துபாய் : துபாயில் தமிழகத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி மாணவரான கார்த்திக்கின் பாடல் நிகழ்ச்சி பிப்ரவரி 19ம் தேதியன்று மாலை அஸ்டோரியா ஹோட்டலில் நடைபெற்றது. 14 வயது மனநலம் குன்றிய தமிழக மாணவர் கார்த்திக். இசையின் மூலம் பல இதயங்களை கவர்ந்து வருகிறார். கீ போர்டு வாசிக்கும் பயிற்சி பெற்றுள்ளார். சுமார் 2000 க்கும் மேற்பட்ட பாடல்களை மனனம் செய்து வைத்துள்ளார்.
இந்நிகழ்வில் இந்திய கன்சல் ஜெனரல் சஞ்சய் வர்மா தனது துணைவியாருடன் நிகழ்ச்சியின் இறுதி வரை இருந்து கார்த்திக்கின் திறனைக் கண்டு வியந்தார். இது போன்றவர்களை நாம் அனைவரும் உற்சாகப்படுத்தி ஆதரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். நிகழ்வினை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்த இந்திய சமூக நலக் கமிட்டியின் தலைவர் கே.குமாரையும் பாராட்டினார். இந்திய, பாகிஸ்தானியப் பாடல்கள், பாப், தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு பாடல்களைப் பாடி பார்வையாளர்களைக் கவர்ந்தார்.
இதுமட்டுமல்லாது சிறப்புக் குழந்தைகளுக்கான சமூக நல அமைப்பான சாதி, துபாய் கைராலி கலா மன்றம், பல்வேறு தமிழ் மற்றும் கேரள அமைப்புகள், 94.7 எஃப்.எம். உள்ளிட்டவற்றிலும் பாடல்களைப் பாடியுள்ளார். கார்த்திக்கின் பள்ளியிலிருந்து அமெரிக்காவைச் சேர்ந்த கலை நிறுவன விருதுக்காக பாடல் அனுப்பப்பட்டிருந்தது.
எனினும் அமெரிக்கா செல்ல இயலாத சூழலினால் அது கைகூடவில்லை. கார்த்திக்கின் சகோதரர் விக்னேசும், அவரது பெற்றோர்களும், பாட்டியும் பெரும் ஒத்துழைப்பு நல்கி வருகின்றனர்.
நமது செய்தியாளர் முதுவை ஹிதாயத்
Nandri : www.dinamalar.com – NRI NEWS
0 comments:
Post a Comment