில் கடந்த ஜூன் மாதம் 5-ந் தேதி தி.மு.க. சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி மற்றும் கட்சி முன்னணி தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடி முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை அவதூறாகவும், மிரட்டல் சினிமா Go to Top of the Page

ThatsTamil

உறவுக்காரப் பெண் சரண்யாவை மணந்தார் இயக்குனர் சற்குணம்

தஞ்சை: களவாணி புகழ் இயக்குனர் சற்குணம் தனது உறவுக்காரப் பெண்ணான சரண்யாவை மணந்தார்.களவாணி படம் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் சற்குணம். அவருக்கும், அவரது உறவுக்காரப் பெண்ணான சரண்யாவுக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அவர்கள் திருமணம் நிச்சயி்த்தபடி நேற்று (15-ம் தேதி) தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு தேத்தாடிக் கொல்லை, ஆம்பலாப்பட்டு வடக்கு கிராமத்தில் நடந்தது. வேத விற்பன்னர்கள்

புத்தத் துறவி 'தாமோ'வாக சூர்யா!

ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் ஏழாம் அறிவு படத்துக்கு ரூ 10 கோடி செலவில் கிராபிக்ஸ் அமைத்துள்ளார்களாம். காட்சியின் முக்கியத்துவம் கருதி இந்த காட்சிகளுக்கு மிகுந்த தாராளம் காட்டியுள்ளார் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின்.ரஜினியின் எந்திரனுக்கு கிராபிக்ஸ் காட்சிகளை அசத்தலாக அமைத்து பிரமிக்க வைத்த அமெரிக்காவில் உள்ள ஸ்டான்வின்ஸ்டன் ஸ்டுடியோவில்தான் இந்தப் பணிகள் நடக்கிறதாம். இந்தப்

கைமாறிய விக்ரமின் ராஜபாட்டை!

விக்ரம் நடிக்க சுசீந்திரன் இயக்கும் ராஜபாட்டை படத்தை பிரபல வர்த்தகர் பிரசாத் வி பொட்லூரி வாங்கிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெய்வத் திருமகள் படத்துக்குப் பிறகு விக்ரம் நடிக்கும் அதிரடி ஆக்ஷன் படம் இந்த ராஜபாட்டை. தெலுங்கில் பிரபலமான தீக்ஷா சேத் நாயகியாக அறிமுகமாகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படம் ரமேஷ் பாபுவின் கனகதாரா பேனரில்

செல்வராகவன் குடும்பத்தைக் கெடுக்க முயற்சிக்கவில்லை - ஆன்ட்ரியா

செல்வராகவன் குடும்பத்தை நான் கெடுக்க முயற்சித்ததாக கூறுவதில் எந்த உண்மையும் இல்லை என்று நடிகை ஆன்ட்ரியா கூறினார்.செல்வராகவனுக்கும் அவரது முதல் மனைவி நடிகை சோனியா அகர்வாலுக்கும் பிரச்சினை ஏற்பட்டு விவாரத்து வரை போக காரணமானவர் நடிகை ஆன்ட்ரியாதான் என்று கூறப்பட்டது.இதுகுறித்து ஏராளமான செய்திகள் ஊடகங்களில் வந்தன. இதை உறுதிப் படுத்தும் வகையில் ஆன்ட்ரியா, செல்வராகவனின்

விசித்ராவின் தந்தையைக் கொன்றது ஏன்?- கொள்ளையர்கள் வாக்குமூலம்

ஸ்ரீபெரும்புதூர்: உல்லாசமாக வாழத் தான் நடிகை விசித்ராவின் தந்தையைக் கொலை செய்து நகை, பணத்தைக் கொள்ளையடித்ததாக கைதான 2 வாலிபர்கள் தெரிவித்துள்ளனர்.நடிகை விசித்ராவின் சொந்த ஊர் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்ச்சத்திரம் அருகே உள்ள செல்லம்பட்டறை ஆகும். இங்கு அவரது தந்தையின் பூர்வீக நிலங்கள், வீடு ஆகியவை உள்ளன.இந்த வீட்டில் விசித்ராவின் தந்தை வில்லியம்ஸ் மற்றும் தாயார் மேரி Tamilcinema

Dinamani

காத்திருக்கும் சினேகா!

நான்கு படமாக இருந்தாலும் அது ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்க கூடிய அளவிற்கு நல்ல படமாக இருக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை என்கி..

நடிகை நிகிதாவுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

பெங்களூரு, செப்.15: கன்னட திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அண்மையில் நடிகை நிகிதாவுக்கு விதித்திருந்த தடையை நீக்கிக் கொண்டது.கன..

நடிகை டாப்சி தமிழ் நடிகர் மகத்துடன் காதலா?

ஆடுகளம் படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்த டாப்சி தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார்.  இவருக்கும் தமிழ் நடிகர் மகத்துக்கு..

இனி வயதிற்கேற்ற கேரக்டரில்தான் நடிப்பு!

பொதுவாக சினிமாத்துறையினர் தங்களது உண்மையான வயதை வெளியில் சொல்ல தயங்குவார்கள். ஆனால் மங்காத்தா படத்தில் தனக்கு 40 வயது என்பதை வெளிப..

படப்பிடிப்பு இல்லையென்றால் குளிர்ச்சியான இடங்களுக்கு போய் விடுவேன்

சுல்தான் தி வாரியர் படத்தில்  நான் சூப்பர் ஸ்டான் ரஜினி சாருடன் இணைந்து நடித்துள்ளேன். அவருடன் நடிபேன் என்று கனவில் கூட நினைத.. விமர்சனம்

Wednesday, September 14, 2011

வளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள் மின்னஞ்சல் குழுமத்தில் இணைவது எளிது

அன்பு நண்பருக்கு,

 

வணக்கம்.

 

நமது முகபுத்தக நண்பர்களிடம் இருந்து "வளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள் மின்னஞ்சல் குழுமம் (Gulf Tamil Nanbarkal Mail Group)"  எப்படி இணைவது என்று கேட்டு மின்னஞ்சல் அனுப்பயுள்ளனர். நமது குழுமத்தில் இணைவது மிகவும் எளிது.

 

நண்பர்கள் கீழ்க்கண்ட முறைகளை பின்பற்றினால் போதும்:

 

மின்னஞ்சல் வழியாக இணைவது:

 

 

01.     உங்களுடைய மின்னஞ்சலில் இருந்து gulf_tamilnanbarkal-subscribe@yahoogroups.com என்ற முகவரிக்கு ஒரு சிறிய மின்னஞ்சல் அனுப்புங்கள்.

02.     உங்களுக்கு உடனே உங்களுடைய சந்தாவை உறுதிபடுத்த வேண்டி Yahoogroupsல் இருந்து ஒரு மின்னஞ்சல் வரும் (சில நேரங்களில் இந்த மின்னஞ்சல் உங்களுடைய <Spam Folder> போல்டருக்கு சென்றுவிடும். அதனால் <Spam Folder> ஸ்பாம் போல்டரையும் பார்க்கவும்)

03.     அந்த மின்னஞ்சலை திறந்து அதில் உள்ள சுட்டியை (Link) அழுத்தினால் உங்களுடைய சந்தாவை உறுதிபடுத்த முடியும் (அல்லது) <Reply Button> பொத்தானை கிளிக் செய்து <Send Button> பொத்தானை கிளிக் செய்தாலும் போதுமானது.

இணையம் வழியாக இணைவது:

01.    கீழ்க்கண்ட இணையதளத்தை திறந்து அதில் மின்னஞ்சல் முகவரி (E-mail Address) என்று உள்ள இடத்தில் உங்களுடைய (E-mail id ) மின்னஞ்சல் முகவரியை கொடுத்து ஜோஇன் என்ற கிளிக் செய்யவும்.

a.    http://gulftamilnanbarkal.blogspot.com/2010/03/blog-post_18.html

b.      http://gulftamilnanbarkal.yolasite.com

c.    http://groups.yahoo.com/group/gulf_tamilnanbarkal

04.      உங்களுக்கு உடனே உங்களுடைய சந்தாவை உறுதிபடுத்த வேண்டி Yahoogroupsல் இருந்து ஒரு மின்னஞ்சல் வரும் (சில நேரங்களில் இந்த மின்னஞ்சல் உங்களுடைய <Spam Folder> போல்டருக்கு சென்றுவிடும். அதனால் <Spam Folder> ஸ்பாம் போல்டரையும் பார்க்கவும்)

05.     அந்த மின்னஞ்சலை திறந்து அதில் உள்ள சுட்டியை (Link) அழுத்தினால் உங்களுடைய சந்தாவை உறுதிபடுத்த முடியும் (அல்லது) <Reply Button> பொத்தானை கிளிக் செய்து <Send Button> பொத்தானை கிளிக் செய்தாலும் போதுமானது.

மேலும் சந்தேகம் உள்ள நண்பர்கள் gulf_tamilnanbarkal@yahoo.com / gulf.tamilnanbarkal@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

அன்புடன்

வளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள் மின்னஞ்சல் குழுமம் (Gulf Tamil Nanbarkal Mail Group)

Saturday, September 10, 2011

வளைகுடா வாழ் தமிழ் நண்பர்களின் மின்னணு நூலகம்

அன்பு நண்பருக்கு வணக்கம்,

 

Visit : http://www.box.com/gulftamilnanbarkal

 

நமது மின்னணு நூலகத்தில் தினம்தோறும் 400  முதல் 500 DOWNLOAD தரவிறக்கம் நடைபெறுகிறது. வரும் நாட்களில் இன்னும் அதிகமான புத்தகங்கள் UPLOAD செய்ய இருக்கிறோம். நாங்கள் முன்பு சொன்னது போல இந்த நூலகத்தில் எங்களிடம் உள்ள புத்தகங்களையும் மற்றும் இணையத்தில் இருந்து கிடைத்தவற்றை தான் பதிவேற்றம் செய்து உள்ளோம். நமது நண்பர்கள் அவர் அவர்களுக்கு தேவையான புத்தகங்களை கேட்டு மின்னஞ்சல் அனுப்புகின்றனர். நீங்கள் எங்களை தொடர்பு கொள்ளவது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது,  அதே நேரத்தில் எங்களால் மட்டும் உங்கள் அனைவருடைய தேவையும் பூர்த்தி செய்ய முடியும் என்று நாங்கள் நம்பவில்லை.

 

ஆனால் நாம் அனைவரும் இணைந்து செயல்பட்டால் நமது தேவைகளையும், நமது நண்பர்களுடைய தேவைகளை குறைந்தபட்சம் நிறைவேற்ற முடியும் என்று நம்புகிறோம். நாங்கள் இதற்க்கு முன்பு உங்களிடம் இருக்கும் புத்தகங்களை விருப்பம் இருப்பின் எங்களுக்கு அனுப்பிவையுங்கள் என்று கேட்டு இருந்தோம். ஒரு சில நண்பர்களை தவிர வேறு யாரும் அனுப்பவில்லை. எல்லோரிடமும் அவர் அவர் துறை மற்றும் வேலை தொடர்புடைய புத்தகங்கள் (PDF Format) சேமிப்பு இருக்கின்றது, அந்த புத்தங்கள் வளைகுடா நாடுகளில் பணிசெய்து வரும் வேறு ஒருவருக்கும் பயன்படலாம்.

 

அதனால் மீண்டும் உங்களிடம் ஒரு முறை வேண்டுகிறோம். உங்களிடம் உள்ள புத்தங்களை நீங்கள் விரும்பினால் நேரடியாக UPLOAD செய்யலாம் அல்லது எங்களுக்கு அனுப்பிவையுங்கள் நாங்கள் UPLOAD செய்கிறோம்.

 

எங்கள் முகவரி gulf.tamilnanbarkal@gmail.com

 

அன்புடன்

 GTN E-Library Team

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons