துபாய் : துபாய்க்கு பிப்ரவரி 09ம் தேதியன்று நண்பகல் வருகை புரிந்த மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளிப்புத்துறை அமைச்சர் நெப்போலியனுக்கு தமிழ் அமைப்புகளின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஈடிஏ அஸ்கான் மேலாளர் முஹம்மது மீரான், அமீரக காயிதேமில்லத் பேரவை ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத், அமீரகத் தமிழர்கள் அமைப்பின் தலைவர் அமுதரசன், வானலை வளர்தமிழ் அமைப்பின் செயலாளர் நரசிம்மராஜா, ஸ்பர்ஜன், நூருல்லாஹ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தனக்கு வரவேற்பளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார். தனிப்பட்ட பயணமாக குடும்பத்தினருடன் ஓரிரு நாட்கள் அமீரகத்தில் தங்கியிருப்பார்.
நமது செய்தியாளர் முதுவை ஹிதாயத்
0 comments:
Post a Comment