துபாய் : துபாய் தமிழ்ப் பெண்கள் சங்க குடும்ப அங்கத்தினர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஜனவரி 21ம் தேதியன்று ஜுமைரா கடற்கரை பூங்காவில் இவ்வருடத்தின் முதல் நிகழ்வாக நடைபெற்றது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என குடும்ப சகிதம் இந்நிகழ்வில் பங்கெடுத்தனர். இதமான தட்பவெப்பநிலையில் பெரியவர்களும் சிறுவர்கள் போன்ற தங்களது இளமைக்கால நிகழ்வுக்கே சென்று விட்டனர். கோ கோ, டக் ஆஃப் வார், கெட் த குரூப் எனப் பல்வேறு குழு விளையாட்டுக்கள் நடைபெற்றன. விலங்குகளைப் போன்று ஒலி எழுப்பி அதுபோன்றே நடந்து கொண்டு விளையாடியது அனைவரையும் கவர்ந்தது. டக் ஆஃப் வார் விளையாட்டின் போது கயிறு அறுந்தது அதிர்ச்சியடைய வைத்தது. அனைவருக்கு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒரு நாள் பொழுதை இன்ப மயமாகக் கழித்த பின்னர் மாலையில் அனைவரும் நீங்கா நினைவுடன் பிரியா விடைபெற்றனர். நிகழ்விற்கான ஏற்பாடுகளை தமிழ்ப் பெண்கள் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Thursday, February 3, 2011
துபாய் தமிழ்ப் பெண்கள் சங்க குடும்ப அங்கத்தினர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
10:17 AM
வளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்
No comments
தினமலர் வாசகி மீனாகுமாரி
0 comments:
Post a Comment