Google Plus LinkedIn Email

Thursday, October 20, 2011

வாங்க வந்து கலக்குங்க எமது யாஹூ குழுமத்தில் (Mail to gulf_tamilnanbarkal-subscribe@yahoogroups.com)

வாங்க வந்து கலக்குங்க எமது யாஹூ குழுமத்தில் (Mail to gulf_tamilnanbarkal-subscribe@yahoogroups.com)

Tuesday, October 18, 2011

நண்பர் திரு. கந்தநாதன் அவர்களின் கவிதை

வளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள் அமைப்பிலே

வளைய வளைய வரும் செய்திகள் சுவையிலே

 

எளிதாய் பல விஷயங்கள் ஏறுதே என் மனத்திலே

களிப்பாய் நாளும் அது கற்கண்டு நடை போடுதே!

 

விழிப்பைத் தரும் விஷயங்களும் பல இதிலுண்டு!

வியப்பைத் தரும் பல செய்திகளும் இதிலடக்கம்!

 

மொழியைச் செப்பனிடும் முயற்சியும் இதிலுண்டு!

முகத்தில் புன்சிரிப்பைத் தரும் கவர்ச்சியும் உண்டு!

 

நாட்டு நடப்புகளைப் பெட்டிக்குள் தரும் பொக்கிஷம்

வீட்டுப் பயன்களை விந்தையாக்கும் விசித்திரம்!

 

மேடுபள்ளம் இதிலில்லை! பாலைநிலத்து முல்லை!

வீட்டு நினைவுகூட இதனால் சமயத்தில் வருவதில்லை!

 

தமிழனென்ற உணர்வும் தமிழ்மொழியின் சிறப்பும்

அமிழ்தமெனப் பொங்க அரபு நிலத்தில் நிலைக்க

 

இமியளவும் சுவையது குறையாமல் தொடர

புவியிதனில் பல்லோரும் மகிழ வாழ்த்துக்கள்!

 

நன்றி : திரு. கந்தநாதன்

Thursday, October 6, 2011

அக். 8ல் துபாயில் வாழ்வின் வெற்றிக்கான திறவுகோல் குறித்த சிறப்புக் கருத்தரங்கம்

 

துபாய்: துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் 'வாழ்வின் வெற்றிக்கான திறவுகோல்' எனும் சிறப்புக் கருத்தரங்கினை 08.10.2011 சனிக்கிழமை மாலை ஏழு மணிக்கு அல் முத்தீனா துபாய் இந்தியன் இஸ்லாமிக் செண்டர் அரங்கில் நடத்த இருக்கிறது என நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் ஜாபர் சித்திக் தெரிவித்தார்.

 

இக்கருத்தரஙகை குளோபல் சக்ஸஸ் சிஸ்டம்ஸ் இயக்குநரும், முதன்மை ஆலோசகருமான ஸ்ரீசித் ராதாகிருஷ்ணன் நடத்துகிறார்.

 

இக்கருத்தரங்கிற்கு சங்கத் தலைவர் சையது முஹம்மது சாதிக் தலைமை வகிக்கிறார்.

 

கருத்தரங்கில் முன்னாள் மாணவர்கள் மட்டுமன்றி அனைவரும் பங்கேற்கலாம். முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே நிகழ்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.

 

முன்பதிவு செய்திட 050-5489609/050-5356650 ஆகிய அலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Sunday, October 2, 2011

துபாயில் 2 ஆம் உலகத் தமிழர் பொருளாதார மாநாடு


துபாயில் 2 ஆம் உலகத் தமிழர் பொருளாதார மாநாடு

துபாய் உலக வர்த்தக மையத்தில் இரண்டாம் உலகத் தமிழர் பொருளாதார மாநாடு 1 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை வெகு சிறப்புற நடைபெற்று வருகிறது.

