சார்ஜா: அமீரக மண்ணில் நம் மக்களுக்கு, அவர்தம் சோர்வு நீக்கி, உற்சாகமும் ஊக்கமும் தரும் நோக்கத்துடன் பல வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. முதன் முறையாக, இறகுப்பந்து போட்டி பல பிரிவுகளாக நடத்தப் பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தது தமிழ்ச்சங்கம். அன்றைய தினத்திலேயே, முக வண்ணம் பூசி, குழந்தைகளையும், பெரியவர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
ஆடவர் இரட்டை, பெண்கள் இரட்டை, கலப்பு இரட்டை என பகுக்கப்பட்டு, போட்டிகள் நடத்தி, பரிசு வழங்கப்பட்டது. முன்னதாக பயிற்சி போட்டிகள் நடை பெற்றன. மல்லிகார்ஜூன், கீதா, ஸ்ரீராம், காமாட்சி ஆகியோர் விளையாட்டை ஒருங்கிணைத்து நடத்தினர். இவர்களுக்கு துணையாக பிரபு, மாரீஸ்வரி பிரபு, பாலகிருஷ்ணன், சாகுல் அகமது, அண்டனி நிக்சன் செயலாற்றினர்.
முக வண்ணம் பூசும் நிகழ்வில் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கு பெற்று மகிழ்ந்தனர். ஷோபன், ஜமுனா ஷோபன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.குழந்தைகளுக்கென பாசிங் த டாய், கொல கொலயா முந்திரிக்கா, தொடர் ஓட்டம், வண்ணங்கள், வேடிக்கை இறகுப் பந்து, கொகோ என 2 வயது முதல் 15 வயது வரை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
15 வயதிற்கு மேற்பட்டோருக்கு, மிதவேக நடை, அடுத்தவனை அலேக்கா தூக்கு, குதியாட்டம், கொகோ என நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. பெண்களுக்கான 15 வயதிற்கு மேற் பட்டோருக்கு குப்பி நிரப்புதல், குவளை பாலன்சிங், பந்து எரிதல், பிஸ்கட் தின்னுதல் மற்றும் கொகோ என, ஸ்ரீரங்கா ரமேஷ், சித்ரா பிராஸ்பர் ஆகியோரால் நடத்தப்பட்டது. இவர்களுக்கு பத்மராஜ், அருண் குமார் துணையாக இருந்தனர். சவும்யா, கோகிலா, கீதா சுவாமிநாதன், விஜயா, காயத்ரி, அனிதா முத்து, நந்தகுமார், மகாதீர், கார்த்திகேயன், ஸ்ரீமான், ரவி, ராம்குமார் ஒருங்கிணைப்பில் துணையாக இருந்தனர்.
யுஏஇ யிலிருந்து லாரன்ஸ் பிரபு, ரமேஷ் விஸ்வநாதன்
0 comments:
Post a Comment