அல் பார்ஷா: ஐக்கிய அரபு குடியரசில் அல் பார்ஷா நகரில் அல் நூர் பயிற்சி மையத்தில் 25ம் தேதி குழந்தைகள் திருவிழா நடைபெற உள்ளது. யுஏஇ தமிழ்ச் சங்க ஆதரவுடன் நடைபெறும் இதற்கான அனுமதி இலவசம். இதில் நீங்கள் விரும்பிய பொருட்களை எடுத்துக் கொண்டு நீங்கள் விரும்பிய தொகையைக் கொடுக்கலாம்.. மெகந்தி, முகச்சாயம் பூசப்படும்.
ஆனால் இதற்கான மெகந்தி மற்றும் முகச் சாயத்தை நீங்களே கொண்டு வர வேண்டும். அனைத்து தரப்பினரும் பங்கேற்க கூடிய விளையாட்டுகளும் இடம் பெறும். சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கான அல் நூர் மையம் கடந்த 20 ஆண்டாக செயல்படடு வருகிறது. இதன் வளர்ச்சிக்காக ஐக்கிய அரபு குடியரசு மற்றும் துபாய் ஆட்சியாளர்கள் பெரும் உதவி செய்துள்ளனர்.
ரமேஷ் விஸ்வநாதன்,
யுஏஇ தமிழ்ச் சங்கத் தலைவர்
0 comments:
Post a Comment