துபாய்: துபாயில் பன்னாட்டு இஸ்லாமியக் கழகத்தின் இலக்கிய விழாவில் பங்கேற்க வருகை புரிந்த தமிழறிஞர்களுக்கு பிப்ரவரி 25ம் தேதியன்று அதிகாலை துபாய் சர்வதேச விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் பொதுச்செயலாளரும், இனிய திசைகள் மாத இதழின் ஆசிரியருமான முனைவர் சேமுமு.முஹமதலி, பாடலாசிரியர் மு.மேத்தா ஆகியோர் இலக்கிய விழாவில் பங்கேற்க வருகை புரிந்தனர்.
இவ்வரவேற்பு நிகழ்வில் பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் அமீரகக் கிளை நிர்வாகிகள் திருவிடச்சேரி எஸ்.எம்.ஃபாரூக், கிளியனூர் இஸ்மத், கீழை ராஜா, அதிரை ஷர்புதீன், இனிய திசைகள் அமீரகப் பிரதிநிதி முதுவை ஹிதாயத், திருச்சி சாதிக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நமது செய்தியாளர் முதுவை ஹிதாயத்
NANDRI : WWW.DINAMALAR.COM
0 comments:
Post a Comment