குவைத்: குவைத் காயிதே மில்லத் பேரவை சிறப்புக் கூட்டம் குவைத் மிர்காப் தஞ்சை ஹோட்டலில் சிராஜீல் மில்லத் அரங்கில் காயிதே மில்லத் பேரவை குவைத் சார்பாக புதிய நிர்வாகிகள், உறுப்பினர்கள்அடையாள அட்டை வழங்குதல், கலந்துரையாடல் நிகழ்வுகள் கூட்டம் நடைபெற்றது.
பேரவை தலைவர் முஹம்மது பந்தூர் ஆர்.எம்.முஹம்மது பாருக் தலைமை தாங்கினார். மார்க்கப் பிரிவு செயலாளர் வல்லம் நாசர் சாதிக் ரப்பானி கிராத் ஒதி தொடங்கி வைத்தார். திருமங்கலக்குடி அப்துற்ரஹிம் வரவேற்றார். பேரவை ஆலோசகர் கூத்தாநல்லுர் என்.ஏ.எம்.அப்துல் அலிம், டி.வி.எஸ்.அலாவுதின் ஆகியோர் பேசினர்.
முஸ்லிம் லீக் மாநில மாநாட்டு தீர்மானங்கள் மற்றும் மஹல்லா ஜமாத் மாநாட்டு தீர்மானங்களை இணைச்செயலாளர் சத்திரமனை ஹஸன் முஹம்மது வாசித்தார். பேரவையின் புதிய ஆலோசகர்கள் அறிமுகத்தை தொடர்ந்து, உறுப்பினர்கள் அடையாள அட்டையை பேரவையின் ஆலோசகர் மற்றும் தலைவர் வழங்கினர்.
இணைச் செயலாளர் ஹஸன் முஹம்மது நன்றி கூறினார். பேரவை பெருளாளர் காரைக்கால் எஸ்.எம்.ஆரீப் மரைக்காயர் கூட்ட நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினார். கூட்டம் மஜ்லிஸ் துவாவுடன் இனிதே நிறைவுற்றது
nandri www.dinamalar.com
0 comments:
Post a Comment