துபாய் : துபாயில் அமீரக நகைச்சுவை மன்றத்தின் இரண்டாம் ஆண்டு விழா பிப்ரவரி 21ம் தேதியன்று மாலை கராமா சென்டரில் நடைபெற்றது. ஜுனியர் எஸ்.பி.பி., என அழைக்கப்படும் ராபர்ட், பல குரல் நாயகன் ராஜாராம், மிமிக்ரி மாஸ்டர் படவா கோபி உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்கினர்.
அமீரக நகைச்சுவை மன்ற அங்கத்தினர்களின் வளமையான நகைச்சுவை துணுக்குகளும் இடம்பெற்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை அமீரக நகைச்சுவை மன்ற நிறுவனர் குணா, தலைவர் சுரேஷ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
நமது செய்தியாளர் முதுவை ஹிதாயத்
0 comments:
Post a Comment