
ஜெத்தா : இந்திய குடியரசு தின விழாவை முன்னிட்டு சவுதி அரேபியாவின் ஜெத்தா நகரில் அமைந்துள்ள ஜெத்தா தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த குழந்தைகளுக்கான நிகழ்ச்சி பிப்ரவரி 17ம் தேதியன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. திருக்குரானிலிருந்து இறை வசனத்துடன் தொடங்கி, திருக்குறளிலிருந்து குறட்பாக்கள் சொல்லப்பட்டு, சவுதி மற்றும் இந்திய தேசிய கீதங்களுடன் நிகழ்ச்சி களைகட்ட துவங்கியது. வரவேற்புரைக்குப் பின் கடைசி வரையிலும் குழந்தைகள் பங்கேற்ற அனைத்து நிகழ்ச்சிகளும் வந்திருந்த அனைவரையும் பிரமிக்க வைத்தது. இந்நிகழ்ச்சியில் இந்திய துணை தூதரக அதிகாரி மூர்த்தி, தமிழக ஹஜ் குழுமத்தின் துணை தலைவர் அபுபக்கர் மற்றும் மருத்துவர் கரிமுதீன் ஆகியோர் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். கரிமுதீன்...