Google Plus LinkedIn Email

Monday, June 27, 2011

துபாயில் மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சி

துபாய்: துபாய் இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் (ஈமான்) மற்றும் திருச்சி வெல்கேர் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் ஆகியவை இணைந்து ஜூன் 12ம் தேதியன்று மாலை மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சியினை ரிக்கா லேண்ட்மார்க் ஹோட்டலில் வெகு சிறப்புற நடத்தின. மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ.லியாக்கத் அலி தலைமை தாங்கினார். ஏ.முஹம்மது தாஹா இறைவசனங்களை ஓதினார்.அஜ்மான் ஆரிஃபா குழும தலைவர் சுல்தானுல் ஆரிஃபின் முன்னிலை வகித்தார். ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத் வரவேற்புரை நிகழ்த்தினார். வெல்கேர் மருத்துவமனை குறித்த அறிமுகவுரையினை திருச்சி முஹம்மது கௌஸ் காஜா முஹைதீன் நிகழ்த்தினார்.

 

திருச்சி வெல்கேர் மருத்துவமனை மகப்பேறு சிறப்பு மருத்துவர் டாக்டர் லோகநாயகிக்கு துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் மலர்க்கொத்து வழங்கி பொதுச்செயலாளர் லியாக்கத் அலி கௌரவித்தார்.அதனைத் தொடர்ந்து குழந்தையின் முக்கியத்துவம், குழந்தை பிறப்பு குறித்த விவரங்களையும், டெஸ்ட்யூப் பேபி என்பது என்ன? என்பன உள்ளிட்ட பல்வேறு தகவல்களை விவரித்தார். கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி ஓய்வு பெற்ற தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் முஹம்மது ஹுசைன் அமீரகத்தில் மருத்துவ சேவை மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளது குறித்து பெருமிதம் கொண்டார். மேலும் அமீரகத்தில் தமிழ் உணர்வு மிக்கவர்களை சந்திப்பதில் மகிழ்வடைவதாகக் குறிப்பிட்டார். துபாய் தமிழ்ச் சங்க தலைவி ஜெயந்தி மாலா சுரேஷ், துபாய் தமிழ்ப் பெண்கள் சங்க தலைவி மீனாகுமாரி பத்மநாபன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். கீழக்கரை ஹமீதுர் ரஹ்மான் நன்றியுரை நிகழ்த்தினார். டாக்டர் பர்வீன் பானு,டாக்டர் முஹம்மது நிஸார் உள்ளிட்ட பலர் நிகழ்வில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

 

 நமது செய்தியாளர் முதுவை ஹிதாயத்

 

Nandri www.dinamalar.com

 

துபாயில் த‌மிழ்ச்ச‌ங்க‌ ச‌ந்திப்பு நிக‌ழ்ச்சி

துபாய் : துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌த்தின் சார்பில் உறுப்பின‌ர்க‌ள் மாதாந்திர‌ ச‌ந்திப்பு நிக‌ழ்ச்சி ஜூன் 24ம் தேதியன்று மாலை ஷார்ஜா ரயான் ஸ்டார் ச‌ர்வ‌தேச‌ப் ப‌ள்ளியில் ந‌டைபெற்ற‌து. நிக‌ழ்ச்சிக்கு துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌ த‌லைவி ஜெய‌ந்தி மாலா சுரேஷ் த‌லைமை தாங்கினார். நிறுவ‌ன‌ப் புர‌வ‌ல‌ர் ஏ.லியாக்க‌த் அலி முன்னிலை வ‌கித்தார்.

 

பொதுச்செய‌லாள‌ர் சி.ஜெக‌ந்நாத‌ன் வ‌ர‌வேற்புரை நிக‌ழ்த்தினார். கும்ப‌கோண‌ம் அர‌சு க‌லைக்க‌ல்லூரியின் ஓய்வு பெற்ற‌ த‌மிழ்த்துறைத் த‌லைவ‌ர் முனைவ‌ர் பேராசிரிய‌ர் மு.அ. முஹ‌ம்ம‌து உசேன் சிற‌ப்புச் சொற்பொழிவு நிக‌ழ்த்தினார். அவ‌ர் த‌ன‌து உரையில் பாலைவ‌ன‌த்தில் ஒரு சோலையாக‌ த‌மிழ் ம‌க்க‌ள் அனைவ‌ரும் ஒருங்கிணைந்து ந‌ட‌த்தி வ‌ரும் இவ்விழாவில் ப‌ங்கேற்ப‌தில் பெருமித‌ம் கொள்வ‌தாக‌ தெரிவித்தார்.

 

மேலும் குழ‌ந்தைக‌ள் முத‌ல் அனைவ‌ரும் த‌மிழ் மொழியில் மிகுந்த‌ ஆர்வ‌முட‌ன் திக‌ழ்வ‌தைப் பாராட்டினார். பெற்றோர்க‌ள் த‌ங்க‌ள் குழந்தைக‌ளுக்கு க‌ட்டாய‌ம் த‌மிழ் க‌ற்றுக் கொடுக்க‌ வேண்டிய‌த‌ன் அவ‌சிய‌த்தையும் வ‌லியுறுத்தினார்.குற‌ள் சொல்லும் நேர‌ம், நாட்டிய‌ ந‌ட‌ன‌ம், வினாடி வினா, ந‌கைச்சுவை நேர‌ம் உள்ளிட்ட‌ ப‌ல்வேறு நிக‌ழ்வுக‌ள் ந‌டைபெற்ற‌ன‌. விருதை செய்ய‌து ஹுசைன் க‌ல்வியின் அவ‌சிய‌ம் குறித்த‌ பாட‌ல் பாடினார். விழாவிற்கான‌ ஏற்பாடுக‌ளை த‌மிழ்ச் ச‌ங்க‌ நிர்வாகிக‌ள் செய்திருந்த‌ன‌ர். மீரா கிரிவாச‌ன் நிக‌ழ்வினை தொகுத்து வ‌ழ‌ங்கினார்.

 

 நமது செய்தியாளர் முதுவை ஹிதாயத்

 

Nandri www.dinamalar.com

 

Thursday, June 23, 2011

ஜித்தா தமிழ் மன்றத்தின் 'கலாச்சார விழா

>ஜித்தா : சவூதி அரேபியாவில் 'ஜித்தா தமிழ் மன்றம்' சார்பில் நடைப்பெற்ற கலை மற்றும் கலாச்சார விழாவில் 500க்கும் மேற்பட்ட தமிழர்கள் குடும்பத்துடன் கலந்துக் கொண்டனர். ஜூன் 16ம் தேதியன்று ஜித்தாவில் உள்ள இந்திய துணைத்தூதரக வளாகத்தில் ஜித்தா தமிழ் மன்றம் சார்பில் நடைப்பெற்ற கலாச்சார விழா 2011, தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கப்பட்டது. காசிம் ஷெரிப் வரவேற்புரையை தொடர்ந்து ஜெய்ஷங்கர், ஜித்தா தமிழ் மன்றத்தின் வளர்ச்சிப் பற்றி பேசினார். அதனைத்தொடர்ந்து அல்உரூத் மற்றும் இந்திய பன்னாட்டு பள்ளி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஹுசைனின் நடனங்களை அனைவரும் வெகுவாகப் பாராட்டினர். சிறுவர்களான ஷாஹின் மற்றும் ஷாஹிந்தா ஆகிய உடன்பிறப்புகள் நடத்திய பிரமாண்டமான 'மாஜிக் ஷோ' சிறுவர்களுக்கு ஒரு வரப்பிராசதமாகும். மாணவ மாணவியரின் தனி மற்றும் குழு நடனத்தில் அவர்களின் திறமை வெளிக்கொணரப்பட்டது, அதுபோல் அவர்களின் பாடல்களும் நிகழ்ச்சிக்கு வலு சேர்த்தன. <BR> <p><P>ஜூன் மாதம் 03ம் தேதி ஜித்தா தமிழ் மன்றம் நடத்திய சித்திரம் வரைதல் போட்டி, தமிழ் பேச்சுப்போட்டி, தமிழில் பேசு பரிசை வெல்லு போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, தமிழ் கருத்துப்பாடல்கள் போட்டி, 'சதுரங்கம்' மற்றும் 'கேரம்' விளையாட்டுப் போட்டிகளில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்துக்கொண்டனர். இதற்கு புவனேஸ்வரி ராஜகோபாலன், பூர்ணிமா மூர்த்தி, திருமதி.ஜெரால்டோ, முத்தப்பன், முனைவர். இலக்குவன் ஆகியோர் நீதிபதிகளாக செயல்பட்டு திறமைசாலிகளை தேர்ந்தெடுத்தனர். இந்த போட்டிகளில் வெற்றிப்பெற்றவர்களுக்கு கேடயங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. அதில் பரிசு வென்ற சில மாணவர்கள், மேடையில் அவர்களின் திறமையை வெளிப்படுத்தினர். அதில் 'கல்வி' என்ற தலைப்பில் ஹசீப்,'உழவன்'என்ற தலைப்பில் அனீஸ் தமீனா,'நான் முதல்வரானால்'என்ற தலைப்பில் ஜீவானந்தன் ஆகிய மாணவர்கள் தமது தனி திறமைகளை வெளிப்படுத்தி வந்திருந்தவர்களை கவர்ந்தனர்.

 

ஜித்தாவில் பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் முதலிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு அவர்களை அங்கீகரிக்கும் பொருட்டு ஜித்தா தமிழ் மன்றத்தின் சார்பில் கேடயங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. சிறப்பு பேச்சாளரான ஜித்தா மன்னர் அப்துல் அஜீஸ் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை முதுநிலை விரிவுரையாளர், (நியூசிலாந்து முத்தமிழ் சங்கத்தைச் சேர்ந்த) முனைவர். இலக்குவன், ' மாணவர்களின் பங்கும் பெற்றோர்களின் கடமையும்'என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். அப்பொழுது மாணவச் செல்வங்களை எப்படி நன்முறையில் வழி நடத்திச் செல்லவேண்டும் என்று பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்கினார். அதனைத்தொடர்ந்து, கன்சுளார் (சமூக நலம்) மூர்த்தி, ஜித்தா தமிழ் மன்றத்தின் வெப்சைட்டை துவங்கி வைத்து போட்டிகளில் வென்ற மாணவ,மாணவியருக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்பொழுது நம் இந்திய துணைத் தூதரகம் செய்து வரும் சேவைகளைப் பட்டியலிட்டார். அதுபோல் நம் இந்தியர்களின் நலத்தில் ஜித்தா தமிழ் மன்றத்தின் பங்கு பற்றியும் பேசி, ஜித்தா தமிழ் சங்கம் செய்து வரும் நலத்திட்ட உதவிகளுக்கு நன்றி கூறினார்.

 

ஆசிரியை புவனேஸ்வரி ராஜகோபாலன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, இறுதியில் அப்துல் பத்தாஹ் நன்றியுரை கூறினார். ஜெத்தாவில் உள்ள பல்வேறு சமூகத்தினரும், பல்வேறு சங்க நிர்வாகிகளும், அல்உரூத் பன்னாட்டு பள்ளி முதல்வர் ரஹ்மத்துல்லாஹ் மற்றும் ஜித்தா துணைத் தூதரக அனைத்து அலுவலர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். வந்திருந்த அனைவர்களுக்கும் விழாக் குழுவினர்களால் அறுசுவை உணவு பரிமாறப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள், நூற்றுக்கணக்கான பெண்கள் மற்றும் ஏராளமான குழந்தைகள் கலந்துக்கொண்டனர். <BR> <p><P><STRONG><EM>- தினமலர் வாசகர் மு.இ.முஹம்மது இபுறாஹீம் மரைக்கார்

 

NANDRI WWW.DINAMALAR.COM/NRI

 

Thursday, June 16, 2011

துபாயில் நடிகை மனோரமாவிற்கு விருது

துபாய் : துபாயில் வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பு மற்றும் தமிழ்த்தேர் மாத இதழின் 5ம் ஆண்டுவிழா மே 27ம் தேதியன்று மாலை துபாய் மகளிர் உயர் தொழில்நுட்பக் கல்லூரியில் வெற்றிகரமாக நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தமிழகத்திலிருந்து பழ.நெடுமாறனும், தமிழ் திரைப்பட நடிகை மனோரமாவும் பங்கேற்றார்கள். ஆனிஷாவின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய விழாவில், வானலை வளர்தமிழ் அமைப்பின் தலைவர் கோவிந்தராஜ் வரவேற்புரை நிகழ்த்த, செயலாளர் சிம்மபாரதியின் ஆண்டறிக்கையுடன், விழாவில் நாட்டிய விருந்தளித்தார் நிவேதிதா குழுவினர். மன வளர்ச்சி குன்றிய கார்த்திக் வழங்கிய பாடல் சபையின் ஒட்டுமொத்தப் பாராட்டுக்களை அள்ளியது. ஸ்ரீவித்யா வழங்கிய நாத இன்பமும், தொலைக்காட்சிப் புகழ் மேகநாதனின் நகைச்சுவை விருந்தும், குழந்தைகளின் விருப்பத்திற்கிணங்க வழங்கப்பட்ட மாயாஜாலக் காட்சிகளும் நிகழ்ச்சியை விறுவிறுப்பாக்கின.

 

தொடர்ந்து தமிழ்த்தேரின் 5ம் ஆண்டுமலர், சிறப்பு விருந்தினர்களால் வெளியிடப்பட, விழாவின் சிறப்புக்கட்டமாக ஆச்சி மனோரமாவிற்கு வானலை வளர்தமிழ் தமிழ்த்தேர் சார்பில் முத்தமிழ்க் காவியம் என்கிற பட்டம் பழ.நெடுமாறனால் வழங்கப்பட்டது. விழாவில் பஸ்லின், குத்தாலம் அஸ்ரப் மற்றும் அஜ்மான் மூர்த்தியின் சிற்றுரையைத் தொடர்ந்து சிறப்புரையாற்றிய பழ.நெடுமாறன்,தமிழின் மேன்மை பற்றியும், தமிழரின் கடமை பற்றியும் விரிவாய் எடுத்துரைத்தார். திருவள்ளுவன் தந்த திருக்குறளில் எந்த இடத்திலும் தமிழ் என்கிற வார்த்தையைப் பயன்படுத்தவில்லை. காரணம், திருக்குறள் உலகம் முழுமைக்கும்,உலகில் வாழும் அனைவருக்கும் பொதுமறை என்பதனால் என்று அவர்தந்த புதிய விளக்கம் பாராட்டைப் பெற்றது. ஆச்சி மனோரமாவின் சிறப்புரை பல்சுவை நிறைந்ததாய் அமைந்திருந்தது. பொதுமக்களின் எதிர்பார்ப்பிற்கிணங்க அவர் பாடிய பல திரைப்பாடல்களை பாடி பரவசப்படுத்தினார். மேலும் தமிழ் மொழி பற்றி அவர் பாடிய ஒரு பாடல் தமிழ்த்தேருக்கு அலங்காரம் செய்ததுபோலிருந்தது. தனக்கு வழங்கப்பட்ட முத்தமிழ்க்காவியம் என்கிற பட்டத்திற்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

 

சிறப்பு விருந்தினர் பற்றிய நர்கிஸ் ஜியாவுதீனின் கவிதை, கவிஞர்.சந்திரசேகரால் எழுதப்பட்ட நிவேதிதா ஆனந்தனின் மனோரமா பற்றிய பாடல் உட்பட, வானலை வளர்தமிழ் அங்கத்தினரால் நடிக்கப்பட்டு முழுக்க முழுக்க அதன் அங்கத்தினராலேயே தயாரிக்கப்பட்ட "தமிழ்த்தேரே" என்னும் காணொளி காண்போரை கவர்ந்திழுத்தது. விழாவில் துணைச் செயலாளர் முகவை முகிலின் "ஈச்சமர நிழலில்" கவிதைத் தொகுப்பு, ஒரு கவிதை காணொளியுடன் வெளியிடப்பட்டது. விழாவை தமிழ்த்தேரின் ஆசிரியர் கவிஞர் காவிரிமைந்தன், நிவேதிதா ஆனந்தனுடன் இணைந்து தொகுத்து வழங்க, இறுதியாக தமிழ்த்தேரின் பொறுப்பாசிரியர் ஜியாவுதீன் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவுற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை, கோவிந்தராஜன், சிம்மபாரதி, கீழைராஸா, ஆனந்தன் மற்றும் காவிரிமைந்தன், ஜியாவுதீன், லட்சுமி நாராயணன், முகவை முகில், ஆதிபழனி, அபுதாபி டி.எம்.பழனி, துரை மலைவேல் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

 

நமது செய்தியாளர் முதுவை ஹிதாயத்

 

Nandri : www.dinamalar.com

 

Dates from UAE

 

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons