துபாய் : துபாய் தமிழ்ப் பெண்கள் சங்கத்தின் பிப்ரவரி மாத நிகழ்ச்சி இந்தியா கிளப் தர்பார் ஹாலில் பிப்ரவரி 18ம் தேதியன்று மாலை நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்தினை அனுகிரஹா வேணுகோபால் பாட, துபாய் தமிழ்ப் பெண்கள் சங்க தலைவி மீனாகுமாரி பத்மநாதன் வரவேற்புரை வழங்கினார். இந்திய குடியரசு தினத்தை நினைவு கூறும் விதமாக ஸ்வேதா கிருஷ்ணன் வடிவமைத்த சின்னப்பெண்களின் வண்ணமிகு நடனம் தேசப்பற்றை ஊட்டுவதாக அமைந்திருந்தது.
ரத்திக் துராசத், ரொபினா துராசத் ஆகியோர் குறள் சொல்லும் நேரத்தில் திருக்குறளைக் கூறி அதன் விளக்கத்தை அளித்தனர். சங்கர் நாராயணன், சொத்து பாதுகாப்பு குறித்த விளக்கவுரை நிகழ்த்தினார். சுஜாதா விஸ்வநாத் வடிவமைத்த நகைச்சுவை குறு நாடகம், ஸ்ரீரங்க நாச்சியார் அசோக்குமார் மற்றும் இந்து பத்மநாதன் ஆகியோர் வடிவமைத்த நடன நிகழ்ச்சி, ஸ்ரீராமின் பிம்பங்கள் கவிதை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மீனாகுமாரி பத்மநாதன் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். உஷா கிருஷ்ணன் நன்றியுரை நிகழ்த்தினார்.
நமது செய்தியாளர் முதுவை ஹிதாயத்
0 comments:
Post a Comment