துபாய் : துபாயில் பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் அமீரகக் கிளை நடத்தும் இலக்கிய விழா மற்றும் பரிசளிப்பு விழா பிப்ரவரி 25ம் தேதியன்று மாலை ஆறு மணிக்கு அல் நாசர் சதுக்கத்தில் அமைந்துள்ள லேண்ட்மார்க் ஹோட்டலில் நடைபெற இருக்கிறது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கொழும்பு தமிழ்ச்சங்க துணைத்தலைவர் டாக்டர் ஜின்னாஹ் ஷரீபுத்தீன், சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழக பொதுச் செயலாளரும், இனிய திசைகள் மாத இதழ் ஆசிரியருமான முனைவர் சேமுமு முகமதலி, பாடலாசிரியர் மு.மேத்தா, இலங்கை எழுத்தாளர் கலாபூஷணம் மானா மக்கீன், இலங்கை இஸ்லாமியப் பாடகி நூர்ஜஹான் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கின்றனர். அனுமதி இலவசம். மேலும் விபரங்களுக்கு 055 – 976 00 94 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும்.
Nandri : www.dinamalar.com
0 comments:
Post a Comment