இன்று 02.10.2011 அன்று காலை நடைபெற்ற துவக்க விழாவில் மாண்புமிகு மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி அவர்கள் மாநாட்டினைத் துவக்கி வைத்து விழாப் பேருரை நிகழ்த்தினார்.விழாவில் மலேசியாவின் முன்னாள் அமைச்சர் டத்தோ சாமிவேலு, இந்திய தூதர் எம்.கே. லோகேஷ், இந்திய கன்சல் ஜெனரல் வேணு ராஜாமணி, ஈடிஏ அஸ்கான் மேலாண்மை இயக்குநர் சையத் எம். ஸலாஹுத்தீன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம். அப்துல் ரஹ்மான் ( வேலூர் ), அழகிரி ( கடலூர் ), ராஜ்யசபா உறுப்பினர் ஜின்னா, மலேசிய துணைத் தூதர் சம்சுதீன்,தோஹா வங்கி தலைமை நிர்வாக அதிகாரி சீத்தாரமன், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர். இலட்சுமணன், இந்தியா கிளப் சேர்மன் சித்தார்த் பாலச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து பல்வேறு கருத்தரங்குகள் நடைபெற்றன.இந்தியா, மலேஷியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் இருந்து பிரமுகர்கள் பங்கேற்றுள்ளனர்.அமீரக வாழ் தமிழர்கள் இம்மாநாட்டில் பங்கேற்றுச் சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இம்மாநாட்டில் கலந்து கொள்ள விரும்புவோருக்கு ஈமான் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.மாநாட்டில் பங்கேற்க பங்கேற்க விரும்புவோர் 050 51 96 433 / 050 467 4399 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு இலவச அனுமதிச் சீட்டுகளைப் பெறலாம்.

துபாய் தமிழ்ச் சங்கத்தில் காந்தி ஜெயந்தி விழா





துபாய் : துபாய் தமிழ்ச் சங்கம் சார்பில் செப்டம்பர் 30ம் தேதியன்று ஷார்ஜா ரயான் சர்வதேசப் பள்ளியில் காந்தி ஜெயந்தி மற்றும் பாரதியார் விழா சிறப்புற நடத்தப்பட்டது. துவக்கமாக அமீரக தேசிய கீதம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. சிரியா மற்றும் விபீஷ் ஆகியோர் திருக்குறளை வாசித்து அதன் பொருளை விவரித்தனர்.

காந்தியடிகள் குறித்து சுப்ரஜாவும், பாரதியார் குறித்து வசந்த்தும் சிற்றுரை வழங்கினர். பொதுச்செயலாளர் சி. ஜெகந்நாதன் வரவேற்புரை நிகழ்த்தினார். வரவேற்பு நடனத்தை இளவரசனின் மகள் வழங்கினார். சந்திரா குழுவினரின் கூட்டுப் பிரார்த்தனை இடம் பெற்றது. அதனைத் தொடந்து நடன ஆசிரியை கவிதா பிரசன்னாவின் வடிவமைப்பில் சிறுவர் நடனம், பாடல் நிகழ்ச்சி, வினாடி வினா, புதிய உறுப்பினர் அறிமுகம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.


நவம்பர் 4ம் தேதி துபாய் தமிழ்ச் சங்கத்தின் பத்தாம் ஆண்டு விழாவினையொட்டி நடத்தும் பிரமாண்ட நிகழ்வில் லியோனி பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற இருப்பதை பொழுதுபோக்குத் துறை செயலாளர் ஏ.முஹம்மது தாஹா தெரிவித்தார். மேலும் சிறப்பு மலரில் உறுப்பினர்களது படைப்புகளும் வரவேற்கப்படுகின்றன.

பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் புதிய உறுப்பினர்கள் இளவரசன், டாக்டர் இளங்கோ உள்ளிட்டவர்களுக்கு பூங்கொத்துகளை வழங்கி கௌரவித்தார், துபாய் தமிழ்ச் சங்க தலைவி ஜெயந்தி மாலா சுரேஷ். கமிட்டி உறுப்பினர் விஜயேந்திரனின் நன்றியுரை மற்றும் தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. நிகழ்வினை மீரா கிரிவாசன் தொகுத்து வழங்கினார்.
- நமது செய்தியாளர் முதுவை ஹிதாயத்

NANDRI WWW.DINAMALAR.COM

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons