Google Plus LinkedIn Email

Friday, December 10, 2010

தினமலர் : செய்திகள் : துபாயில் கலையரங்கம் நிகழ்ச்சி










துபாய் : அமீரகத்தில் நவம்பர் 26 ம் தேதியன்று யு.ஏ.இ., தமிழ்ச் சங்கத்தின் சார்பில் கலையரங்கம் நிகழ்ச்சி வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. மாலை 7.30க்கு துவங்கிய நிகழ்வு நள்ளிரவு 12.30 வரை இடைவிடாத கேளிக்கையும், பொழுதுபோக்கும், உற்சாகமுமாய் நகர்ந்தது. நடனங்கள், இன்னிசைக் கச்சேரி, பலகுரல் நிகழ்ச்சிகள், கரகம் மற்றும் மேஜிக் ஷோ என பன்முகம் காட்டி பரவசப் படுத்தியது. சாந்தா கிருஷ்ணமூர்த்தி, ஷெரின், மீனா வெங்கட், நூரூதின் மற்றும் இந்திரா மோகன் தாஸ் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்வை தொடங்கி வைத்தனர். கீதா சுவாமிநாதனின் தொடக்கவுரையை தொடர்ந்து சித்ரா பிராஸ்பரின் வரவேற்புரை இடம்பெற்றது.

இந்திய சின்னத்திரை கலைஞர்களும், நடனக் குழுவினரின் நடனங்களுக்கும் இடையில், யு.ஏ.இ., தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர்களின் குழந்தைகள் என நடனங்கள் அற்புதமாக அரங்கேறின. ஸ்ரீ கங்கா ரமேஷ் இந்த நடனங்களை திறம்பட அமைத்திருந்தார். இந்த கலைநிகழ்ச்சியில் 2 முதல் 18 வயது வரையிலான மொத்தம் 54 குழந்தைகள் பங்கேற்று தங்களின் திறமைகளை வெளிக்காட்டினர். முதன்முறையாக, திரையிசையின் மலரும் நினைவுகளாக, நம் நேற்றைய திரை இசைப்பாடல்களுக்கு கங்கா,சித்ராவின் உதவியுடன் அமைத்திருந்த நடனங்கள் நேர்த்தியாய் பார்வைக்கு விருந்தாயின. தமிழகத்தில் இருந்து அமீரகம் வந்த கலைச்செல்வன் டிங்கு மற்றும் குழுவினர், சங்க உறுப்பினர்களின் திறமைகளை பார்த்து அதிசயித்து வாழ்த்துக்களும் தெரிவித்தனர். நிகழ்வில் அணி சேர்க்க, ஒரு அதிரடி விளையாட்டும் இருந்தது. தம்பதியினருக்கும், இளைஞர்களுக்குமென இரு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசாக டிவிடி ப்ளேயர் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக வழங்கப்பட்டது. தமிழ்ச் சங்கத் தலைவரின் நன்றியுரையடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுபெற்றது.

\ தினமலர் வாசகர் ரமேஷ் விஸ்வநாதன்

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons