துபாய்: துபாய் வானலை வளர்தமிழ் அமைப்பின் மாத இதழான 'தமிழ்த்தேர்' துவங்கி பிரதியெடுத்து வெளியிடப்பட்டு வந்த 4 ஆண்டுகளுக்குப் பிறகு, முதன்முறையாக அச்சில் வெளிவரும் நிகழ்வு விழாவாக துபாய் கனடியன் பல்கலைக்கழக அரங்கில் நடத்தப்பட்டது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக முஸ்தஃபா, குவைத் தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் தலைவர் பாலா என்கிற பாலசுப்ரமணியன் கலந்துகொண்டனர்.
ஆனிஷா பானுவின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய விழாவை கீழை ராஸா பாரதியின் பாடலோடு தொகுத்து வழங்கினார். நிவேதிதாவின் வரவேற்பு நடனம், துபாய் நகைச்சுவை மன்றத்தைச் சேர்ந்த ரமணி, நெல்லை நகைச்சுவைத் துணுக்குகள், ஸ்ரீவித்யா கிருஷ்ணகுமார் கீபோர்டு ஆகியவை இடம் பெற்றன. இதனைத் தொடர்ந்து வானலை வளர்தமிழ் மற்றும் தமிழ்த்தேரின் 4 ஆண்டுகாலம் கடந்து வந்த பாதை காணொளியாக திரையில் வெளியிடப்பட்டது. அடுத்து வானலைவளர்தமிழ் அமைப்பின் தலைவர் கோவிந்தராஜ், அஜ்மான் அமீரகத் தமிழர் அமைப்பின் தலைவர் டாக்டர் மூர்த்தி ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். வானலை வளர்தமிழ் ஆலோசகர் காவிரிமைந்தன் வரவேற்றார். மூர்த்தி வாழ்த்துரை வழங்கினார். அமைப்பின் தலைவர் கோவிந்தராஜ் தலைமையுரை நிகழ்த்தி, தமிழ்த்தேரின் முதல் அச்சுப்பிரதியை வெளியிட, முஸ்தஃபா பெற்றுக் கொண்டார்.
தமிழ்த்துளி' அமைப்பின் நிறுவனர் ப்ரியா, குழந்தைகளுக்கு தமிழ்க்கல்வி போதிப்பதின் அவசியம் பற்றி உரையாற்றினார். ஈடிஏ அஸ்கான் நிர்வாக இயக்குநர் அலுவலக மேளாலர் மீரான் இப்பணிக்கான உதவிகளை செய்வதாக உறுதியளித்தார்.<br>வானலை வளர்தமிழின் உறுப்பினர் அதிரை இளையசாகுலின் முதல் கவிதைத் தொகுப்பு (அவளுக்கும் உண்டு உணர்வுகள்) வெளியிடப்பட்டது. நிறைவாக தந்திரக் கலைஞர் வைக்கோம் ஷாவின் தந்திரக் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. துணைத்தலைவர் ஜியாவுத்தீன் நன்றி கூறினார்.
விழா ஏற்பாடுகளை கீழை ராஸா, சிம்மபாரதி, லஷ்மி நாராயணன், முகவை முகில், ஆனந்தன், ஆதி பழனி, தண்டலம் பழனி ஆகியோர் செய்திருந்தனர்
நமது செய்தியாளர்
முதுவை ஹிதாயத்
0 comments:
Post a Comment