Google Plus LinkedIn Email
Showing posts with label Saudi Arabia. Show all posts
Showing posts with label Saudi Arabia. Show all posts

Thursday, February 3, 2011

ரியாத் வளைகுடாச் செந்தமிழ்ச் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட பொங்கல் விழா


ரியாத் : ரியாத் வளைகுடாச் செந்தமிழ்ச் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட பொங்கல் விழா ஜனவரி 27ம் தேதியன்று மிகச் சிறப்பாக நடந்தேறியது. ஆண்களுக்காக உறியடித்தல், தொடர் ஓட்டம், ரொட்டி உண்ணுதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளும், பெண்களுக்காக கோலப்போட்டி, மாலை வடிவமைத்தல் மற்றும் குழந்தைகளுக்காக குறுஞ்செய்தி அனுப்புதல், ஊசியில் நூல் கோர்த்தல், பந்துகள் எடுத்தல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றன. தமிழ் அறிவுத்திறன் போட்டிகளும் நடைபெற்றன. காலை உணவு மற்றும் மதிய உணவின் போது பாரம்பரிய முறைப்படி பொங்கல் வழங்கப்பட்டது. மாலையில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய விழா கரகாட்டம், பாம்பாட்டம், தப்பாட்டம், நாட்டுப்புறப் பாடல்கள் என்று தொடர்ந்தது. நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவடைந்தது.ரியாத் வாழ் குடும்பத்தினர் மற்றும் தனி நபர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தினமலர் வாசகர் இ.அழகப்பன்

Thursday, September 9, 2010

Eid Mubarak





Thursday, April 8, 2010

பைந்தமிழ்ப் பாவாணர் விழா

சவூதி அரேபியா ரியாத்தில், மார்ச் மாதம் 26 ஆம் நாள் 'வளைகுடா செந்தமிழ்ச் சங்கம்' நிகழ்த்திய பைந்தமிழ்ப் பாவாணர் விழா சிறப்பாய் நடந்தேறியது. குடும்பத்துடன் வசிக்காத, கடினமாய் உழைத்து வாழும் தனியர்களுக்கென பிரத்தியேகமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இவ்விழா.

கழியொன்றின் உச்சிமீது நெற்றியை வைத்துச் சுற்றி வருதல், நொண்டியடித்தல், குறிபார்த்து அடித்தல், உப்பல் ஊதுதல் என்ற விளையாட்டுகளில் பலரும் ஆர்வமுடன் பங்கேற்றுப் பரிசுகள் பெற்றனர். ஆங்கில மொழி வார்த்தைகளைக்கு இணையான தமிழ் வார்த்தைகள் மட்டுமே பேசவேண்டும் என்ற விதிமுறையுடன் நடந்த 'தமிழ் பேசு' என்ற விளையாட்டும் பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தது.

பழமொழி வாக்கியத்தின் வார்த்தைகளைச் சரியான வரிசையில் அடுக்குதல் - இந்த விளையாட்டிலும் மிகுந்த ஆர்வத்துடன் பலரும் பங்கேற்றனர். 'சிரித்து வாழ வேண்டும்' என்ற தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடலில் பலரும் பங்கேற்றுப் பரிமாறிய கருத்துகள் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தன. 'மூன்று முட்டாள்கள்' என்ற நகைச்சுவை நாடகமும், ரியாத்வாழ் தமிழர்கள் நிலைகுறித்துக் கோடிட்டுக் காட்டிய 'தமிழா தமிழா' என்ற நாட்டிய நாடகமும் அரங்கேறின.

பாவாணர் அவர்களின் உற்ற நண்பரான புலவர் திரு. அரங்கராசர் பைந்தமிழ்ப் பாவாணர் குறித்த செய்திகளைத் தொகுத்துச் சிறப்புச் சொற்பொழிவாற்றினார்.

தனி நபர்களின் திறமையை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்து, அவர்களை ஊக்கப்படுத்தும் முகமாய் விளங்கிய 'தனித்திறன்' நிகழ்ச்சியில் பலரும் பங்கேற்றுப் பாடல் மற்றும் கவிதை பாடி அனைவரையும் மகிழ்வித்தனர்.
நமது உதவி' என்ற அமைப்பின்கீழ் செயல்பட்டு வரும் சமுதாய உதவிப்பணிகள் குழுவினர், மயிலாடுதுறையிலுள்ள 'கார்த்திகா ஆசிரமக்' குழந்தைகளுக்குத் துணிமணிகள் அனுப்பிவைத்தனர்.

இறுதியாய் 'நிலாச்சோறு' உண்டு இனிதாய் நிறைவேறிய இவ்விழா, விழாக்குழுவினரையும் சரி, பார்வையாளர்களையும் சரி, ஒருங்கே திருப்தியடைய வைத்தது.

இங்ஙனம்
விழாக்குழுவினர்

நன்றி நமது குழும உறுப்பினர் : கனகசபாபதி நவநீதன்

Thursday, March 4, 2010

முதல் பதிவு



அன்பு நண்பர்கள் அனைவருக்கும்,

வணக்கம்.

வளைகுடா நாடுகளில் வேலை செய்துவரும் நம் தமிழ் உறவுகளுக்குகிடையே செய்திகளை பரிமாறிக்கொள்ள ஒரு வலைபதிவையும் மற்றும் ஒரு மின்னஞ்சல் குழுமத்தையும் ஆரம்பிக்க வேண்டும் என்று ரொம்ப நாட்களாக நண்பர்களிடையே பேசி வந்தோம் அதன் வெளிபாடுதான் நமது இந்த வலைபதிவும்.

அன்புடன்
நண்பர்கள்

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons