ரியாத்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம் சார்பாக நடத்தப்பட்ட கட்டுரை போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி ரியாத் நகரிலுள்ள பத்தாவில் அன்று நடைபெற்றது. ரியாத் மண்டல தலைவர் நிஜாம் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் கடையநல்லூர் பஷீர் மவுலவி, ரியாத் மண்டல துணை தலைவர் பஷீர் மவுலவி, இலங்கையை சேர்ந்த ரில்வான் மவுலவி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
போட்டியில் முதல் பரிசு பெற்ற தம்மாமை சேர்ந்த அபு ரய்யானுக்கு மினி லேப்டாப், இரண்டாவது பரிசு பெற்ற அலாவுதீனுக்கு அரைபவுன் தங்க காசு, மூன்றாவது பரிசு பெற்ற ஜூல்ஃபியை சேர்ந்த சித்தீக்கிற்கு மொபைல் போன் பரிசாக வழங்கபப்ட்டது.
ஐந்து பேருக்கு ஆறுதல் பரிசாக புத்தகங்கள் வழங்கப்பட்டன. மண்டல இணை செயலாளர் அப்துல் ரஹ்மான் நவ்லக் நன்றி கூறினார்.
0 comments:
Post a Comment