ரியாத் : ரியாத் வளைகுடாச் செந்தமிழ்ச் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட பொங்கல் விழா ஜனவரி 27ம் தேதியன்று மிகச் சிறப்பாக நடந்தேறியது. ஆண்களுக்காக உறியடித்தல், தொடர் ஓட்டம், ரொட்டி உண்ணுதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளும், பெண்களுக்காக கோலப்போட்டி, மாலை வடிவமைத்தல் மற்றும் குழந்தைகளுக்காக குறுஞ்செய்தி அனுப்புதல், ஊசியில் நூல் கோர்த்தல், பந்துகள் எடுத்தல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றன. தமிழ் அறிவுத்திறன் போட்டிகளும் நடைபெற்றன. காலை உணவு மற்றும் மதிய உணவின் போது பாரம்பரிய முறைப்படி பொங்கல் வழங்கப்பட்டது. மாலையில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய விழா கரகாட்டம், பாம்பாட்டம், தப்பாட்டம், நாட்டுப்புறப் பாடல்கள் என்று தொடர்ந்தது. நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவடைந்தது.ரியாத் வாழ் குடும்பத்தினர் மற்றும் தனி நபர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தினமலர் வாசகர் இ.அழகப்பன்
0 comments:
Post a Comment